உலகத்தமிழ் இலக்கிய மாநாடு இரண்டாம்,மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் -செ .பாஸ்கரன்

.


சிட்னியில் 6ம் 7ம் 8ம் திகதிகளில் சிட்னி தமிழர் மண்டபத்தில் நடந்த உலகத்தமிழ் இலக்கிய மாநாடு சிட்னி தமிழர்களை மட்டுமல்லாது உலகத்தமிழர்களை ஒன்றுகூட்டியிருந்தது. விஜிபி உலகத்தமிழ்ச்சங்கமும் தமிழ்இலக்கிய கலைமன்றம் ஒஸ்ரேலியாவும் சேர்ந்து இந்த மூன்றுநாள் நிகழ்ச்சியை நடத்தியிருந்தது.


காலை மாலை என்று மூன்று நாட்களும் நடந்த இந்த தமிழ் மாநாட்டிற்கு பிரபல தொழிலதிபரான செவாலியர் டாக்டர் வி ஜி சந்தோசம் பிரதம நீதியரசர் வள்ளிநாயகம் கவிக்கோ அப்துல் ரகுமான் முனைவர் அவ்வை நடராஜன் முனைவர் வாசுகி கண்ணப்பன் முனைவர் விஜயலஸ்மி ராமசாமி ரிகே எஸ் கலைவாணன் முனைவர் பத்மநாதன் இப்படி மாபெரும் அறிஞர்கள் பேச்சாளர்கள் என்று மேடையில் தமிழ்முழக்கம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாகவும் கிடைத்தற்கரிய ஒரு தமிழ் விழாவாகவும் இருந்தது.

தொடர்ந்து நடந்த இரண்டாம் நாள் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளில் தமிழ்க் கல்வி நிலைய 


மாணவர்களின்  நாடகங்கள் நாட்டிய நிகழ்வுகள் என்பனவும். இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த முனைவர் வாசுகி கண்ணப்பன் முனைவர் விஜயலச்மி இராமசாமி  ஆகியோரின் கதை இசைப்பொழிவும்
கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கும்  தொடர்ந்துஅவ்வை நடராஜன் தலைமையில் பட்டிமன்றமும் இடம் பெற்றது.  மண்டபம்  நிறைந்த மக்கள் கூட்டமாக இருந்த இந்த நிகழ்வு சிறப்பாக இருந்தது.  

இதுபற்றிய விபரங்களும் படங்களும் அடுத்த வாரமும் தொடரும். 

நிகழ்வுகளின் படங்களை கீழே காணலாம்.


No comments: