.
கராச்சி குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு: வலுவடையும் ஷியா, சுனி மோதல்
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீட் கைது!
கராச்சி குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு: வலுவடையும் ஷியா, சுனி மோதல்
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீட் கைது!
கராச்சி குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு: வலுவடையும் ஷியா, சுனி மோதல்
04/03/2013 பாகிஸ்தான் கராச்சி நகரில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
கராச்சியில் அமைந்துள்ள சிதே பிரிவு முஸ்லிம்களின் பள்ளிவாசலொன்றின் முன்னாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தற்கொலைக் குண்டுத்தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் இச்சம்பவத்தில் சுமார் 149 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றைய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோராத போதிலும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய சுனி பிரிவு போராளிகள் இதனோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
ஜனவரி மாதம் முதல் ஷியா பிரிவினரை இலக்குவைத்து சுனி பிரிவினர் தொடர்ச்சியாக பல தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை சுமார் 300 பேர் வரை இதில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் மொத்த சனத் தொகையான 180 மில்லியன் பேரில் 20 வீதமானோர் ஷியா முஸ்லிம்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள், சுனி போராளிக் குழுக்களான லக்ஷர் ஈ ஜாங்வி போன்றவற்றை 1980 மற்றும் 1990 களில் வளர்வதற்கு உதவியதாகவும் இது ஷியா முஸ்லிம்களை அதிகம் கொண்ட ஈரானிடம் இருந்தான அச்சுறுத்தல்களை தடுப்பதற்கே என தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் லக்ஷர் ஈ ஜாங்வி அமைப்பை 2001 ஆம் ஆண்டு தடை செய்த போதிலும் இவ்வமைப்பு தொடர்ச்சியாக சிதே பிரிவினரை இலக்குவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவலின் படி 400 க்கும் அதிகமான ஷியா பிரிவு முஸ்லிம்கள் கடந்த வருடத்தில் மாத்திரம் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷியா பிரிவினரை பாதுகாக்க பாக். அரசு எத்தகைய நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லையென மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி
.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீட் கைது!
No comments:
Post a Comment