செல்வி பைரவி சிவராஜாவின் வயலின் அரங்கேற்றம் -ரேணுகா தனஸ்கந்தா

.
மெல்பன்   கவின்  கலை   இசைக்கல்லூரியின்  முதலாவது வயலின் அரங்கேற்றம்
இளங்கலைஞர்    செல்வி     பைரவி    சிவராஜாவின்                                         ஆற்றலை      வெளிப்படுத்திய     நிகழ்வு



அவுஸ்திரேலியா      விக்ரோரியா      மாநிலத்தில்     மெல்பனில்     பல  வருடங்களாக      கவின்    கலைக்கல்லூரி     எனும்     இசைப்பள்ளியை  நடத்திவருகிறார்     ஸ்ரீமதி ரமா சிவராஜா.    தமது  ஏழுவயதிலேயே    இசை கற்கத்தொடங்கி      யாழ்ப்பாணம்     பல்கலைக்கழக      நுண்கலைக்கல்லூரியில்      இசைக்கலைமhணியாக      பட்டம்    பெற்ற   ரமா சிவராஜா,    அவுஸ்திரேலியா       மெல்பனுக்கு     புலம்பெயர்ந்தபின்னர்  கவின்கலைக்கல்லூரியை      ஆரம்பித்தார்.
அவரது  புதல்வி  பைரவியின்  வயலின்  இசை அரங்கேற்றம் சமீபத்தில்  மெல்பனில்     George wood Performing Arts Centre     இல்  நடைபெற்றது.
செல்வி     பைரவி,     வயலினுடன்   வாய்ப்பாட்டு,  நடனம்  முதலான கலைத் துறைகளையும்     கற்றவர்.      வீணை,      பியானோ     முதலான இசைக்கருவிகளை       வாசிக்கும்      திறனும்      படைத்தவர்.




விஞ்ஞானப்பட்டதாரியான       பைரவி,      தமது     தாயார்      திருமதி ரமா சிவராஜாவையே       குருவாகப்பெற்று      தமது     ஆற்றலை  அரங்கேற்றத்தின்       மூலம்      வெளிப்படுத்தியிருந்தார்.
ரமா சிவராஜா    கடந்த     பதினைந்துவருடகாலமாக     மெல்பனில்  கர்நாடக இசைபயிலும்      மாணாக்கர்களுக்காக      வாய்ப்பாட்டு,       வாத்திய  இசைப்பரீட்சைகளை      நடத்துவதற்கு     முன்னின்று      உழைத்துவருகிறார்.
அவரது     கடின      உழைப்பு       வீண்போகவில்லை     என்பதற்கு     அவரது  புதல்வி     பைரவியின்      வயலின்      அரங்கேற்றம்      சிறந்த      சான்று.
 கவின்கலைக்    கல்லூரியைப்    பொறுத்தமட்டில்       இது    முதல்  அரங்கேற்றமாகவிருந்தபோதிலும்     ரமா சிவராஜாவும்      புதல்வி  பைரவியும்      காலத்தால்      மறையாத      முன்னுதாரணத்தை  அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
வழக்கமாக       அரங்கேற்றம்       என்றால்       பக்கவாத்தியக்கலைஞர்கள்  தமிழ்நாடு     சிங்கப்பூர்      மலேசியா     அல்லது       இலங்கையிலிருந்துதான்  வருவார்கள்.       ஆனால்     செல்வி    பைரவி     சிவராஜாவின்     வயலின்  இசை    அரங்கேற்றத்திற்கு     பக்கவாத்திய     கலைஞர்களாக  இசைவழங்கியவர்கள்      மெல்பனில்      இசைத்துறையில்      பயின்று      தேறி  அரங்கேற்றம்      கண்ட     இளம்    கலைஞர்களே.     இவர்கள்     மூவரும்  அவுஸ்திரேலியாவில்       பிறந்து      வளர்ந்தவர்கள்      என்பது  குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பிட்ட      மூன்று      பக்கவாத்தியக்கலைஞர்கள்      பெயர்வருமாறு:-
செல்வன்      நந்தேஷ்    சிவராஜா     ( மிருதங்கம்)     இவர்    ஒரு  பொறியியல்     மாணவர்.
செல்வன்      அர்ஜூனன்      புவீந்திரன்     ( கடம்)     சட்டம்     பயின்று  பணியிலிருப்பவர்.
செல்வன்    அக்ஷன்     வாசவன்    ( கஞ்சிரா)     பொறியியல்     மாணவர்.
 ஸ்வர சுத்தமாக        அமைந்த      பைரவியின்    வயலின்     இசை    அவரது  கடுமையான     பயிற்சியையும்       இசைஞானத்தையும்  துல்லியமாகக்காட்டியது.       முதலாவது    பாடல்     சாவேரி      இராகத்தில்  அமைந்த     சரசூடா     வர்ணத்தை      இயற்றியவர்      கோட்டவாசல் வெங்கட்ராம்    ஐயர்.


முத்துசாமி    தீட்சிதர்     இயற்றிய      ஹம்சத்வனி    ராகத்தில்     அமைந்த வாதாபி     கணபதிம்     இசையை      பைரவி      வாசித்த   பொழுது     பலத்த  கரகோசம்     சபையிலிருந்து       எழுந்தது.      முத்துசாமி     தீட்சிதரின் அகிலாண்டேஸ்வரியும்      மோகனத்தில்       அமைந்த      இராகம்,  தாளம், பல்லவியும்       இதயத்தை     தொட்டன.
பக்கவாத்தியக்கலைஞர்களின்       தனிஆவர்த்தனம்       நிகழ்ச்சி      தரமாகவும்   சபையோரை      கவரும்வகையிலும்     அமைந்தது      சிறப்பு. 
அரங்கேற்றத்தின்      ஆரம்பம்      முதல்      மங்களம்     வரையில்      சபையோரை  இசைவெள்ளத்தில்       மூழ்கச்செய்த      பைரவியின்       திறமையைக்     கண்டு     வியக்காமலிருக்க     முடியவில்லை.
பைரவியின்        வயலின்       அரங்கேற்றமானது      அவரது       தேர்ச்சியை  மட்டுமன்றி    மேலும்      மூன்று      இளம்கலைஞர்களின்       ஆற்றலையும்  வெளிப்படுத்தியிருந்ததுடன்        ஒன்றுபட்ட      இசைகளின்       சங்கமத்தையும்   காண்பித்தது.
இவ்வாறு       இளம்கலைஞர்களை      தமிழ்       இசை    உலகிற்கு  அரங்கேற்றங்களின்       வாயிலாக     அறிமுகப்படுத்தும்பொழுது   அவர்களின்     ஆளுமைப்பண்பும்      சுயநம்பிக்கையும்  வெளிப்படுத்தப்படுகிறது.
செல்வி     பைரவி       சிவராஜாவுக்கு      யாழ்ப்பாணம்     பல்கலைக்கழகம்  இராமநாதன்       நுண்கலைக்கல்லூரியின்      முன்னாள்   விரிவுரையாளர் சங்கீத    சிரோன்மணி    சாந்தநாயகி     சுப்பிரமணியம்,    வயலின்     இசை  விற்பன்னர்கள்     கல்லிடைக்குறிச்சி     பாலகிருஷ்ணன்,     பி. எஸ். நாராயண்      ஆகியோரும்       தமது      வாழ்த்துரைகளை    தெரிவித்துள்ளனர்.
பைரவியின்     அரங்கேற்றத்தின்     பிரதம      விருந்தினர்களாக      பிச்சுமணி  இசைக்கல்லூரியின்     நிருவாகியும்      வீணை    ஆசிரியருமான    மெல்பன்     புகழ்      திரு. கோபிநாத்      தம்பதியரும்      சிறப்பு  விருந்தினர்களாக      வாய்ப்பாட்டு      கலைஞர்      மெல்பன்  புகழ்  திரு. அகிலன் சிவானந்தன்      தம்பதியரும்     கலந்து     சிறப்பித்தனர்.
பல    நூற்றாண்டு     காலத்திற்கு     முன்னர்      அறிமுகமான      வயலினுக்கு  நீண்ட      வரலாறு      உண்டு.   வயலின்      இசை     மேலைத்தேயத்தின்     வரவாக     இருந்தபோதிலும்   முத்துசாமி               திட்சிதரின்  சகோதரர்  பாலசுவாமி  தீட்சிதரால்      தமிழிசை   உலகிற்கு    அறிமுகமானது.   தமிழிசையில்   முக்கிய      இடம்பெறும்     வயலின்   வாத்தியம்   மக்களை  இதமாக     வருடிச்செல்லும்      இயல்புள்ளது.      செல்வி  பைரவி  சிவராஜா  தமது    அரங்கேற்றத்தின்     ஊடாக  எம்மை     இசைநாதவெள்ளத்தில்  நனையச்செய்து      புத்துயிர்ப்பைத்தந்தார்     என்றால்  மிகையாகாது.
 அவுஸ்திரேலியாவில்        இசைத்துறையில்     இனங்காணப்படும்     இந்த  இளம்தலைமுறையினரின்   எதிர்காலம்   சிறப்பாகவும்  சுபீட்சமாகவும்   அமையும்    என்பதற்கு       செல்வி     பைரவி  சிவராஜாவின்   வயலின்  இசை  அரங்கேற்றம்     ஒரு     நல்ல     சான்றாக     அமைந்துள்ளது. 


                                                   ---0--- 

2 comments:

கலை said...

Congratulations to ரமா சிவராஜா, the teacher and பைரவி சிவராஜா the student. Also comendable is that the three young artists who were born in Australia are the supporting artists. I heard a program in London where all the dances were perfomred by those who had Arnagetram and all the too were done their Arangetrams. We hope to see more and more programs by the young பக்கவாத்தியக்கலைஞர்கள் நந்தேஷ் சிவராஜா, அர்ஜூனன் புவீந்திரன், அக்ஷன் வாசவன் & பைரவி சிவராஜா . Let our community invite these young artists instead of spending thougsands of dollars in bringing down Senior artists from South India

Kala said...

இந்த நிகழ்ச்சி மிக நன்றாக இருந்தது. இளம் கலைஞர்கள் சேர்ந்து செய்தது பாராட்டப் படவேண்டியதே. இளம் கலைஞர்கள் தொடர்ந்தும் இப்படியான நிகழ்வுகளுக்காக கடினமாக உழைக்கவேண்டும் அத்தோடு பெரியவர்கள் இவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்

கலா