உலக செய்திகள்

.
மலாலாவின் புத்தகத்திற்கு தடை

பிலிப்­பைன்ஸை தாக்­கிய ஹையான் சூறா­வளி: 10,000 பேர் பலி

லைபர்மேன் மீண்டும் பதவியேற்பு: இஸ்ரேல்- பலஸ்தீன் பேச்சுவார்த்தை கேள்விக்குறி

ஹக்­கானி போராளிக் குழுவின் சிரேஷ்ட தலைவர் பாகிஸ்­தானில் சுட்­டுக்­கொலை

கெமரூன் - மன்மோகன் சிங் சந்திப்பு

மலாலாவின் புத்தகத்திற்கு தடை

11/11/2013 பாகிஸ்தானில் உள்ள தனியார் பாடசாலைகள் சில மலாலா யூசாப்சாயின் புத்தகத்துக்கு தடைவிதித்துள்ள சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான கல்வி மற்றும் உரிமை போன்றவற்றுக்கு குரல்கொடுத்தமையால் மலாமா யூசாப்சாய் தலிபான்களால் கடந்த வருடம் சுடப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பிரித்தானியாவுக்குச் சென்ற அவர் அங்கே தஞ்சமடைந்தார்.



இந்நிலையில் அவர் தன்னைப் பற்றிய புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டார்.

'I Am Malala' என்று பெயரிடப்பட்ட மேற்படி புத்தகத்தை பிரித்தானிய ஊடகவியலாளரான கிறிஸ்டினா லாம்புடன் சேர்ந்து எழுதியிருந்தார்.

இந்நிலையில் அவரது புத்தகத்துக்கு பாகிஸ்தான் தனியார் பாடசாலைகள் சில தடை விதித்துள்ளன.

மலாமா யூசாப்சாய் மேற்குலகையே பிரதிநிதித்துவம் செய்வதாகவும் பாகிஸ்தானை அல்லவெனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அனைத்து பாகிஸ்தான் தனியார்  பாடசாலைகள் முகாமைத்துவ சங்கத் தலைவர் அதீப் ஜவேதானி தமது அமைப்பின் கீழ் உள்ள 40,000 பாடசாலைகளிலும் இப்புத்தகத்துக்கு தடைவிதிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது அமைப்பும் தமக்கு கீழ் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் மலாலாவின் புத்தகத்தை தடைசெய்துள்ளதாக அனைத்து பாகிஸ்தான் தனியார் பாடசாலைகள் ஒன்றியத்தின் தலைவர் காசிப் மிர்ஷா தெரிவித்துள்ளார்.

மலாலா சிறுவர்களுக்கான முன் உதாரணமாக திகழ்கின்றபோதிலும் அவரது புத்தகம் அவரை சர்ச்சைக்குரியவராக மாற்றியுள்ளதாகவும் , இப்புத்தக்கத்தின் ஊடாக அவர் மேற்குலக சக்திகளின் கைகளில் கருவியாக மாறியுள்ளதாக காசிப் மிர்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் மலாலாவின் புத்தகம் பள்ளிகளின் நூலகங்களில் தடைசெய்யப்பட்டுள்ளமையானது பாகிஸ்தானில் பல பகுதிகளில் இன்றளவும் நிலவும் தலிபான் ஆதரவுப் போக்கினை காட்டி நிற்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் பெரும்பாலான குழந்தைகள் தனியார் பாடசாலைகளிலேயே கல்விகற்கின்றனர்.

அங்கு அரச பாடசாலைகளின் குறைந்த தரத்திலான கல்விச் செயற்பாடே இதற்கான காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது. நன்றி வீரகேசரி

பிலிப்­பைன்ஸை தாக்­கிய ஹையான் சூறா­வளி: 10,000 பேர் பலி


11/11/2013    பிலிப்­பைன்ஸை தாக்­கிய ஹையான் சூறா­வ­ளியில் சிக்கி ஒரு பிர­தே­சத்தில் மட்டும் குறைந்­தது 10,000 பேர் பலி­யா­கி­யி­ருக்­கலாம் என அஞ்சப்படுவதாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
இந்த சூறா­வ­ளியால் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள கிழக்கு நக­ரான தக்­லொ­பனில் வீடு­களும் பாட­சா­லை­களும் விமான நிலை­யமும் அழி­வ­டைந்­துள்­ளன.
அதே­ச­மயம் அந்­ந­கரின் அய­லி­லுள்ள சமார் தீவில் 300 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 2000 பேர் காணாமல் போயுள்­ளனர்.
ஹையான் சூறா­வ­ளியால் தக்­லொ­பனில் மின்­சாரம் முழு­மை­யாக துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் சூறா­வ­ளியால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் கொள்ளைச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.
லெயிட் மாகாணத்தில் 70 சதவீதம் முதல் 80 சதவீதமான பிரதேசங்கள் அழிவடைந்து ள்ளன.
வியட்­நாமை நோக்கி நகரும் இந்த சூறா­வ­ளியால் அந்­நாட்டின் வட­மா­கா­ணங்­களில் 600,000 பேருக்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.
அங்கு குறைந்­தது 4 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.        நன்றி வீரகேசரி 


லைபர்மேன் மீண்டும் பதவியேற்பு: இஸ்ரேல்- பலஸ்தீன் பேச்சுவார்த்தை கேள்விக்குறி
12/11/2013   ஸ்ரேல் நாட்டின் வெளிநாட்டு அமைச்சராக எவிக்டோர் லைபர்மேன் மீண்டும் பதவியேற்றுள்ளார்.

கடும்போக்கு வாதியாக கருதப்படும் லைபர் மேன் இப்பதவியை ஏற்றுள்ளமையானது இஸ்ரேல்- பலஸ்தீனம் இடையிலான பேச்சுவார்த்தையை பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

'இய்ஸ்ரேல் பீடெனு'  கட்சியைச் சேர்ந்த லைபர்மேன் கடந்த வருடம் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து பதவி விலகியிருந்தார்.

எனினும் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்த  குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து  அப்பதவிக்கு மீண்டும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சிக்கல்கள் பலவற்றை சந்தித்துள்ள பலஸ்தீன் உடனான இஸ்ரேலின் பேச்சு வார்த்தை இவரது நியமனத்தினால் மீண்டும் பாதிக்கப்படும் என அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

இவர் பலஸ்தீனமுடனன நிரந்தர சமாதான உடன்படிக்கை முற்றிலும் சாத்தியமற்றதெனக் கூறி சச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் இஸ்ரேலில் உள்ள அராபியர்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய இனவெறிக் கருத்துக்கள் சிலவற்றையும் வெளியிட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி


ஹக்­கானி போராளிக் குழுவின் சிரேஷ்ட தலைவர் பாகிஸ்­தானில் சுட்­டுக்­கொலை


13/11/2013    ஆப்­கா­னிஸ்தான் - பாகிஸ்­தா­னிய எல்­லையில் செயற்­படும் ஹக்­கானி போராளி குழுவின் அதி சிரேஷ்ட தலை­வர்­களில் ஒரு­வ­ரான நஸி­ருதீன் ஹக்­கானி பாகிஸ்­தா­னிய தலை­நகர் இஸ்­லா­மா­பாத்­திற்கு அருகில் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளார்.

மேற்­படி போராளிக் குழுவின் தலைமை நிதி சேக­ரிப்­பா­ள­ரான அவர், அக் குழுவின் ஸ்தாப­க­ரான ஜலா­லு­தீனின் மக­னாவார்.

நஸி­ரு­தீனின் சடலம் வட வாஸி­ரிஸ்­தா­னி­லுள்ள மலைப் பிராந்­திய மொன்றில் நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளது.

அவரை யார் எதற்­காக சுட்டுக் கொன்­றார்கள் என்­ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
நஸி­ருதீன் பாண் வாங்­கு­வ­தற்­காக வெதுப்­ப­க­மொன்­றுக்கு அருகில் காரை நிறுத்­திய போது, மோட்டார்சைக்­கிள்­களில் வந்த துப்­பாக்­கி­தா­ரிகள் அவர் மீது சர­மா­ரி­யாக துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யுள்­ளனர்.

நஸி­ரு­தீனின் சகோ­த­ரர்­களில் ஒரு­வரும் ஹக்­கானி போராளி குழுவின் செயற்­பாட்டு கட்­டளைத் தள­ப­தி­யு­மான பட்­ருத்தீன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்­பெற்ற ஆளற்ற விமானத் தாக்­கு­த­லொன்றில் உயி­ரி­ழந்­துள்ளார்.

நஸி­ரு­தீனின் மூத்த சகோ­த­ர­ரான சிரா­ஜுதீன் தற்­போது ஹக்­கானி போராளிக் குழுவை தலைமை தாங்கி வழிநடத்தி வரு கின்ற போதும், ஜலாலுதீனே அக் குழுவின் தலைவராக தொடர்ந்து கருதப்படுகிறார்.நன்றி வீரகேசரி

கெமரூன் - மன்மோகன் சிங் சந்திப்பு

14/11/2013    பிரிட்டன் பிரதமர் கெமருன் , பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மோடியை சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு ஏன் கூடாது அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க தயார், ஏற்கனவே குஜராத் முதல்வருடன் சந்திப்புக்கான ஏற்பாடுகளை நாங்கள் நடத்த ஆரம்பித்திருக்கின்றோம் இன்னும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் இன்று இந்தியாவிற்கு விஜயம் சென்றுள்ளார். இவர் காலையில் பிரதமர் இல்லத்திற்கு சென்று அவரிடம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


இருநாடுகள் இடையிலான விசா நடைமுறைகள் , வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் இரு நாட்டு நல்லுறவு விஷயங்கள் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

மேலும் இதன் போது சச்சின் டெண்டுல்கார் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கெமரூன் கருத்து தெரிவித்துள்ளார்.

சச்சின் ஒரு வியக்கத்தக்க அளவிட முடியாத சக்தி படைத்தவர் எனவும் கெமரூன் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி

No comments: