சிட்னியில் நடைபெறவிருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்த ஒரு முக்கிய செய்தி
எதிர்வரும் சனிக்கிழமை (21.09.2013) சிட்னியில் நடக்கவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி நடக்கமாட்டாது
கடந்த வெள்ளிக்கிழமை (13.09.2013) அன்று இந்தியாவுக்கு தொலைக்காட்சி நிறுவனத்துடன் பேசுவதற்ககாகவும் இதர வேலைகளை முடிப்பதற்காகவும் என்று புறப்பட்ட Symphoney Entertainers இன் பொறுப்பாளரான திரு கதிருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது குடுப்ம்பத்தார், மற்றும் நண்பர்கள், Australia Police மற்றும் குடிவரவுத் துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.
திரு கதிர் அவர்கள் இரண்டு நாளுக்கு ஒரு தடவை மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தவரைப் பொறுத்த மட்டில், அவரது நலம் குறித்து கடுமையான கவலை நிலவுகின்றது.
சிட்னியில் நடைபெறவிருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியின் முழுப் பொறுப்புக்களையும் கொண்ட இவர் எங்கிருக்கிறார் எப்படி இருக்கிறார் என்று தெரியாத தர்மசங்கடமான சூழலில் இந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்யும் முடிவுக்குத்தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கும் மனம் வருந்துகின்றோம்.
புரிதலுக்கு மிக்க நன்றி
1 comment:
கதிரைத் தேடும் தாமரை நாங்கள்
என்ன நடக்குது இங்கே
Post a Comment