தமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி 13 - 03 - 13


.
தமிழர் தாயகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பின் உச்சத்தை உலகத்திற்கு பறைசாற்றி, தமிழர் நீதிக்கான எழுச்சிக்குரல்கள் மேலெழுந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசின் மனிதவுரிமைகள் குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்துகின்ற இக்காலப்பகுதியில் தமிழர்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கும் தமிழர் நீதிக்கான குரல்கள் ஒலிக்கிகன்றன. இனப்படுகொலையின் சாட்சியங்களை பிரதிபலிக்கும் சனல் 4 இன் ”போர் தவிர்ப்பு வலயம்” என்ற காணொலியும் எதிர்வரும் நாட்களில் ”மறைக்கப்பட்ட சாட்சியங்களை” வெளிக்கொண்டுவரவிருக்கின்றது. மிழினத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் இன்னொரு பரிணாமத்தை மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. பாலியல் ரீதியாக நடத்தப்பட்ட சித்திரவதைகளை சாட்சியங்களுடன் அது பட்டியலிட்டுள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய வாழ் தமிழர்கள் அனைவரும் திரண்டு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு முன்னால் 13 - 03 -13 அன்று புதன்கிழமை மதியம் 121212 தமிழர்நீதிக்கான எழுச்சிப்பேரணியை நடத்தவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கான போக்குவரத்து வசதி தேவைப்படுபவர்கள் அல்லது இந்நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல் தேவைப்படுபவர்கள் சிட்னியில் 0469 089 883 மெல்பேணில் 0404 431 913 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
அவுஸ்திரேலியாவின் அனைத்துபாகங்களிலிருந்தும் அனைத்துதமிழர்களும் எழுச்சிப்பேரணியில் இணைந்துகொண்டு தமிழர் நீதிக்காக குரல்கொடுக்க உரிமையுடன் அழைக்கின்றோம்.

தமிழர் நீதிக்கான செயலணி Campaign for Tamil Justice


No comments: