.
இந்திய
அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார்.
மேற்கிந்தியாவுடன் தனது கடைசி டெஸ்டில் விளையாடிய சச்சின் முதல் இனிங்ஸில் 74 ஓட்டங்கள் விளாசினார். இந்திய அணி 2 வது டெஸ்டில் இனிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி இனிங்ஸால் வெற்றி பெற்றது. வெற்றியை கொண்டாடிய சச்சின் மைதானத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்கள், இந்திய அணி மற்றும் மேற்கிந்திய அணி வீரர்கள் சச்சினுக்கு எழுந்து நின்று பிரியாவிடை கொடுத்தனர். அப்போது சச்சின் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்ததும் சச்சின் மீண்டும் மைதானத்திற்கு வந்து குனிந்து இரண்டு கைகளால் தொட்டு கண்ணில் ஒத்தி வணங்கியபடி சென்றார்.
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 68 அரைச்சதம், 51 சதம் உட்பட 15,921 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
நன்றி தினக்குரல்

No comments:
Post a Comment