யூனியன் இரவு 2013 - ஜெயந்தி மோகன்



படங்கள்: எ.ஜெ. ஜெயச்சந்திரா
தெல்லிப்பழையில் அமைந்துள்ள யூனியன் கல்லூரியின் பழைய மாணவர் சங்க அவுஸ்திரேலிய சிட்னிக் கிளையினால் சிட்னி மாநகரத்தில்; யூனியன் இரவு 2013 ஒன்றுகூடலும்ää இராப்போசன விருந்தும் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு சிட்னியில் அமைந்துள்ள யாழ் கலாச்சார மண்டபத்தில் 16.11.2013 அன்று மாலை 6:30 மணிக்கு இடம் பெற்றது. ஒரு நிமிட மௌனத்துடன் ஆரம்பித்த ஒன்றுகூடலில் முதலில் தேசிய கீதமும்ää பாடசாலைக் கீதமும் பழைய மாணவர்களால் இசைக்கப்பட்டது.




யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்க அவுஸ்திரேலிய சிட்னிக் கிளையின் தலைவர் திரு வேலுப்பிள்ளை நாகராஜாவின் தலைவர் உரையைத் தொடந்து அவுஸ்திரேலியாவின் பாரம்பரியப் பழங்குடி மக்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யூனியன் கல்லூரியின் ஆசிரியர்களான திருமதி. கமலாகரன்ää செல்வி. நாகரட்ணம் ஆகியோர் பழைய மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்கள்.





தொடர்ந்து சிறுவர்களின் நடனமும்ää தற்போது சிட்னியில் புகழ் பெற்று வரும் நடனக்குழுவினரான “டீ பேற்” எனும் நடனக்குழுவினரின் நடனமும் இடம் பெற்றன. இந்நடனம் மிகவும் விறுவிறுப்பாக பார்வையாளர்களையும் நடனமாடத் தூண்டியது.





இத்துடன் யூனியன் கல்லூரி பழைய மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இவர்கள் பாடிய பல புதியää பழைய பாடல்கள் பார்வையாளர் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இந்நிகழ்ச்சிகளுக்கிடையில் யாழ் உணவகத்தால் மிகச் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. நிறைவாக சிட்னி பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு. எ.ஜெ. ஜெயச்சந்திராவினால் யூனியன் கல்லூரியின் புனரமைப்பு நிதிக்காக 1500 டொலர்கள் வரை ஏலம் கேட்கப்பட்டது. பின்னர் செயலாளரினால் நன்றியுரை வழங்கப்பட்டது. இறுதி நிகழ்வாக திரைப்படää மற்றும் துள்ளிசைக்கு சிறுவர்களுடன் பெரியவர்களும் இணைந்து நடனமாடியது மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எமது பழைய ஆசிரியர்களைச் சந்தித்த மகிழ்வுடனும் பழைய மாணவர்கள் மற்றும் அவர்களின் சொந்தங்களைக் கண்டு அளவளாவிய நிறைவுடனும் அந்த இனிய மாலைப் பொழுதுக்கு நன்றி கூறியபடி யாழ் மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.









படங்கள்: எ.ஜெ. ஜெயச்சந்திரா
ஆக்கம்:

No comments: