இன்றைக்கு
முப்பது வருடங்களுக்கு முன்பு,எனது பெற்றோர் வீரர்களாக இருந்துள்ளார்கள்.
நேற்று வரைகூட எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது.
கோட்டைப்
பகுதியில் வேலை செய்யும் எனது தாய் வீடு திரும்பும் வழியில் கட்டிடங்கள்
தீப்பிடித்து புகையினால் மூடப்பட்டிருப்பதையும், டயர்கள் எரிவதையும்
மற்றும் குழப்பம் நிகழ்வதையும் கண்டுள்ளார். அவரது சக தமிழ் ஊழியர்களுக்கு
அலுவலக வாகனங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு முதலில் வீடு செல்ல
அனுமதிக்கப் பட்டார்கள். தமிழ் பெண்ணான அவரது சக ஊழியர் ஒருவர் மூக்குத்தி
அணிந்து பெரிய பொட்டும் வைத்திருந்தார்,அவரது சொந்த பாதுகாப்புக்காக
எல்லோரும் அதை அகற்றும்படி வற்புறுத்திய போதிலும் அவர் அதை அகற்ற
மறுத்துவிட்டாராம். எனது தாய் நுகேகொடவிலும், அவரது தலைமை அதிகாரி
இரத்மலானையிலும் வசிக்கின்றபோதிலும், எனது அம்மாவும் அவரது தலைமை
அதிகாரியும் பாதுகாப்பாக இருப்பதற்காக அந்தப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் உள்ள
அவரது வீட்டில் தாங்களே கொண்டு சென்று சேர்ப்பிப்பது நல்லது என்று
தீர்மானித்தார்கள்;.
எனது
தந்தைக்கு மிகவும் நெருக்கமான தமிழ் நண்பர் ஒருவர் அவரது மனைவியுடன்
வெள்ளவத்தையில் வசித்தார். அப்பா அவர்கள் இருவரையும் இரத்மலானைக்கு
அழைத்துச் சென்றார், அங்கு பெரிய பௌத்த கோவிலின் பிரதம குருவான அவரது
மற்றொரு நெருங்கிய நண்பர் எனது தந்தையின் தமிழ் நண்பர்களை கோவிலுக்குள்
மறைத்து வைத்து அவர்களுக்கு புகலிடம் அளித்தார். வெள்ளவத்தை மற்றும்
இரத்மலானை ஆகிய இரண்டு இடங்களும் அந்த ஜூலையில் மிகவும் மோசமான நிகழ்வுகள்
சிலவற்றை சந்தித்திருந்தன.
நான்
1983ம் ஆண்டு கலவரங்களுக்குப் பின்புதான் பிறந்தேன், எனவே இந்த இருண்ட
காலத்தைப்; பற்றிய நினைவுகள் எதுவும் எனக்கில்லை. எங்கள் பாடசாலை சரித்திர
பாடப்புத்தகத்தில் பல முக்கியமான விடயங்கள் சேர்க்கப்படாததை போலவே இந்த 83
கலவரங்களைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, எனவே பாடசாலையில் நான்
அதைப்பற்றி படித்திருக்கவில்லை. அந்த நேரத்தில் அதைப்பற்றிய நினைவிருந்த
எனது நண்பர்களிடமிருந்தும், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவும்தான்
நான் அதைப்பற்றி அறிந்தேன். ஆனால் அது எப்போதும் நீண்ட காலத்துக்கு முன்பு
நடைபெற்ற ஒரு விடயத்தின் மணம் நிறைந்த காற்றை போல வீசிக்கொண்டிருந்தது,
எனது தலைமுறையை சேர்ந்த அநேக சிங்களவர்கள் பெரும்பாலும் அந்த கறுப்பு
ஜூலையின் கனமான ஈர்ப்பினை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
கிறவுண்ட்
வியு அந்த 30 வருட செயல்திட்டத்தின் ஒரு பகுதியான ‘செய்திப் பட’
நிகழ்வுக்கு அழைத்தபோது, நாங்கள் அதை உடனே ஏற்றுக்கொண்டோம். அதற்கான பிரதான
காரணம் எனது சக பொறுப்பாளர்களான அனுஷ் விஜேசிங்க மற்றும் ஆர்த்தி தர்மதாஸ
அகியோரும் நானும் இந்த செய்திப் பட நிகழ்வை ஆரம்பித்தது ஏனென்றால் எங்களைச்
சுற்றி நாங்கள் காணும் மாற்றங்களையும் மற்றும் அபிவிருத்திகளையும்
ஆவணப்படுத்த வேண்டியது அவசியம் என்று நாங்கள் உணர்ந்ததுதான் .புகைப்படங்கள்
மூலமாக ஸ்ரீலங்காவின் காப்பகத்தை உருவாக்க விரும்பினோம், எனவே வருடங்கள்
கழியும்போது, நாங்கள் இதனூடாகத்தான் வாழ்ந்திருக்கிறோம், இதுதான் எங்கள்
அனுபவங்கள், இந்தக் கணத்தில் எங்களை சுற்றியுள்ளது இவைகள்தான் என்பதை
நாங்கள் நினைவு கொள்வோம்.
30
வருட செயல்திட்டத்திற்காக சட்டகப்படுத்தி கருவாக்க முயன்ற அம்சங்களுக்காக
நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி ஒரு விடயத்தை எங்களுக்கு கற்றுத்தந்தது -
நாங்கள் மறந்துபோன, புதையுண்டுபோன, அங்கீகாரம் பெறாத, அதிகம்
முக்கியத்துவம் வழங்கப்படாத அநேக விடயங்கள் கடந்த 30 வருடங்களாக
நடைபெற்றிருக்கின்றன என்பதுதான் அது. நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த
டிஜிட்டல் யுகத்துக்கு நன்றி சொல்ல வைத்தது ஏனென்றால் ஞாபகம்
வைத்திருப்பதும் மற்றும் காப்பகத்தில் சேகரிப்பதும் சிறப்புரிமை பெற்ற ஒரு
சிலருக்கு மட்டும் சொந்தமானதல்ல ஆனால் அது ஒவ்வொரு குடிமகனினதும் கைகளிலும்
தங்கியுள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அதே செறிவில் கறுப்பு ஜூலை
நிகழ்வுகள் ஆவணமாக்கப் பட்டிருந்தால் இன்று அதை நாங்கள் எங்கள்
கைத்தொலைபேசிகள், புகைப்படக்கருவிகள், வில்லைகள் போன்றவற்றில்
காணக்கூடியதாக இருந்திருக்கும். இன்னும் அதிகமானவற்றை நாங்கள் நினைவில்
கொண்டிருப்போமா? இன்னும் அதிகமானவற்றை நன்றாக அறிந்திருப்போமா? அந்த
வலியையும் மற்றும் வேதiயையும் அனுபவித்திருப்போமா? பொறுப்புக்கூறல் இடம்
பெற்றிருக்குமா?
இந்தக்
கேள்விகளுக்கான பதில் என்னிடம் இல்லை. இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்பு
அது எப்படி இருந்திருக்கும் என்று என்னால் கற்பனை மட்டுமே செய்ய முடியும் -
2009ல் முடிவடைந்த 27 வருட யுத்தத்தை பற்றி மட்டுமே அறிந்த எனக்குப்
பின்பு பிறந்தவர்களைப் போல. எனது தலைமுறையினர், வளர்ந்து வரும்
சகிப்புத்தன்மையற்ற நிலை, ஊழல் மற்றும் தண்டனை விதிவிலக்கு, என்பன நிறைந்த
காலத்தில் பிறந்து தொடர்ந்து அதற்கு சாட்சிகளாக உள்ளார்கள். எனது தாயாரிடம்
கூட 30 வருடங்களுக்கு முன்பு இது நடந்தபோது, அவர் என்னவாக இருந்தார் என்ன
செய்து கொண்டிருந்தார் என்பதைக் கேட்பதற்குகூட எனக்கு இத்தனை வருடங்கள்
எடுத்துள்ளதே. நான் இதை ஏன் முன்பே கேட்கவில்லை என்று எனக்கே தெரியவில்லை.
இதைப் பற்றி வெட்கப்படுவது நான் மாத்திரமல்ல, என்பதில் எனக்கு சந்தேகமில்லை
- எனது தலைமுறையை சேர்ந்த அநேகர் இதேபோலத்தான் இருப்பார்கள் மற்றும்
இதுதான் பயங்கரமானதாக உள்ளது. மிகவும் இருள்மயமான அந்த கடந்த
காலத்தைப்பற்றி எங்களுக்கு மிகச்சிறிய புரிதலே இருப்பதால்,எதைக் கவனிப்பது,
எதைத் தடுப்பது,எதை நம்புவது என்று எப்படி நாங்கள் அறிந்து கொள்வது?
இன்றைக்கு
30 வருடங்களுக்கு முன்னர் எனது பெற்றோரின் அந்த நாள் மிகவும் வித்தியாசமாக
முடிவடைந்திருந்தால், இந்தக் கட்டுரை மிக மிக இருளடைந்த கதை ஒன்றை
சொல்வதாக இருந்திருக்கும். 30 வருடங்களுக்கு முன்பு எனது பெற்றோர்,எனது
வீடு,மற்றும் எனது நண்பர்கள் எளிதாக தாக்குதலுக்கு உட்பட்டிருந்தால் -
அதைத்தான் இன்றைக்கு நான் நினைத்திருக்கவேண்டியதாக இருந்திருக்கும்.
அப்போது நான் வாழ்ந்திருக்காவிட்டாலும் அதுதான் நான் ஒருபோதும் மறக்க
முடியாத ஒன்றாக இருந்திருக்கும்.இது மீண்டும் நடக்க முடியும் என்பதை அது
எனக்கு நினைவூட்டும்
எனக்கு
முன்னால் வாழ்ந்த சிலர் அமைத்த சரியான உதாரணங்களையும் மற்றும் சரியான
செயல்களையும் பின்பற்றி அவர்களின் அடிச்சுவட்டை நான் பின்தொடர வேண்டுமா?
எதையும் பொருட்படுத்தாமல் பின் திரும்பி நின்று கவனிக்க வேணடுமா? அப்படியான
ஒன்று நடப்பதற்கு முன்பு அதை தடுப்பதற்கான ஏதாவது செய்ய வேண்டுமா அல்லது
நான் பார்க்கவில்லை என்று நம்பி மௌனமாக இருக்க வேண்டுமா? என்னுடைய கடந்த
காலம் மற்றும் நிகழ்காலம் என்பன அடுத்த தலைமுறையினரால் கூட மறக்கமுடியாதபடி
இருக்கவேண்டும் என்பதை நான் நிச்சயம் செய்யவேண்டுமா?
என்னுடைய
தலைமுறையினருக்கான கேள்விகள் இவை மற்றும் நேரம் வரும்போது இதற்கான சரியான
பதில்களை நாம் தேர்ந்தெடுப்போம் என நான் நம்புகிறேன்.
தொடரும் நன்றி தேனீ
No comments:
Post a Comment