கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்


.


இயல் விருது – 2012 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில்  யூன் 16ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இயல் விருதை தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன:

புனைவு இலக்கியப் பிரிவில் 'பயணக் கதை' நாவலுக்காக  யுவன் சந்திரசேகருக்கும்,  அபுனைவு இலக்கியப் பிரிவில் 'கெட்டவார்த்தை பேசுவோம்’ நூலுக்காக பெருமாள் முருகனுக்கும், கவிதைப் பிரிவில் ’இரண்டு சூரியன்’ தொகுப்புக்காக தேவதச்சனுக்கும்,  ’எனக்குக் கவிதை முகம்’ தொகுப்புக்காக அனாருக்கும், மொழிபெயர்ப்பு பிரிவில் ’என் பெயர் சிவப்பு’ நூலுக்காக ஜி.குப்புசாமிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர் கட்டுரைப் போட்டியில் ராம் அட்ரியன் பரிசு பெற்றார்.

சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட ’கணிமை விருது’ வாசு அரங்கநாதனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.
nantri: amuttu.net

No comments: