உலகச் செய்திகள்


பாகிஸ்­தானில் தேவா­ல­யத்தின் மீது தற்­கொலை குண்­டு­தா­ரிகள் தாக்­குதல்; 81 பேர் பலி

நைரோபி கடைத் தொகுதி தமது கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு படையினர் அறிவிப்பு

பாகிஸ்தான் பூகம்பம்: 280 பேர் பலி

பாகிஸ்­தானில் தேவா­ல­யத்தின் மீது தற்­கொலை குண்­டு­தா­ரிகள் தாக்­குதல்; 81 பேர் பலி

23/09/2013  வட­மேற்கு பாகிஸ்­தானில் பெஷாவர் நக­ரி­லுள்ள தேவா­ல­ய­மொன்றில் ஞாயிற்­றுக்­கி­ழமை இரு தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களால் நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தல்­களில் 81 பேர் பலி­யா­ன­துடன் 100 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

கடந்த சில வரு­டங்­களில் பாகிஸ்­தானில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான தாக்­குதல் சம்­ப­வ­­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது.



காய­ம­டைந்­த­வர்­களில் பலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட வேளை அந்த தேவா­ல­யத்தில் சுமார் 400 பேர் வரை இருந்­த­தாக கூறப்படுகிறது. தாக்குதலையடுத்து குறித்த தேவாலயத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நைரோபி கடைத் தொகுதி தமது கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு படையினர் அறிவிப்பு

24/09/2013   கென்ய தலை­நகர் நைரோ­பி­யி­ல் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைத் தொகு­தியை முற்றிலும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கடைத்தொகுதியில் பாதுகாப்பு பிரிவினர் தேடல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி ஆக்கிரமிப்பின் போது போராளிகளால் 62 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போரா­ளிகள் கடந்த சனிக்­கி­ழமை மேற்­படி வெஸ்ட்கேட் கடைத்­தொ­குதியை ஆக்கிரமித்து தாக்­கு­தலை நடத்தினர்.
இதன்போது அங்கு சுற்றுலாப் பயணிகள் உட்பட பலர் இருந்துள்ளனர்.
இவர்களை போராளிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

தாமே இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக அல் ஷபாப் போரா­ளிகள் உரிமை கோரி­னர்.
இந்தத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களில் கென்ய வானொலி அறி­விப்­பா­ள­ரான ருஹிலா அட­ரியா – சூட், கானா கவிஞர் கொபி அவூனொர், ஜனா­தி­பதி உஹுறு கென்­யட்­டாவின் மரு­ம­கனான முபு­குவா மவன்கி, மவன்­கியின் எதிர்­கால மனைவி ரோஸ்மேரி வஹிட்டோ, கனே­டிய இரா­ஜ­தந்­தி­ரி­யான அன்­ன­மேரி டெஸ்­லொஜஸ், இரு பிரான்ஸ் நாட்­ட­வர்கள், அவுஸ்­தி­ரே­லியர் ஒருவர், 3 பிரித்­தா­னி­யர்கள், சீனப் பெண்­ணொ­ருவர், பிறி­தொரு கனே­டிய பிரஜை, நெதர்­லாந்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், தென்­கொ­ரிய பிரஜை ஒருவர், இரு இந்­தி­யர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இந்நிலையில் போரா­ளி­களால் பணயக்கைதி­க­ளாக பிடித்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை மீட்கும் முக­மாக அந்தக் கடைத் தொகு­தியை சூழ பெரு­ம­ளவு படை­யினர் குவிக்­கப்­பட்­டனர்.
அவர்களை மீட்கும் பணியும் தொடங்கியது. தாக்குதலில் பெருமளவானோர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்துமுள்ளனர். பலர் உயிராபத்தின்றி மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் தொடர்ந்து பலர் பண­யக்­கை­தி­க­ளாக பிடித்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் துப்­பாக்கி வேட்டு சத்தங்­களும் வெடிப்பு சத்­தங்­களும் கேட்ட வண்ணம் உள்­ள­தா­கவும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் கூறு­கின்­றன.







பாகிஸ்தான் பூகம்பம்: 280 பேர் பலி

25/09/2013   பாகிஸ்தானில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தபட்சம் 280 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு பாகிஸ்தானில் ஈரானிய எல்லையை ஒட்டிய பகுதியில் பல மண் குடிசைகள் உடைந்து விழுந்தமையால் பலர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் பளுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பமானது தெற்காசியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
பல வீடுகள் அழிவடைந்துள்ளதுடன் தொலைத்தொடர்பாடல் செயற்பாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் நூற்றுக்கணக்காணோர் இதனால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஹெலிகொப்டர்களும் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் டெல்லியில் நேற்று இப் பூகம்பம் உணரப்பட்டுள்ளதுடன் அங்கு கட்டிடங்களும் குலுங்கியுள்ளன.
இதேவேளை நேற்று ஏற்பட்ட சக்தி வாய்த பூகம்பத்தையடுத்து அந்நாட்டின் குவாடார் கரையோரப்பகுதியிலிருந்து 600 மீற்றர் தொலைவில் அரேபியக் கடலில் சிறிய மலை போன்ற தீவொன்று உருவாகியுள்ளது.










No comments: