சார்ல்ஸ் டார்வின் நினைவு தினம் 12.02.2013

.
டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள்இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி  எனுமிடத்தில் பிறந்தார் 
இயற்கைத் தேர்வு மூலம் கூர்ப்புக் கொள்கையை வெளியிட்டு மனிதனுக்கு உணர்த்தப்பட்ட உயிரிகளின் அடிச்சுவடுகளுக்கு காரணம் கற்பித்த அறிஞர் சார்ல்ஸ் றொபேட் டார்வின்அவர்கள் பிறந்த இந்நாளை சார்ல்ஸ் டார்வின் தினம் அல்லது டார்வின் தினமாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது.
அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒருமருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார்.சிறு வயது முதற் கொண்டே விலங்குகள்  புழுபூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
இவர் கடல் வழியேஇ எச்எம்எஸ் பீகிள்  என்னும் கப்பலில்  உலகில் பல இடங்களுக்கும் சென்றுஇ குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள்  அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும்இ இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை
இவரே மனிதன்இ குரங்கிலிருந்து பரிணமித்தவன்  உலகில் விலங்குகள் மற்றும்உயிரினங்களில் வளர்ச்சி என்பது  'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது அதாவது வலிமையானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்

No comments: