உலகத்தமிழ் இலக்கிய மகாநாட்டு பேச்சுப்போட்டி

.


உலகத்தமிழ் இலக்கிய மகாநாட்டு பேச்சுப்போட்டி திருக்குறள் மனனப் போட்டி என்பன துர்க்கைஅம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை இடம்பெற்றது. இப்போட்டிகளில் பல வயதுப் பிரிவுகளில் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டிகளை மகாநாட்டு கல்விக்குழுவினர் முன்நின்று நடாத்தினார்கள். இதில் பல நடுவர்கள் பங்காற்றி பரிசுக்கான மாணவர்களை தெரிவு செய்தார்கள்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைவர் திரு மகேந்திரன் இதில் கலந்து கொண்டு பரிசில்கள் பெறும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கலந்து கொண்ட அனைவருக்கும் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் உலகத்தமிழ் இலக்கிய மகாநாட்டில் பரிசில்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டடார்.
இந்நிகழ்சியில் பங்குகொண்ட மாணவர்களில் சிலரையும் நடுவர்கள் பெற்றோர்கள் ஆகியோரையும் படங்களில் காணலாம்.


No comments: