தமிழ் சினிமா

பிரியாணி – விமர்சனம்

பிரியாணி – விமர்சனம்


பிரியாணி என்றாலே எல்லோரையும் கவர்ந்து சுண்டி இழுத்து நமது வாயில் ஜிராவை கசிய விடும் தன்மை கொண்டது என்பது அறிந்து விஷயம். இதுபோல் பல மாதிரியான பிரியாணியை பார்த்து ரசித்து ருசித்த நமக்கு வெங்கட்பிரபுவின் கைவண்ணத்தில் தயாரான பிரியாணி ஒரு கட்டு கட்டும் வகையில் அமைந்து இருக்கிறது .
கட்டி முடிக்காத பாலத்தில் இருந்து படு வேகமாக காரில் ஹய் ஜம்ப்பில் அந்தரத்தில் கார் பறக்கும் போது பிரேம்ஜியின் வழியில் தான் கதை ஆரம்பமாகிறது. தோழன் உயிர் காப்பான் ஆனால் பிரேம்ஜியின் தோழனான கார்த்தி என் உயிர் மட்டுமே எடுப்பான் என ஏக பில்டப்போடு ஃப்ளாஷ்பேக் சொல்ல துவங்குகிறார் பிரேம்ஜி , கார்த்தியும் பிரேம்ஜி இருவருமே சின்ன வயதிலிருந்தே நண்பர் பிரேம்ஜி கரெக்ட் செய்ய நினைக்கும் பெண்களையெல்லாம் கார்த்தி கரெக்ட் செய்துவிட அவ நல்ல பொண்ணு இல்ல மச்சி என்று பிரேம்ஜியை சமாதான வார்த்தை சொல்லி எஸ்கேப் ஆகி ப்ளேபாய் கேரக்டரில் எல்லா பெண்களையும் சொல்லி அடிக்கிறார் கார்த்தி. எல்லாவற்றையும் சகித்து கொண்டு நட்பின் இலக்கணமாக கடைசி வரை கூடவே வருகிறார் பிரேம்ஜி.
வழக்கம் போல் குடி,கும்மாளம் என கதை நகர்கிறது. கார்த்தியின் மாமாவாக வரும் சுப்பு மேனஜராக இருக்கும் கம்பெனியில்தான் கார்த்தியும், பிரேம்ஜியும் வேலை பார்க்கிறார்கள். நாசர் இந்தியாவின் டாப் 10 தொழில் அதிபர்களில் ஒருவர், அவருடைய மருமகனாக ராம்கி. சுப்புவின் கம்பெனியில் நடக்கும் ஒரு விழாவுக்கு நாசர் வர அங்கே ஒரு சந்தர்ப்பத்தில் கார்த்தியின் அறிமுகம் நாசர்க்கு கிடைக்கிறது.
பிறகு வழக்கம்போல பார், பார்ட்டி என நகர்கிறது கதை. ஒரு சமயத்தில் கார்த்தியும், பிரேம்ஜியும் ஃபுல் போதையில், பிரியாணி கடையை தேடும்போதுதான் ஒரு செம ஃபிகர் கதையில் எண்ட்ரி ஆகிறார். கார்த்தியை பற்றி சொல்லவே வேண்டாம் பிரேம்ஜி ஆளையே கரைக்ட் செய்யும் இவர் இப்படி ஒரு லெக் பீஸ் கிடைச்சா விடுவாரா. அந்த ஃபிகரை பின் தொடர்ந்து செல்கிறார்கள் இருவரும். அப்போது தான் இவர்களின் ஆனந்த வாழ்க்கையில் தோனி சிக்சர் அடிச்ச மாதிரி வாயை பிளக்க வைக்கிறது இவர்கள் செய்யும் கொலை. அந்த கொலையை நாங்க பண்ணல என்று கார்த்தியும், பிரேம்ஜியும் சொல்ல போலீஸ் இவர்களை நுங்கு எடுப்பதற்கு பதிலாக கார்த்தி போலீஸை புரட்டி எடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். யார் அந்த கொலையை செய்தது அதில் நாம் எப்படி மாட்டினோம் என்று இரண்டாம் பாதியில் தீ மிதிக்கும் பக்தன் போல அவ்வளவு வேகமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு அவ்வளவு வேலை பளுவை தரவில்லை வெங்கட் பிரபு. பதிலுக்கு உமா ரியாஸ் விஜயசாந்தியின் ஒன்னு விட்ட தங்கச்சியோ என என்னும் அளவுக்கு ஆக்‌ஷனில் விளையாடி இருக்கிறார். கார்த்தியின் பட வரிசையில் இதற்கு முன்பு சில சறுக்கல்கள் இருந்தாலும் இந்த படம் அவரை ஒரு படி மேலே ஏற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நடிப்புக்கு கூடவே பிரேம்ஜி இருக்கும் போது நீங்க தாராளமா அடுத்த படத்தையும் வெங்கட் பிரபுவுடன் பண்ணலாம்.
யுவனுக்கு இது 100வது படம். ஃபாரின் எல்லாம் சென்று என்னென்ன புது புது இசை கருவிகள் இருக்கிறதோ அதை எல்லாம் உபயோகித்திருக்கிறார். ஒரு புதுவித புத்துணர்ச்சி மனதுக்குள் சில்லறையாய் சிதறி விழுகிறது. இன்னும் மெலடியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இனி பிரியாணி சாப்பிடும் போது ஒரு செம பீஸ் நம்மை கிராஸ் பண்ணிபோனா கூட கையில் ஒரு லெக் பீஸ் வச்சி சமாதானப்படுத்திக்க வேண்டியது தான்.  நன்றி tamilcinema

No comments: