உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் முதன் முறையாக ஊடகத்துக்கு பேட்டியளித்த மலாலா!

ரஷ்யாவில் கடும் பனிப் பொழிவு!

மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த சவுதி நாட்டு மதபோதகர்: குருதிப் பணம் செலுத்தி விடுதலை!


துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் முதன் முறையாக ஊடகத்துக்கு பேட்டியளித்த மலாலா!

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு பின்னர்  லண்டனில் மேலதிக சிகிச்சைகளைப் பெற்று  குணமாகிவரும் மலாலா முதன் முறையாக ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
பெண் கல்வியை ஊக்குவித்த மலாலாவை தலிபான்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
மலாலாவுக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க பிரிட்டன் அரசு முன்வந்ததையடுத்து லண்டனில் உள்ள ராணி எலிசபத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி உத்தரவிட்டார்.
தற்போது, லண்டனில் உள்ள 'வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்' என்ற இடத்தில் வசித்து வரும் 15 வயதான மலாலாவின் பெயர் உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னர் முதன்முறையாக ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள மலாலா கூறுகையில், இன்று என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடிகிறது.

 
நாளுக்கு நாள் நான் நலமடைந்து வருகிறேன். உங்களை எல்லாம் பார்க்க முடிகிறது என்றால், அதற்கு காரணம் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று உலகமக்கள் அனைவரும் எனக்காக செய்த பிராத்தனை தான். உங்களுடைய பிராத்தனையின் பலனாக கடவுள் எனக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளார்.


இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை, இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும் கல்வியறிவை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இதற்காக மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன் என்றும் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53 கோடி நிதி சேர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
நன்றி வீரகேசரி

ரஷ்யாவில் கடும் பனிப் பொழிவு!
By General
2013-02-06

ரஷ்யாவின், தலைநகர் மொஸ்கோவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 216 சென்டிமீட்டர் அளவு பனி பொழிந்துள்ளது. இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது 1.5 மடங்கு அதிகமாகும்.
பனிப்பொழிவால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிற்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இது மொஸ்கோ நகருக்கும் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மெட்ரிட் நகருக்கும் இடையேயான தூரத்துக்கு சமமானது .
இந்த பனிப்பொழிவால் விமானப்போக்குவரத்திலும் மாற்றங்கள் செயப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு செல்லும் 155 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் பிரதமரின் விமானம் உள்ளிட்ட 56 விமானங்கள் வேறு இடங்களில் தரை இறக்கப்பட்டுள்ளன.  நன்றி வீரகேசரி 

மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த சவுதி நாட்டு மதபோதகர்: குருதிப் பணம் செலுத்தி விடுதலை!

By General
2013-02-04

ஐந்து வயதான மகளை வல்லுறவுக்குட்படுத்தியது மட்டுமன்றி அவரை உடல் ரீதியாக துன்புறுத்தி உயிரிழக்க காரணமாகவிருந்த மதபோதகரான அவரது தந்தை,  தாய்க்கு குருதிப் பணத்தை செலுத்தியதன் மூலம் விடுதலையான சம்பவம் சவுதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளதாக எ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/932220_orig.jpg
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது.
சவுதி அரேபியன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றும் மதகுருமார்களில் ஒருவரே பயான் அல்- கம்டி.
அவரது மகளின் பெயர் லமியா அல்- கம்டி.இவர்  கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/image_article/Fayhan%20Ghamdi.jpg
இதன் போது சிறுமியினது மண்டைப் பகுதி காயமடைந்திருந்ததுடன், விலா எலும்பு மற்றும் இடது கை ஆகியன உடைந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் உடம்பில் கீறல்கள் மற்றும் சுடப்பட்ட காயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமன்றி சிறுமியின் மலவாயிலும் கிழிக்கப்பட்டுள்ளதுடன் அதனை அவர் எரிக்க முற்பட்டுள்ளதாகவும் லமியாவின் தாய்க்கு வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமையும் பரிசோதனையிலிருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை  2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து மதபோதகரான இவரது தந்தை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவரும் மகளை துன்புறுத்தியமையை ஒத்துக்கொண்டுள்ளார்.

அவர் சிறையில் இருந்த காலப்பகுதி கொலைக்கான தண்டனைக்கு போதுமானதெனவும் எனவே குருதிப்பணத்தை தாய்க்கு செலுத்தும் படியும் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்போது தாய்க்கு குருதி பணத்தை செலுத்தி  விடுதலையாகியுள்ளார்.
அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய ஆணொரொருவன் அவனது மனைவி அல்லது மகளை கொலைசெய்வானாயின் அவனுக்கு  மரணதண்டனை வழங்க முடியாது என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இச்சம்பவத்திற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. பல மனித உரிமை அமைப்புகள் இதற்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதேவேளை குறித்த சிறுமியின் இடுப்புப் பகுதி உடைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் அனைத்து பகுதியிலும் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்ததாக லாமியா அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையைச் சேர்ந்த ராண்டா அல்- கலீப் என்ற சமூக சேகவகரொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமியின் கன்னித்தன்மையை வைத்தியர் ஒருவரைக் கொண்டு பர்யான் அல்- கம்டி பரிசோதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பயான் அல்- கம்டி போதைப் பொருளுக்கு அடிமையானவர் என வேறு சில தகவல்களும் வெளியாகியுள்ளன.   நன்றி வீரகேசரி

No comments: