.
07.11.2013 அன்று அஜ்மான் சிவ ஸ்டார் பவனில் இரவு 9.00 மணியளவில் முத்தமிழ் மழை நிகழ்வும் கவிஞர் காவிரிமைந்தன் பிறந்த நாள் (10.11.) விழாவும் இனிதே நடை பெற்றன.
செல்வி ஆனிஷாவின் தமிழ்த் தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது.
விழாவிற்கு ஈ.டி.ஏ நிறுவனத்தின் மூத்த செயல் இயக்குனர் திரு அன்வர் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார். தனக்கே உரித்தான பாணியில் தமிழ் அருவிபோல் சொற்களைக் குவித்து சொல்லோட்டம் நடத்தினார். கவிஞர் காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அளவான வார்த்தைகளால் அலங்காரம் செய்து விழாவைத் தொகுத்தளித்தார் திண்டுக்கல் ஜமால் அவர்கள். திரு. ஏ என். சொக்கலிங்கம், திரு. எஸ். எம். பாரூக் அவர்களும் வாழ்த்துரை வழங்கிட திருமதி நர்கீஸ் பானுஅவர்கள், காவிரிமைந்தன் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைவாசித்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடியிலிருந்து கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்களும் மதுரையிலிருந்து மனிதத் தேனீ சொக்கலிங்கம் அவர்களும் கம்பத்திலிருந்து பேராசிரியர் மன்சூர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் தலைமை ஏற்ற அன்வர் பாஷா அவர்களுக்கு ஏ என். சொக்கலிங்கம் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். மனிதத் தேனீ சொக்கலிங்கம் அவர்களுக்கு கவிஞர் காவிரிமைந்தன் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை திருமதி வள்ளி அழகப்பன் வழங்கினார். பேராசிரியர் மன்சூர் அவர்களுக்கு கவிஞர் ஜியாவுதீன் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை கவிஞர் ரமணி வழங்கினார். கம்ப அடிசூடி பழ பழனியப்பன் அவர்களுக்கு நிஜாம் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை அமீரகத்தின் பி.பி.சி. முதுவை ஹிதயாத்துல்லா வழங்கினார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய கவியரசு கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள் நூல் .. அழகப்பன், ஹிதயதுல்லா மற்றும் யூசுப் ஆகியோரால் வழங்கப்பட்டது.
உலகத்தின் தொன்மை மிகுந்த உயிர்ப்புள்ள நகரங்களில் அன்றும் இன்றும் முதன்மை வகிக்கும் மதுரையிலிருந்து.. 15500 நிகழ்ச்சிகளுக்கு மேலாக பங்கேற்று சிறப்புரை,தலைமையுரை ஆற்றிய கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத் தேனீ சொக்கலிங்கம் - இயல்பான பேச்சால் இதயங்களைக் கவ ர்ந்தார். நகைச்சுவையோடு.. பல்வேறு தகவல்களை அள்ளிக்கொடுத்ததோடு வாழுகின்ற மண்ணின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீங்கள் வாழ்வதும்.. அயலக மண்ணில் தமிழை போற்றி வருவதும்பாராட்டுக்குரியவை என்றார்.
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள்.. அகமும் முகமும் தமிழால் நிரம்ப கம்பனில் தோய்ந்த காரணத்தால் இன்பத்தமிழ் நுகர கம ்பனைப் பற்றியும் கம்ப ராமாயணம் பற்றியும் நுணுக்கமான பல தகவல்களைப் பகிர்ந்தார். பழமையின் பெருமை கள் உட்கொண்டு.. எதிர்காலம் நோக்கிய சிந்தனையோடு தற்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் இருப்பதால் காலத்தை வென்று நிற்கும் காவியமாய்.. கம்பனின் படைப்பு காலத்தை வென்று நிற்கிறது என்றார்.
பேராசிரியர் மன்சூர் அவர்கள் தமது சிறப்புரையில் தன்னை கவர்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைப்புகள் மிகச் சரியாக பதியப்படவில்லை என்றார். மேலும் பாரதிதாசனின் மூன்று ஆசைகள் - ஒரு முறை விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், பாரதி பற்றி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றும், மாபெரும் நூலகம் ஒன்றையும் உருவாகவும் ஆசைப்பட்டார். அவை நிறைவேறாமலே உயிர் நீத்தார்.
அவர் இறந்தபோது அவர்தம் உடலை பு துவை எடுத்துச் செல்லக் கூட வசதியின்றி .. நண்பர்களான பேரறிஞர் அண்ணாவும்கவிஞர் கண்ணதாசனும் இருவருமே அதைச் செய்தனர். இன்றோ.. அவர் பெயரில் பல்கலைக் கழகம் இருக்கிறது.. பல்லாயிரம் தமிழ்ச் சான்றோர்கள் அதில் உருவாக்கப்படுகின்றனர் என்று உருக்கமுடன் குறிப்பிட்டு வாழும்போது கவிஞர்களை தமிழ்ச் சமுதாயம் போற்றிடக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
கவிஞர் ரமணி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ் கவிஞர் காவிரிமைந்தன் கவிஞர் ஜியாவுதீன், எஸ். எம். பாரூக், முதுவை ஹிதாயத்துல்லா, திண்டுக்கல் ஜமால்,ஜெயராமன் ஆனந்தி, கவிஞர் ரமணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment