புத்தாண்டு வாழ்த்துக்கள்...


.’’எனக்கு நீ வேண்டும்...
நீதான் வேண்டும்..
என்னுடைய இருதயம் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும் 
கடைசிவரையில்....
என்னுடைய மற்ற ஆசைகள் எல்லாம்
காலையிலும் மாலையிலும் அலைக்கழிப்பவை
வெறுமையானவை
வெளிச்சத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் இரவைப் போல்
என்னுடைய அந்தராத்மாவிலிருந்து 
ஒரே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
எனக்கு நீ வேண்டும்...
எனக்கு நீதான் வேண்டும்’’
-தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து...
என் சக்தியின் கடைசி எல்லையில் 
என் பயணம் 
முடிவுக்கு வந்து விட்டது
என் முன்னிருந்த பாதை மூடி விட்டது
சரக்கெல்லாம் தீர்ந்து 
மௌனமான மறைவில் ஒதுங்கவேண்டுமென்று நினைத்தேன்..
ஆனால்...
உன் எண்ணம் வேறு என்பது...
இப்போது புரிகிறது..
பழைய வார்த்தைகள் நாவில் மடிகையில்...
புதிய ராகங்கள் இதயத்திலிருந்து வெடிக்கின்றன..
பழைய பாதைகள் மறந்து போகையில் 
புதிய தேசம் புலனாகிறது...
-தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து...


புகைப்படங்கள்;பதிவர்,உத்தர்கண்ட் பயணத்தில் எடுத்தவை
கீதாஞ்சலி மொழியாக்க வரிகள்;வாஸந்தி
Nantri: masusila.com

No comments: