உலகச் செய்திகள்


நான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி

சவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை

சிங்­கப்­பூரில் இந்­தியப் பிர­ஜையின் மரணம் தொடர்பில் கல­வரம்

பூட்டிய விமானத்தில் சிக்கிய நபர்

நான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி

09/12/2013   இந்­தி­யாவில் அடுத்த ஆண்டு, பாரா­ளு­மன்ற தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் தற்­போது நடை­பெற்று முடிந்­துள்ள டில்லி, சத்­தீஸ்கர், ராஜஸ்தான், மத்­தியப் பிர­தேசம் ஆகிய நான்கு மாநி­லங்­க­ளுக்­கான சட்­ட­சபைத் தேர்தலில் பார­திய ஜனதா கட்சி பெரு­வா­ரி­யான வெற்­றியை பெற்­றுள்­ளது. அதே­நேரம், காங்­கிரஸ் கட்சி படு­தோல்­வி­ய­டைந்­துள்­ளது. இந்த தேர்­தலில் குறிப்­பி­டத்­தக்க மாற்­ற­மாக, தலை­நகர் டில்­லியில் 15 ஆண்­டு­க­ளாக ஆட்­சி­ய­மைத்­து­வந்த காங்­கி­ரஸை, புதி­தாக வந்த 'ஆம் ஆத்மி' கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளி இரண்டாம் நிலைக்கு உயர்ந்­துள்­ளது. இதன்­மூலம் கடும் பின்­ன­டைவை சந்­தித்­தி­ருக்கும் காங்­கிரஸ் கட்சி, இந்த முடிவு பாரா­ளு­மன்ற தேர்­தலில் எதி­ரொ­லிக்­குமா என்ற கலக்­கத்தில் உள்­ளது.
டில்லி, சத்­தீஸ்கர், ராஜஸ்தான், மத்­தியப் பிர­தேசம் உள்­ளிட்ட மாநி­லங்­களின் சட்­ட­சபைத் தேர்­தல்­களின் வாக்­கு­ப­திவு கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது. இத­னை­ய­டுத்துஇ இந்த வாக்­குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு ஆரம்­பித்­தது.
 
டில்­லியை இழந்­தது காங்­கிரஸ்
 
ஜன­நா­ய­கத்தின் வெற்றி என்­கி­றது 'ஆம் ஆத்மி' இதில், 70 தொகு­தி­களை கொண்ட டில்லி சட்­ட­சபைத் தேர்­தலில், ஆளும் காங்­கிரஸ் கட்சி மூன்றாம் நிலைக்கு தள்­ளப்­பட்­டது.
34 இடத்தை பெற்று பார­திய ஜனதா கட்சி இந்த மாநி­லத்தில் வெற்­றி­பெற்­றது. அரவிந்த் கெஜ்­ரி­வாலின் 'ஆம் ஆத்மி' கட்சி 27 இடங்­களை பிடித்து இரண்டாம் இடத்தைபெற்றது.


காங்­கிரஸ்‌ கட்­சியின் ஊழல் தொடர்­பாக, அரவிந்த் கெஜ்­ரிவால் வீடு வீடாகச் சென்று மேற்­கொண்ட பிரசா­ரமே காங்­கி­ரஸின் பின்­ன­டை­வுக்கும் 'ஆம் ஆத்மி'யின் வெற்­றிக்கும் கார­ண­மாக அமைந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 
இது­கு­றித்து 'ஆம் ஆத்மி' தலைவர் அர விந்த் கெஜ்­ரிவால் தெரி­விக்­கையில்,
இது என்­னு­டைய வெற்றி அல்ல. புது­டில்லி தொகுதி மக்­களின் வெற்றி. ஜன­நா­ய­கத்தின் வெற்றி'' என்றார்.
 
'பெரிய கட்­சி­க­ளுக்கு இந்தத் தேர்தல் ஒரு எச்­ச­ரிக்கை'
 
காங்­கிரஸ் கட்­சியின் செய்தி தொடர்­பாளர் கூறு­கையில்,
'முதல் தேர்­த­லி­லேயே ஹஆம் ஆத்மி' கட்­சியின் வளர்ச்சி மற்ற பெரிய கட்­சி­க­ளுக்கு ஒரு எச்­ச­ரிக்கை கொடுத்­துள்­ளது. அதே­நேரம், காங்­கிரஸ் கட்சி, ஒரு­போதும் 'ஆம் ஆத்மி' கட்­சிக்கு ஆத­ரவு அளிக்­காது'' என்றார்.
 
கட்­டுப்­ப­ணத்தை இழந்­தது தே.மு.தி.க.
 
இந்தத் தேர்­தலில் விஜ­ய­காந்தின் தே.மு.தி.க. கட்­டுப்­ப­ணத்தை இழந்­தது.
இத் தேர்தல் குறித்து முன்­ன­தாக கருத்து தெரி­வித்­தி­ருந்த விஜ­யகாந்த், 'வெற்றி, தோல்வி பற்றி கவ­லை­யில்லை'' என்று குறிப்­பிட்­டி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.
 
 
தொங்கு சட்­ட­சபை?
 
நேற்று 5 மணி­வ­ரையில் வெளி­யான தேர்தல் முடி­வு­க­ளின்­படி பார­திய ஜனதா கட்சி 34 இடங்­களை பெற்­றி­ருந்­தது. டில்­லியில் ஆட்சி அமைக்க 36 சட்­ட­சபை உறுப்­பி­னர்­களின் பலம் வேண்டும் என்ற நிலையில்இ பார­திய ஜன­தா­வுக்கு 2 குறை­வான நிலை உள்­ளது. இதனால்இ டில்லி சட்­ட­சபை தேர்­தலில் யாருக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அள­வுக்கு தனிப்­பெ­ரும்­பான்மை கிடைக்­க­வில்லை. எனவே, 3 சுயேச்­சை­களின் ஆத­ரவை பெறும் பட்­சத்தில் டில்­லியில் பார­திய ஜனதாவின் ஆட்சி அமைக்கும். அவ்­வாறு நிக­ழாத பட்­சத்தில் டில்லி மாநி­லத்தில் தொங்கு சட்­ட­சபை ஏற்­ப­டலாம் என்று கூறப்­பட்­டது.
 
ராஜஸ்­தானும் காங்­கி­ரஸின் கை நழுவிச் சென்­றது
 
ராஜஸ்­தானை பொறுத்­த­வரை இங்கும் ஆளும் காங்­கிரஸ் கட்­சிக்கு பெரும் சரிவு ஏற்­பட்­டது. பார­திய ஜனதா கட்சி இம்­மா­நி­லத்தில் பல இடங்­களில் முன்­னிலை வகித்­தது. இதனால், காங்­கிரஸ் கட்சி தனது ஆட்­சியை இழக்கும் நிலை உரு­வா­னது.
200 தொகு­தி­களை கொண்ட இம் மாநி­லத்தில் பார­திய ஜனதா கட்சி 158 இடங்­க­ளிலும், காங்­கிரஸ் கட்சி 26 இடங்­க­ளிலும்இ மற்­றவை 15 இடங்­க­ளிலும் முன்­னிலை வகித்­தன.
 
மத்­திய பிர­தே­சத்தில் பா.ஜ.க. சாதனை
 
230 தொகு­தி­களை கொண்ட மத்­திய பிர­தே­சத்தில் பார­திய ஜனதா கட்சி 157 தொகு­தி­க­ளிலும், காங்­கிரஸ் கட்சி 62 இடங்­க­ளிலும், மற்­றவை 7 இடங்­க­ளிலும் முன்­னிலை பெற்­றன.
மத்­திய பிர­தே­சத்தில் சிவ்ராஜ் சிங் செளகான் தலை­மை­யி­லான பார­திய ஜனதா கட்­சியின் ஆட்சி உள்ள நிலையில், இப்­போது இடம்­பெற்ற தேர்­தலின் மூலம் பார­திய ஜனதா தனது ஆட்­சியை மீண்டும் தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ளது. மேலும், கடந்த தேர்­தலில் காங்­கிரஸ் 71, பார­திய ஜனதா 143 இடங்­களில் வெற்றி பெற்­றி­ருந்­தன. ஆனால், இம்­முறைத் தேர்­த­லிலில் பார­திய ஜனதா கட்சி மேல­திக இடங்­களில் முன்­னிலை பெற்று சாதனை படைத்­தது. இதில், காங்­கிரஸ் கட்சி சில தொகு­தி­களை இழந்­தது.
 
சத்­தீஸ்­கரில் ஆட்­சியை தக்க வைத்த பா.ஜ.க.
 
90 தொகு­தி­களை கொண்ட சத்­தீஸ்கர் மாநி­லத்­திலும் பார­திய ஜனதா கட்சி ஆட்­சியை கைப்­பற்­றி­யது. இதில், பார­திய ஜனதா 48 இடங்­க­ளையும், காங்­கிரஸ் கட்சி 40 இடங்­க­ளிலும், மற்­றவை இரண்டு இடங்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டன.
 
இந்த மாநில சட்­ட­சபைத் தேர்­தலை பொறுத்­த­வரை காங்­கிரஸ் கட்­சியே வெற்றி பெறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்கு வாக்­குகள் எண்­ணப்­பட்ட நேரத்­தி­லி­ருந்து காங்­கிரஸ் முன்­னிலை வகித்ததே காரணம். ஆனால், நேரம் செல்­லச்­செல்ல பார­திய ஜனதா, - காங்­கி­ர­ஸி­டையே பெரும் போட்டி நில­வி­யது. இறு­தியில் அம்­மா­நி­லத்­தையும் பார­திய ஜனதா கைப்­பற்­றி­யது.
 
பாரா­ளு­மன்ற தேர்தல் கலக்­கத்தில் காங்­கிரஸ்
 
இதன்­படி, நான்‌கு மாநி­லங்­க­ளிலும் பார­திய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்­றுள்­ளது. 'ஆம் ஆத்மி' கட்­சியால் காங்­கிரஸ் கட்சி, தலை­நகர் டில்­லியை இழக்க நேரிட்டது. எனவே, இந்த முடி­வுகள் காங்­கி­ர­ஸுக்கு பலத்த பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
அடுத்த ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில், இந்த தேர்தல் முடி­வுகள் அதில் எதி­ரொ­லிக்­குமா என்ற கலக்­கத்தில் காங்­கிரஸ் தற்­போது உள்­ளது.
 
இந்­நி­லையில், சட்­ட­சபைத் தேர்தல் முடி­வுகள் ஏமாற்றம் அளிப்­ப­தாகத் தெரி­வித்­துள்ள காங்­கிரஸ் கட்சிஇ மக்­களின் தீர்ப்பை ஏற்­ப­தாகத் தெரி­வித்­துள்­ளது.
பார­திய ஜனதா கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக நரேந்­திர மோடி அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அவர் மேற்­கொண்ட பிர­சா­ரங்­களும் இந்த வெற்­றிக்கு முக்­கிய காரணம் என தெரி­விக்­கப்­ப­டு­வதால் அடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­த­லின்பால் அனை­வரின் கவ­னமும் திரும்­பி­யுள்­ளது.
 
பா.ஜ.க. தொண்­டர்கள் எங்கும் கொண்­டாட்டம்
 
இத­னி­டையே, தேர்தல் முடி­வுகள் சாத­க­மாக அமைந்­த­தைத்­தொ­டர்ந்து பார­திய ஜனதா கட்சித் தொண்­டர்கள் பெரும் உற்­சா­க­ம­டைந்­துள்­ளனர்.
பல இடங்­களில் தொண்­டர்கள் இனிப்­புக்­களை பகிர்ந்தும் பட்­டா­சு­களை வெடித்தும் ஆட்டம் பாட்­டத்­துடன் வெற்­றியை கொண்­டாடி மகிழ்ந்­தார்கள்.
 
டில்லி வந்தார் மோடி
 
அதே­நேரம், நரேந்­திர மோடியும் குஜ­ராத்­தி­லி­ருந்து புறப்­பட்டு டில்­லிக்கு விரைந்து வந்தார். அப்­போது அவரை பார­திய ஜன­தாவின் மூத்த நிர்­வா­கிகள் சந்­தித்து வாழ்த்து தெரி­வித்­தனர்.
 
'2014 இல் மோடி பிர­த­ம­ரா­வது உறுதி' - ம.தி.மு.க. பொதுச்­செ­ய­லாளர்
 
நான்கு மாநில தேர்தல் முடி­வு­களைத் தொடர்ந்து, 2014 இல் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் நரேந்­திர மோடி பிர­த­ம­ராவார் என ம.தி.மு.க. பொதுச்­செ­ய­லாளர் வைகோ நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.
 
இது­கு­றித்து அவர் நேற்று வெளி­யிட்ட அறிக்­கையில், சட்­ட­சபைத் தேர்தல் முடி­வு­களில், மக்கள் விரோத காங்­கிரஸ் கட்­சிக்கு இது­வரை வர­லாறு காணாத படு­தோல்வி கிடைத்­துள்­ளது.
 
தமி­ழக வாழ்­வா­தா­ரங்­க­ளுக்கு
 
தமிழக வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும், இலங்கைத் தமிழர் படுகொலையில் பங்கா ளியாகச் செயற்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக்களுக்கு, காங்கிரஸின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதற்கு நான்கு மாநில தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுகின்றன. அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்யம்தான் மக்களின் தீர்ப்பாக இருக்கும்.
 
டில்லியில் ஹஆம் ஆத்மி' கட்சி, ஓராண்டு காலத்தில் மக்களின் மதிப்பையும், ஆதரவை யும் பெற்று மதிக்கத்தக்க இடங்களைப் பெற்றுள்ளது, பாராட்டுக்கு உரியதாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி 








சவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை


09/12/2013  சவூதி அரேபியாவில் பாகிஸ்தானிய பிரஜை ஒருவருக்கு அந்நாட்டிற்கு போதைவஸ்தை கடத்தி வந்த குற்றச்சாட்டில்  தலையை வாளால் வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
மொஹமட் ஸேயர் கான் என்ற மேற்படி நபர் சவூதிக்கு பெருமளவு போதைவஸ்தை கடத்திச் சென்றவேளை கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையுடன் இந்த வருடம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 73 ஆக உயந்துள்ளது.    நன்றி வீரகேசரி




சிங்­கப்­பூரில் இந்­தியப் பிர­ஜையின் மரணம் தொடர்பில் கல­வரம்

10/12/2013      சிங்­கப்­பூரில் லிட்டில் இந்­தியா என பிர­பலம் பெற்ற பகுதியில் தனியார் பஸ்­ஸொன்றால் மோதுண்டு 33 வயது இந்­தியப் பிரஜை ஒருவர் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு பலி­யா­ன­தை­ய­டுத்து அங்­குள்ள பிர­தே­ச­வா­சிகள் கல­வ­ரத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.
இதன்­போது வீதி­களில் இறங்­கிய சுமார் 400 வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்கள் பொலி­ஸாரை நோக்கி கற்­களை வீசி­ய­துடன், பொலிஸ் கார்­க­ளுக்கும் அம்­புலன்ஸ் வண்­டி­யொன்­றுக்கும் தீ வைத்­துள்­ளனர்.
இந்தச் சம்­ப­வத்தில் 18 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அவர்­களில் பலர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளாவர்.
சிங்­கப்­பூரில் கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட காலப் பகு­தியில் கல­வ­ர­மொன்று இடம்­பெ­று­வது இதுவே முதற் தட­வை­யாகும்.
இந்­நி­லையில், பொலிஸார் பெரும் போராட்­டத்தின் மத்­தியில் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டுவந்­துள்­ளனர்.
மேலும், கல­வ­ரத்தில் பங்­கேற்ற குற்­றச்­சாட்டில் 27 தென் ஆசி­யர்கள் பொலி­ஸாரால் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர்.
ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 9.25 மணி­ய­ளவில் தனியார் பஸ்­ஸொன்று குறிப்­பிட்ட நபரை மோதி­யது குறித்து அவ­சர சேவைப் பிரி­வுக்கு அறி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­துக்கு வந்த அவ­சர சேவைப் பிரி­வினர் பஸ்ஸின் கீழ் சிக்­கி­யி­ருந்த அந்­ந­பரின் உடலை மீட்க முயற்­சித்­த­போது அங்­கி­ருந்­த­வர்கள் தாக்­குதல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.
இதன்­போது சிங்­கப்பூர் சிவில் பாது­காப்பு சேவைக்குச் சொந்­த­மான 9 வாக­னங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன.
கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்கள் 7 வருடத்துக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையையும் பிரம் படித் தண்டனையையும் எதிர்கொண்டுள் ளனர்.       நன்றி வீரகேசரி






பூட்டிய விமானத்தில் சிக்கிய நபர்


10/12/2013    அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலிருந்து ஹூஸ்டன் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் நபர் ஒருவர் தூங்கிச் சென்று பிறகு விழித்துப் பார்க்கும்போது விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.

ஜன்னல் ஓர ஆசனத்தில்அமர்ந்திருந்த வாக்னர் என்ற அந்த நபர் நன்றாகத் தூங்கிவிட்டார். விமானம் ஹூஸ்டன் வந்து விமானம் நிறுத்தப்படவேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டன. விமானத்தின் உள்ளே நபர் ஒருவர் இருப்பது தெரியாமல் இது நடந்துள்ளது.
வாக்னர் விழித்துப்பார்க்கும்போது இருட்டில் தனியாக இருப்பதைக் கண்டு மிரண்டு போயுள்ளார். நல்லவேளையாக அவரது தொலைப்பேசி சிக்னல்கள் செயலில் இருந்தது.
நன்றி வீரகேசரி



No comments: