Hartley கல்லூரியின் நான்காவது கலைச்சுவை 2013- Ramesh Nadarajah

.



Hartley கல்லூரியின் நான்காவது கலைச்சுவை 2013 நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை 14/09/2013 Bhai centre இல் நடை பெற்று முடிந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கும் ஒரு ரசிகனாக இம்முறையும் சென்றிருந்தேன்.

நேர்த்தியான, தரமான நிகழ்சிகளையும், மிக முக்கியமாக எமது சமூகத்தினரின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் என்பதற்க்காகவே Hartley பழைய மாணவர்கட்கு ஒரு சபாஷ் போடலாம்.

மேலும் பழைய மாணவர்கள் suit அணிந்து பார்வையாளர்களை வரவேற்ற விதம், இந்த நிகழ்ச்சியின் தரத்தை மேலும் உயர்த்தி நின்றது.



6.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் என்று போடப்பட்டிருந்தது, சரியாக 6.00 மணிக்கு வரவேற்புரை தலைவர் Krishnakumaran உரையுடன் ஆரம்பித்தது. இதுவே அவர்களின் பிரமாதமான திட்டமிடலை காட்டியது. 

இந்த வருட நிகழ்ச்சி Hartley பழைய மாணவர்க்கு ஒரு விசேடமான வருடம் கூட, Hartley கல்லூரி ஆரம்பித்து 175 வருடங்கள் ஆகி விட்டது என்று தலைவர் Krishnakumaran கூறினார். மேலும் பழைய மாணவர் சங்கம் பாடசாலைக்கும்,போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வளர்ச்சிக்காகவும் ஆற்றி வரும் சேவைகளையும் கூறினார்.

சரி இனி நிகழ்ச்சிக்குள் போவோம், தொகுப்பாளர்கள் J J Jeyachandra , Babitha Selvananthan மிகவும் அழகாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள், தேவையில்லாத அலட்டல்கள் இல்லாமல் அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.
குத்து விளக்கேற்றி , பிரதம விருந்தினர் உரை, 1 நிமிட மௌனம், Babitha வின் குரலில் தமிழ் மொழி வாழ்த்து, தேசிய கீதம், Ragulan  Subenthiran குரலில் கல்லூரி கீதம் என்று மிகவும் அழகாக ஆரம்பித்தது நிகழ்சிகள்.

திருமதி Pathmaranjini Umashankar இன் "Pathmaalaya Academy of fine arts " இனரின் நடனம், கண்ணுக்கு குளிர்மை தந்தது மட்டும் அல்லாமல் , எமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தி சபயோர்களை மெய் சிலிர்க்க வைத்தது...ஒவ்வொரு குழந்தையும் ஒரு தேவதை போல் காட்சி அளித்தது மற்றும் நடன அமைப்பு கண்களுக்கு விருந்து.


நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்தது , கலக்க போவது யாரு என்ற புது முயற்சி. இது ஆஸ்திரேலியா மேடைகளுக்கு புதிது என்றே கூறலாம்.மற்றும் ஒரு கன்னி முயற்சி, எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர நல்ல ஒரு தளம் என்பதால், இந்த நிகழ்ச்சி சற்று தரத்தில் குறைந்து இருந்தாலும், வரவேற்கப் படவேண்டிய ஒரு முயற்சி.

இந்த புது முயற்சி வரும் காலங்களில் பெரு வெற்றியை அடையும் என்பதில் எவ் வித ஐயமும் இல்லை. இதில் வெற்றி பெற்ற Raguramnkumar மண்டபத்தில் கை தட்டலை அடிக்கடி வாங்கி மக்களை மகிழ்வித்தார்.

இதனை தொடர்ந்து இராபோசனம். $25 ticket இல் ஒரு தரமான நிகழ்ச்சியை தந்து, இராபோசனமும் தந்து , மிகுதி பணத்தில் பாடசாலைக்கும் , பாதிகப்பட்ட பிரதேசங்களுக்கு உதவியும் புரியும் இந்த சங்கத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா ? 

இராபோசனத்தின் பின், அதிரடியாக ஆரம்பித்தது Viswas musical group இன் இன்னிசை மாலை. குழந்தைகளின் திறைமைகளை பார்த்த போது, எங்கே ராசா இருந்தீர்கள் இவ்வளவு நாளும் என்று தான் கேட்க தோன்றியது.
மஹா கணபதி பாடலுடன் மிகவும் சிறப்பாக ஆரம்பித்து, அதே தாளத்துடன் பனிவிழும் மலர்வனம் என்று பாடி மிகவம் அழகாக ஆரம்பித்தது.

குழந்தைகள் பல்வேறு வாத்திய கருவிகளை இசைத்து தமது திறமைகளை வெளிக்காட்டினார்கள். இவர்களை ஊக்குவிக்கும் Hartley கல்லூரிக்கு மனமார்ந்த நன்றிகள்.

எமக்கு நன்கு அறிமுகமான பாடகர்கள் Kanmani ஒரு பிரபலம் இல்லாத பாடலை பாடினாலும், அவரின் குரலில் எந்த பாடலை கேட்டாலும் சுகமாகவே இருக்கும். இருந்தாலும் அவர் பாடல் தெரிவில் சற்று கவனம் செலுத்த வேண்டுமோ என்று எண்ண தோன்றுகிறது..

தொடர்ந்து பாடிய Babitha நிகழ்ச்சியை வேறு ஒரு தளத்திற்கே எடுத்து சென்று விட்டார். அவர் பாடிய பாடல்கள் , திரைப்படத்திலும் அவர் தான் பாடி இருப்பாரோ என்ற அளவிற்கு இருந்தது...

இவர்களை தொடர்ந்து Abinayani தனது மழலை குரலில் " நிலா நிலா
என்னோடு வா " என்று பாடியபோது, நிலவே உருகி வருவது போல் இனிமையாக இருந்தது. 

இவர்களுடன் பாடிய ஏனைய அணைத்து பாடகர்களும் மிகவும் அழகாக பாடி, பார்வையாளர்களை அப்படியே கட்டி போட்டு விட்டார்கள்.

இந்த இசை மழையின் இடையில் ,சில நண்பர்கள் எழுந்து செல்வதை பார்க்க கவலையாக இருந்தது. காரணம், இதை ரசிக்க அவர்களுக்கு கொடுத்து வைக்க வில்லையே என்று.

பாடல் நிகழ்ச்சி முடிவடையும் போது, இன்னும் சில பாடல்களை பாடி இருக்கலாமே என்று எண்ணத் தோன்றியது.

இதன் பின் , Special awards வழங்கப் பட்டது.
இளைய தமிழ் மாணவர்களை ஊக்குவிக்க விருதுகள்
Babitha Selvananthan - for her outstanding support to Hartley college 
Yadevan Upendran - outstanding performance in HSC 
Branavi Rajakulasingam - outstanding performance in HSC 
Thuvaragen Jegathees - Best tamil student of the year NSW
Seyoon Ragavan - outstanding young tamil student

இவ் விருது வளங்கலு டன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

ஒரு சிறந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்த சந்தோசம், Hartley பழைய மாணவரின் கடின உழைப்பு,எமது கலைகளை ,கலைஞர்களை ஊக்குவிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி கூறிக்கொண்டு நாமும் வீடு திரும்பினோம்.


Ramesh Nadarajah

2 comments:

Haran said...

Well done Hartley boys.
Every one in Sydney has to follow this step& promote young singers and music. We don't want Indian artist in Sydney.

Anonymous said...

"6.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் என்று போடப்பட்டிருந்தது, சரியாக 6.00 மணிக்கு வரவேற்புரை தலைவர் Krishnakumaran உரையுடன் ஆரம்பித்தது. இதுவே அவர்களின் பிரமாதமான திட்டமிடலை காட்டியது"
Well said Ramesh and lot of schools can learn from this.
"இதனை தொடர்ந்து இராபோசனம். $25 ticket இல் ஒரு தரமான நிகழ்ச்சியை தந்து, இராபோசனமும் தந்து , மிகுதி பணத்தில் பாடசாலைக்கும் , பாதிகப்பட்ட பிரதேசங்களுக்கு உதவியும் புரியும் இந்த சங்கத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா ? "
Dinner was bit too generous. But some OBA's have become a commercial operation now and doesn't care about community expectations. They spend extravagantly to show-off.
"ஒரு சிறந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்த சந்தோசம், Hartley பழைய மாணவரின் கடின உழைப்பு,எமது கலைகளை ,கலைஞர்களை ஊக்குவிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி கூறிக்கொண்டு நாமும் வீடு திரும்பினோம்."
Again well said and Haran also touched on this. I won't say we don't need Indian Artists from India, but there is a time and place for it. OBAs should encourage local talent and build our cultural values in our kids. Even OBAs start bring in Artists from India then where would these kids get an opening. Welldone Hartley