இலங்கைச் செய்திகள்

காணாமல் போனோரின் உறவுகள் மீது திருகோணமலையில் தாக்குதல்

பிரித் ஓதி முஸ்லிம் வியா­பா­ரியை மன்­னிப்பு கோரச் செய்த தேரர்கள்  

ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள்,இது எங்கள் இடம்

அட்டனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஊர்வலம்

150 வருட பழைமை வாய்ந்த காளியம்மன் சிலை உடைப்பு : ஹாலி­-எல உடு­வரை பெருந்­தோட்ட மேற்­பி­ரிவில் சம்பவம

காணாமல் போனோரின் உறவுகள் மீது திருகோணமலையில் தாக்குதல்


10/12/2013   திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகளால் இன்று முற்பகல் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது இனந்தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காணாமற் போனோரை தேடியறியும் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரின் உறவுகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து கொண்டிருந்த போது இடையில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் அருகில் இருந்தும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி 


பிரித் ஓதி முஸ்லிம் வியா­பா­ரியை மன்­னிப்பு கோரச் செய்த தேரர்கள்

12/10/2013       கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்தக வல­யத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒரு­வ­ருக்கு சொந்த­மான அழ­கு­சா­தனப் பொருட்­களை விற்­பனை செய்யும் கடையில் புத்­தரின் உருவ சித்­திரம் கொண்ட கையு­றை­களை விற்­ப­னைக்­காக வைத்­தி­ருந்­தமை தொடர்­பாக ஆத்­திரம் கொண்ட பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் முஸ்லிம் கடையில் பிரித் ஓதி வியா­பா­ரியை பொது­மன்­னிப்பு கோரச் செய்த சம்­பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்­பாக மேலும் தெரிய வரு­வ­தா­வது.
கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்தக வல­யத்தில் அமைந்­துள்ள குறித்த வர்த்­தக நிலை­யத்தில் பெண்கள் அணியும் நீண்ட கையு­றை­களில் புத்­தரின் உருவ சித்­திரம் இருந்­துள்­ளது. இந்த கையு­றையை அணிந்தால் கைகளில் பச்சை குத்­தி­யது போல் தெரியும்.
இது தொடர்­பாக அறிந்து கொண்ட பௌத்த மத­கு­ருக்கள் உட்­பட சிலர் அண்­மையில் இந்த கடைக்குச் சென்று ஏற்­ப­டுத்­திய பிரச்­சி­னையை அடுத்து அந்த கடையை சில தினங்­க­ளுக்கு மூட வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில், கடந்த சனிக்­கி­ழமை வர்த்­தகர் கடையை மீண்டும் திறக்க முற்பட்ட போது பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் கொண்ட குழு­வினர் அந்த முஸ்லிம் கடையின் முன்­பாக பிரித் ஓதும் ஒலி நாடாவை ஒலிக்­க­விட்­டனர். இதன் போது அந்த கடை­யிலும் அய­லிலும் பௌத்த கொடிகள் பறக்­க­வி­டப்­பட்­டமை ஒலி­பெ­ருக்கி மூல­மாக அறி­விப்பு செய்­யப்­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.
அதன் பின்னர் அந்த வர்த்­தக நிலையம் திறக்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. இதில் கலந்து கொண்ட பிக்­கு­களும் பொது மக்கள் சிலரும் பின்னர் அரு­கி­லுள்ள விகா­ரைக்குச் சென்­றனர்.
இது தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் பொது பலசேனா அமைப்பினர் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி

 ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள்,இது எங்கள் இடம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
"யுத்தத்தின்போது எமக்கும் இழப்புகள் ஏற்பட்டன. ஏன் அதைப்பற்றி நீங்கள் கதைக்க மறுக்கிறீர்கள்? உங்களது ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள். இது எங்களது இடம். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டோம்" என்று கூறி தாக்குதல் நடத்தியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து வீசியுள்ளனர்.
இதன்போது 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த போதும் சம்பந்தப்பட்டவர்களைத் தடுக்கவோ கைது செய்யவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற சிலர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி

அட்டனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஊர்வலம்

12/10/2013 பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் துஷ்பிரயோகங்களையும் கண்டித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை அட்டனில் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஊர்வலத்தில்  அட்டன்  பொலிஸ் மற்றும் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் காரியாலயம், பிரதேச இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  'பெண்களை கொடூரர்களிடமிருந்து காப்பாற்றுவோம்", 'சிறுவர்கள் நாளைய நாட்டின் தலைவர்கள்", பெண்களின் வேலைப்பலுவை குறைப்போம்" , 'பெண்களின்திறமைக்கு வழியமைப்போம்" எனும் வாசகங்களை எழுதிய  பதாதைகளை ஏந்தி  ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீதியில் நாடகம் ஒன்றையும் ஒழுங்கமைத்திருந்தனர்.
நன்றி வீரகேசரி 
150 வருட பழைமை வாய்ந்த காளியம்மன் சிலை உடைப்பு : ஹாலி­-எல உடு­வரை பெருந்­தோட்ட மேற்­பி­ரிவில் சம்பவம்

10/12/2013   பதுளை - ஹாலி­எல உடு­வரை பெருந்­தோட்ட மேற்­பி­ரிவு ஸ்ரீ காளி­யம்மன் ஆல­யத்தில் அம்மன் சிலை உடைத்து சேத­மாக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் நேற்று அதி­காலை இடம்­பெற்­றுள்­ளது.
 
150 வருட கால பழைமை வாய்ந்த இந்த ஆல­யத்தில் எழுந்­த­ரு­ளி­யி­ருக்கும் காளி­யம்மன், அப்­ப­குதி மக்­களின் குல­தெய்­வ­மாக பூஜிக்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­று­ள்ளது.
 
இனமுறு­கலை ஏற்­ப ­டுத்தும் வகை­யி­லேயே இச்­சிலை உடைத்து சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆரம்ப விசா­ர­ணை­களில் இருந்து தெரிய வந்­துள்­ளது.
மேற்­படி சிலை உடைக்­கப்­பட்­டமை தொடர்­பான தக­வல்கள் கிடைக்­கப்­பெற்­றதும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான், அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான், பிரதி அமைச்சர் முத்து சிவ­லிங்கம், மாகாண ஆளுநர் சீ.நந்­த­மெத்­தியூ, மாகாண முத­ல­மைச்சர் சஷிந்­தி­ர­ரா­ஜ­பக் ஷ ஆகி­யோரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்ளார்.
அத்­துடன் மாகாண பிரதி பொலிஸ் அதி­ப­ருடன் தொடர்பு கொண்டு சிலை உடைப்பில் சம்­பந்­தப்­பட்ட விவ­காரம் தொடர்­பாக உட­னடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தும் படியும் கேட்டுக் கொண்­டுள்ளார்.
மாகாண அமைச்­சரின் பணிப்பின் பேரில் இ.தொ.கா. ஆலோ­சகர் டி.வி.சென்னன் தலை­மை­யி­லான குழு­வினர் சம்­பவ இடத்­திற்கு விரைந்து உடைக்­கப்­பட்ட அம்மன் சிலை­யினை பார்­வை­யிட்டனர்.
இதே­வேளை, ஜனா­தி­ப­தியின் இணைப்புச் செய­லா­ளரும் முன்னாள் பிரதி அமைச்­ச­ரு­மான வடிவேல் சுரேஷ் ஸ்தலத்­திற்கு விஜயம் செய்து நிலை­மையைப் பார்­வை­யிட்­ட­துடன் சம்­பவம் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­து­மாறும் பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்தார்.
உடைத்து சேத­மாக்­கப்­பட்ட சிலைக்கு பதி­லாக பிறி­தொரு சிலை­யினைப் பெற்றுக் கொடுக்­கவும் அவ்­ஆ­ல­யத்­தையே புனர்­நிர்­மாணம் செய்­யவும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் அவ­ரது செய­லா­ள­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார்.
சிலை உடைப்பு தொடர்­பாக சந்­தே­கத்­திற்­கி­ட­மான நபர்­களை பொலிஸார் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்தி வருகின்றனர்.
 நன்றி வீரகேசரி
No comments: