வீடு
எனது வீட்டிலிருந்து தெரியும் காட்சி
30
வருடங்களுக்கு முன்பு நான் உயிரோடு கூட இருந்திருக்க மாட்டேன் ஆனால் நான்
இதே இடத்தில் நின்று, இதே திசையை பார்த்துக் கொண்டிருந்திருந்தால்,
காற்றிலே கரும்புகை கலந்து செல்வதை நான் கண்டிருக்கக்கூடும், ஒருவேளை
சீரூந்துகள் மற்றும் கட்டிடங்கள் என்பனவற்றில் இருந்து தீச் சுவாலைகள்
எழுவதையும் கண்டிருக்கலாம், சித்திரவதைப் படுபவர்களின் அலறல்களையும்
மற்றும் குண்டர்களின் எக்காள ஒலிகளையும் கேட்டிருப்பேன், எரிந்து
கொண்டிருக்கும் இறப்பர் மற்றும் மரம் என்பனவற்றின் கருகல் மணம் எனது
நாசியை துளைத்திருக்கும், எனது இனம் எனக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு காரணமாக
நான் வீட்டுக்குள் நுழைந்திருப்பேன்.
கடந்த
இரண்டு மாதங்களாக நான் 1983க்குள் மூழ்கியிருந்தேன், அந்த வாரத்தின்
துயரம் இரத்தம் சிந்தல், மற்றும் வன்முறை என்பனவற்றை ஒரு புதிய உணர்வுடன்
இந்த காட்சியூடாக கண்டேன். நான் ஒரு வயதான பெண்மணியை சந்தித்தேன்,
இழந்துபோன தனது கல்யாணப் புகைப்படங்களைப் பற்றிச் சொன்னபோது அவளது கண்கள்
கண்ணீரால் நிறைந்திருந்தன, ஒரு இளைஞன் தங்கள் வீதியிலுள்ளவர்களின்
பாதுகாப்புக்காக தனது தந்தை அந்த வீதியை காவல் காத்ததைப் பற்றிச் சொன்னான்.
ஒரு பெண்மணி இந்தியாவுக்கு தப்பி ஓடிய பிறகு தனது வீட்டுக்காக ஏங்கி
வாடுகிறாள், ஒரு மகன் தொலைந்துபோன தனது பெற்றோர்களைப் பற்றிப் பேசினான்,
மற்றும் ஒரு மகள் அந்த நள்ளிரவில் ஒளிந்து கொள்வதற்காக தனது வீட்டுக்கு
வந்த சிநேகிதர்களை நினைவு கூர்ந்தாள்.
கறுப்பு
ஜூலையின் யதார்த்தம் படு பயங்கரமானது என்னால் கற்பனை செய்யக்கூட
முடியாதது, மற்றும் அதைப்பற்றி நான் கேள்விப்பட்ட வித விதமான கதைகள்
இன்னும் உள்ளன. ஒரு எரிந்த தோட்டத்தின் முன்னால் நிற்பதைப்போலவோ, ஒரு
காலத்தில் என்னுடைய வீடாக இருந்து இப்போது கருகிய சிறு கற்களாக காட்சி
தரும் எனது வீட்டை வெறித்து பார்ப்பது போலவோ அல்லது காற்றில் துண்டு
துண்டாக சிதறுண்டு கிடக்கும் எனது உடமைகளை தேடுவது போலவோ நான் கற்பனை
செய்ய முயற்சிப்பது உண்டு. எனது கற்பனைகளை அதற்கப்பால் நகர்த்த முயன்றும்
முடியாமல் போனது.
சிலர்
புதிய வீடுகளை கட்டினார்கள். சிலர் மீள் கட்டமைத்தார்கள், சிலர் வேறு
இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள், சிலர் பாதுகாத்தார்கள், மற்றும் சிலர்
மறந்து போனார்கள். சிலருக்கு வீடு என்பது இன்னமும் ஒரு கை நழுவும் கனவு,
பாதுகாப்பு மற்றும் உடமைகள் என்பன மங்கிப்போன ஒரு ஞ}பகம். ஒருவரது வீட்டை
அவர்களிடமிருந்து பறிப்பது, அவர்களின் இதயத்தை அவர்களின் சரணாலயத்தை
பறிப்பது போன்றது என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.
கறுப்பு ஜூலையின்போது எனக்கு வயது மூன்று
- நட்டாலி சொய்சா
இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்பு கறுப்பு ஜூலையின் போது எனக்கு 3 வயது.
அந்த
வயதில் சிங்களவர் அல்லது தமிழர் அல்லது முஸ்லிம் என்றால் வித்தியாசம் என்ன
என்று எனக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. மற்றபடி அதைக் கற்றுக்கொடுத்த
அந்த முப்பது வருடங்கள் மீது எனக்கு அளவற்ற கோபம் ஏற்படுகிறது.
‘30
வருடங்களுக்கு முன்பு’ என்கிற முயற்சிக்காக கிறவுண்ட் வியு நியமித்திருந்த
சச்சினி பெரேரா, அதில் பங்கெடுக்கும்படி விடுத்த அழைப்பினை ஏற்று கடந்த 6
வாரங்களையும் நான் அவளுடன் கழித்தேன். எங்களுடைய தனித்துவமான செயல்முறைத்
திட்டம் நாங்கள் ஒருமித்து புகைப்படம் எடுத்து நேர்காணல் செய்த 40க்கும்
மேற்பட்ட பெண்களின் கதைகளை உள்ளடக்கியது. அந்த அனுபவம் ஒரு வளர்ச்சி
மற்றும் நுண்ணறிவு என்பனவற்றை பெறும் ஒரு நடவடிக்கையாகவே எங்களுக்கு
அமைந்தது.
எங்களது
பயணத்தின் கடைசிக் கட்டத்தின்போது, இரண்டு இளம் பிள்ளைகளின் தாய் ஒருவரை
நாங்கள் நேர்காணல் செய்தோம். அவருடைய உரையாடலின் ஒரு கட்டத்தில் அவளுடைய
சிறிய பிராயமுள்ள மகள் அவளிடம் குண்டு என்றால் என்ன என்று கேட்டதாக அவள்
குறிப்பிட்டது என்னில் தொடர்ந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அந்தச்
சிறுமியின் வயதில் நான் இருந்தபோது அப்படி கேட்க வேண்டிய அவசியம் எனக்கு
ஏற்படவில்லை. ஆம் நாங்கள் இப்போது வெளிப்படையான சமாதான காலத்தில்
வாழ்கிறோம். அதற்கான செலவு எப்படியாயினும் மிகவும் அதிகம்தான், அதன்
பின்னிலுள்ள அதிர்வுகள், வெகு எளிதான ஒரு சமாதானத்தை அனுபவிப்பதற்காக நாம்
மிகவும் பிடிவாதமுள்ள ஒரு இனமாக இருந்திருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துவது
இன்னமும் வரலாற்றுப் பதிவேடுகளில் எதிரொலிக்கின்றன.
இன்று
நான் ஒரு பெற்றார் மற்றும் பல உணர்வுகளில் எனது வெளிப்பார்வையை அது
முற்றாக மாற்றியமைத்துள்ளது. நான் எனது இனத்தைப்பற்றி ஒன்றில் பெருமையோ
அல்லது வெட்கமோ கொள்வதில்லை மாறாக என்னை அடையாளப் படுத்துவதற்காக எந்தப்
பதத்தை பயன்படுத்த வேண்டும் என்கிற நிலையை நான் இப்போது கடந்துவிட்டேன்.
ஒரு சிலரது செயல்களுக்காக முழு சமூகமுமே கூட்டாக பொறுப்பேற்கும்படி
இல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனும் தனது செயல்களுக்காக தானே பொறுப்பேற்க
நினைக்கும் ஒரு சூழலில் எனது மகனை வளர்க்க நினைக்கிறேன்.
இப்போது
எனது மகன் வெளிப்படையான வன்முறையில்லாத ஒரு நாட்டில் வளர்கிறான். தப்பான
இடத்தில் தப்பான நேரத்தில் நிலையாக இருப்பதற்கு சாத்தியமுள்ள, தினசரி
சோதனைச் சாவடிகளிலும் மற்றும் துப்பாக்கிகளுக்கும் முன்பாகவும்,குண்டு
வெடிப்புகளை, மற்றும் சிதறிக் கிடக்கும் மனித உடற்கூறுகளை தனது கண்களால்
காண்பதற்கும், வன்முறைகளுக்கான பெரிய வெளிப்படையான அடையாளங்களை
அறிவதற்கும் அவன் தன்னை வெளிக்காட்ட வேண்டியதில்லை. விடயங்கள் இப்போது
நாசூக்கான ஒரு நிலையில் நடக்கின்றன. கண்களுக்கு அப்பட்டமாக தெரியக்கூடிய
ஒன்றிலிருந்து எப்படி உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது?
வன்முறையை
தூண்டுபவர்களில் எத்தனை பேர் தாங்களே ஒரு பெற்றோராக இருப்பார்கள் என்று
நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. அடுத்த தலைமுறையை வளர்ப்பதில் எங்களுக்கும்
பொறுப்புண்டு என்று நான் நினைக்கிறேன் மற்றும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை
கொண்டு செல்லும்போது அடிக்கடி இதை மறந்துவிடுவதைப்போல தோன்றுகிறது. அதனால்
நானும் குற்றவாளிதான்.
இன்று
காலை எனது மகனை எனது கைகளில் எடுத்தபோது, அவனது வரவு எனது வாழ்க்கையில்
என்னத்தை செய்யப்போகிறது என்கிற எண்ணம் எழுந்தது, எனது கருப்பையில் இருந்து
அவன் தனது முதல் துடிப்பை ஏற்படுத்தியபோதே அவன் என்னை ஒரு நல்ல ஆளாக
மாறவேண்டும் என விருப்பம் கொள்ள வைத்துவிட்டான்.சிறு பிராயம் முதலே நான்
கொண்டிருந்த, இந்த உலகத்தை மாற்றவேண்டும் என்பதைப் போன்ற பகட்டான
கருத்துக்கள், ஒரு சாதாரண உண்மை மூலமாக உருகிப்போனது, உலகத்தை என்னால்
மாற்றமுடியாது,என்னை மாற்ற மட்டுமே என்னால் முடியும் என்பதுதான் அந்த
உண்மை.
நீங்கள்
ஒரு பெற்றாராக இருந்தால்,இன்று நான் உங்களிடம் ஒரு விடயம் பற்றி
சொல்கிறேன். வீட்டுக்குப் போய் உங்கள் பிள்ளையை தூக்கிக் கொள்ளுங்கள்.
அவர்கள் உங்களுடன் இல்லாவிட்டால் தொலைபேசியை எடுத்து ஒரு அழைப்பை
ஏற்படுத்துங்கள். தொடர்பை ஏற்படுத்தி நீங்கள் இங்கே ஏன் இருக்கிறீர்கள்
என்று உங்களுக்கே ஞ}பகமூட்டிக் கொள்ளுங்கள்.
அடுத்த வரவுள்ள 30 வருடங்களுக்கான மாற்றத்தை அதனால் செய்ய முடியும்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் நன்றி தேனீ
No comments:
Post a Comment