சந்திப்போம் வாழ்த்துவோம் - Meet & Greet

.

சந்திப்போம் வாழ்த்துவோம் - Meet & Greet
The Hills Holroyd Parramatta Migrant Resource Centre  இன் ஆதரவோடு யதார்த்தத்தை புரிந்து கொண்டு உதவிக்கரம் நீட்டும் தொண்டர்களாய் நினைவுகளை நிஜமாக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் தான் 'சந்திப்போம் வாழ்த்துவோம்" குழுவினர்.
கடந்த கார்த்திகை திங்கள் 4ம் நாள் 2012 இல் சந்தித்த சில நலன் விரும்பிகளின் கருத்து பரிமாற்றமே இக்குழுவின் ஆரம்பம் எனலாம்.
கனமான உணர்வுகளோடு உறவுகளை பிரிந்து பிறந்த மண்ணை இழந்து எதிர்கால கனவுகளோடு படகேறி பயணித்த எம் உறவுகளுக்கு ஆறுதல் கூறி ஆதரவளிக்கும் ஒரு நிகழ்வாகவே இந்த சந்திப்பு இடம் பெற்றது.
நமது உறவுகள் தமது மனம் திறந்து உள்ளக்கிடக்கைகளை எதிர்பார்ப்புகளாக தெரிவித்த போது அவர்களுக்கு நம்மால் இயன்ற அடிப்படை உதவிகளை எவ்வாறு வழங்கலாம் என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததே இந்த 'சந்திப்போம் வாழ்த்துவோம்" குழுவாகும்.2012 தீபாவ ளி திருநாளில் ஆரம்பித்த இந்த சந்திப்பு
தொடர்ந்த நத்தார் கொண்டாட்டத்தில் வலுப்பெற்றது
 
2013 தைப்பொங்கல் விழாவோடு உயிருட்டம் பெற்றது எனலாம்.
மிகவும் அமைதியாக சில நலன்விரும்பிகளின் ஆதரவோடு ஆரம்பித்த இந்த தொண்டர் சேவை மிகவும் குறுகிய காலத்தில் தமிழ் கிறீஸத்தவ தேவாலயங்களின் அனுசரணையுடனும் சிட்ணிமுருகன் துர்க்கை அம்மன் கோவில்களின் ஆதரவோடும் எட்டி அடி வைக்க தொடங்கியிருக்கிறது என்றால் மிகையாகாது.
இக்குழுவின் செயல்பாடுகளாவன
புதிதாக வரும் தமி ழ் மக்களை சந்தித்து வாழ்த்துவது
அவர்களுக்கு தேவையான உணவு உடைகளை வழங்குவது
அவர்கள் புதிய சு10ழலில் புதிய வாழ்க்கையை தொடர்வதற்கு தேவையான அத்தியாவசிய தளபாட பொருட்களை பெற்றுக்கொடுப்பது
ஆங்கிலம் கணணி அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடிய வகுப்புகளை நடாத்துவதோடு வாகனம் ஓட்டும் அனுமதி தேர்வுகளுக்கான உதவிகளை வழங்குவது
பெண்களுக்கான ஒன்றுகூடல்களை நடாத்துவது
மாணவர்களுக்கான வகுப்புவேலை உதவிகளை வழங்குவது
தனிப்பட்ட வழிகாட்டும் (Buddy system)தொடர்புகளை அறிமுகப்படுத்துவது
வேலை வாய்ப்புகளை தேடிக்கொள்வதற்கான ஆவணங்களை தயார் செய்து கொடுப்பது
இத்தகைய தொண்டர்களின் சேவைகள் காலத்தால் உணரப்பட்டிருப்பதும் உணர்வுகளில் ஊன்றப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். மேலும் மேலும் தொண்டர்கள் இவர்களோடு சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் கரம் கோர்த்து ஒன்று பட வேண்டும் என எதிர்பார்த்து நிற்கின்றோம்.
சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினர் சார்பில்
மது எமில்
மேலதிக தகவல்களுக்கு 

The Hills Holroyd Parramatta Migrant Resource Centre. Tel No:- 02 96879901
tamilsgp@thhpmrc.org.au      /   http://www.thhpmrc.org.au

No comments: