கார்த்திகை முன்னிரவு -2012 - - நிலாந்தன்-


.

கார்த்திகை முன்னிரவு -2012 - நிலாந்தன்
மழைக் குருவியின்
குளிர்ந்த பாரமற்ற குரல்
வீரர்களைப் புதைத்த காட்டில்
சலித்தலைகிறது.

ஈமத்தாழியுட்   
கார்த்திகை நிலவு       
ஒளியூறிக்கிடக்கிறது.

வழிபாடில்லை
வணக்கப்பாடலும் இல்லை

நாயகர் இல்லை
பேருரை இல்லை

நனைந்த காற்றில்
உருகிக் கரையும்     
தீச்சுடர் வாசமும் இல்லை.

பெயர்க்கப்பட்டது நடுகல்
துயிலாதலைகிறது
பெருங்கனவு.

இரும்பு வணிகர்
உலவும் காட்டில்       
பூத்திருக்கிறது
கார்த்திகைப்பூ.


/நிலாந்தன்     கார்த்திகை -2012 

No comments: