அவுஸ்திரேலியாவில் இருந்து "Australia Dreaming!” என்ற சிறுவர்களின் கலாசார நிகழ்வு.-( தமிழாக்கம் - வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி)

.

அவுஸ்திரேலியாவிற் காணப்படும் ‘அபோறியினருடைய பலவகைப்பட நம்பிக்கையின் அடிப்படையிலுள்ள ஆன்மீக ஒற்றுமைப்பாடு, ஏறக்குறைய 40,000 வருடங்களுக்கும் மேலாகக் கதைகள், பாடல்கள்;, நடனம் மற்றும் ஓவியம் மூலம் எடுத்து வரப்பெற்றதொன்றாகும். பரம்பொருளின் தெய்வீக உள்ளியல்பாகிய உயிரின் ஒளியும் அன்பின் மூச்சும் நாம் காணும் எல்லாப்பொருள்களிலும் உயிர்த் துடிப்புடன் காணப்படுகிறது. உண்மைமெய்ப்பொருளையும் ஞானநுண்ணறிவையும் உணர்ந்தறிவதற்காக போதனாபீடமாகிய éமி மாதாவிடமே நாம் திரும்பத் திரும்ப வந்தடைகிறோம்.


அவளின் நிலம், அவளின் மக்கள், அவளின் தாவரவளம் மற்றும் விலங்கு வகைகள் ஆகியவற்றுடன் இணைந்தியங்கும் பொழுது எங்கள் ஒவ்வொருவருக்கும் தெய்வீக உள்ளியலை உட்கிரகிக்க அரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தெய்வீக உள்ளியல்புகள்; எமது ஆன்மாவை விழிப்படையச்செய்து எம்மைப் படைத்த பரம்பொருளை என்றும் நினைந்தவண்ணம் இருந்து படைப்பின் நுணுக்கமான வரையறைவு செய்யப்பட்ட விதிழமுறைகளை அனுசரித்து ஒழுகி அவருடனாகிய எமது பிணைப்பை நிறைவுசெய்து எமது ஆன்மா பரம்பொருளுடன் சங்கமமாவதற்கு அநுசரணையாக இருக்கிறது. செழுமையுடையதும் பழைமையானதுமாகிய அவுஸ்திரேலியாவாழ் அபோறியினரின் கலாசாரத்திற்கும் பகவான் சிறீ சத்திய சாய் பாபா அவர்களின் காலத்தால் அழியாத போதனைகளுக்கும் உள்ள ஓருமைப்பாட்டை வெளிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் தலையாய நோக்கமாகும். .
திருமதி சீலா நாகரத்தினம் அவர்கள் தனது ஆரம்ப உரையில் திரைக்குப் பின்தொங்கும் காட்சி உணர்த்தும் தமது யாத்திரை பற்றியும்; பகவான் சிறீ சத்திய சாய் பாபா அவர்களுடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நேர்காணலின்போது அவர் தனக்கு வழங்கிய நெறிமுறைக் கட்டளைகள் பற்றியும் தெரிவித்தார் .ஒரு வருடத்திற்கு முன்னதாகப் பகவான் தன்னிச்சையாக அவுஸதிரேலியாவிலிருந்து ஆன்மீகத்தையும் சேவையையும் நோக்காகக்கொண்டு சிட்னி வாழ் சிறுவர்களாலான
சங்கீதம் மற்றும் நாடகம் அடங்கிய ஒரு செயல் திட்டத்தை அமுல்ப்படுத்தத் தெய்வீகத் தூண்டுதல் செய்தார் என்றும் அப்படி ஒரு நிகழ்ச்சியை யாத்திரைவரும் பொழுது தனக்குமுன் ஒப்பேற்றும்படி விரும்பினார் என்று மேலும் கூறினார். “சாதனா” நிகழ்ச்சியானது மனிதப் பிறப்பின் நோக்கம், சாய்பாபாவிற்குச் செலுத்தும் அன்பு, அவரின் வாழ்க்கை, மற்றும் அவரின் போதனைகளை மையப்படுத்துவதாக அமைந்திருந்தது. “பாபாவின் செய்திகள்”என்ற வரிசையில் வெளிவந்த தெய்வீகத் தூண்டுதலை ஏற்படுத்தும் ‘வீPடியோக்கள்’ சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்களினாலும் செயற்பாடுகளினாலும் தாங்கள் புட்டபர்த்திக்குச் செல்லும் யாத்திரையானது “பாபாவை நோக்கிய அகச்சார்பான யாத்திரை”யின் பிரதிபலிப்பே என்பதை இச்சிறுவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

“மரியாதைக்கு அடையாளமாக இந்தக் குழு உண்மையான நட்புடன் தங்களின் ஆன்மீகக் கலாசாரத்தைப் பகிர்வதுடன் அபோறியின சமூகத்தவரின் ஆதரவைப் பெறும்வண்ணம் அவர்களுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் பயனாக இந்தக்குழு ‘சரணடைதல்’ ‘நம்பிக்கை கொள்ளல்’ போன்ற பல நல்ல விழுமியங்களை உள்வாங்கமுடிந்தது” என்று கூறித் தனது உரையை நிறைவுசெய்தார்.

அவுஸ்திரேலியாவின் விலங்கினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கோடு சிறுவர்கள் உள் திணிக்கப்பட்ட(ளவரககநன யniஅயடள) போலி விலங்கினங்களைப் பகவானிடம் எடுத்துச்சென்றிருந்தார்கள். அவர்கள் தமது சங்கீத நிகழ்ச்சியைச் சமஸ்கிருதக் கீர்த்தனைகளில் ஆரம்பித்தபின் படிப்படியாக மேற்கத்திய சங்கீதத்திற்குச் சென்றார்கள். அவர்கள் பாடிய பாடல்களில் புயதயயெயெஅ டீhரவய புயயெவாi ளுநஎவையஅஇ வுறயஅநஎய ஆயவய ஊhய Pவைய வுறயஅநஎய யனெ னுயலய முயசழ ஆகியவையும் அடங்கியிருந்தன. இச்சிறுவர்கள் ‘புனித பைபிளில்’ இருந்து நாம் வாழுகின்ற காலத்திற்கு மிகவும் ஏற்றதாக சில வரிகளை மேற்கோள்காட்டி “நிர்வாண” என்றொரு பாடலை மிகச் சிறந்த வாத்திய இசை மெருகூட்ட பாடியமை குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அவர்கள் எப்படிக் கங்காரு அதன் மதலைப்பையைப் பெற்றது என்பதை அபோறியினல் கதையொன்றின் அடிப்படையில் சிலேடைச்சித்திரமாக செய்துகாட்டினார்கள்.. ஆழ்;ந்து நோக்குகையில் இந்நிகழ்ச்சியானது அன்பு கருணை–தியாகம் போன்ற சிறந்த மனித விழுமியங்களை அவுஸ்திரேலியாவின் தனித்துவமமானதும் விரும்பத்தக்கதுமாகிய கங்காரு, வொம்பாற், கோலா மற்றும் எமு போன்ற விலங்கினங்களுடாக விவரமாக எடுத்தியம்பியதுபோல இருந்தது.

தனது படைப்புகளில் பேராசை, சுயநலம் ஆகிய குணங்களை நிருபணஞ்செய்து பார்க்க மாறுவேடத்தில் படைக்கும் ‘பியாமி’ என்ற பரிசுத்தஆவி éமிக்கு வந்தபொழுது ‘எமு’ என்ற விலங்கு மிகவும் அவசரம் மிக்கதாகவும், ‘கோலா’வானது மிகவும் சேம்பேறியானதாகவும் இருந்ததைக் கண்டறிந்தது. ஆனால் தாய்மைமிக்க ‘கங்காரு’வைப் பார்த்ததும் களிவிரக்கப்பட்டு அதன் அன்பு, தியாகம் என்பவற்றிற்கு அடையாளமாக அதன் பிற்காலச் சந்ததியினருக்கு பிறந்த குட்டிகளைத் தங்களுடன் சுமந்துசெல்வதற்கு ஏதுவாகவிருக்க மதலைப்பையைப் பரிசாகக் கொடுத்துதவியது.
வடக்கு அவுஸ்திரேலியாவின் தொன்முதற்குடியானவர்களால் உருவாக்கப்பட்ட இசைக் கருவியான ‘டிட்ஜெறிடூ’வின் (னுனைபநசனைழழ) தனித்துவமான இசையுடனும் இசைக்கோல்களின் தாளத்துடனும் சங்மமித்த இந்தச் சிலேடைச் சித்திரம் பாரம்பரிய அபோறியினல் நடனத்தை முதன்மைப்படுத்திக் காட்டியது. மேடையிலே ‘எமு’க்களைப்போலக் கொத்தியும் உதைத்தும் ஓடியும் அவைகளின் நடத்தையை அபிநயம் பிடித்துக்காட்டினார்கள். மேலும் அவர்கள் ‘கங்காருகள்’போலத் கெந்தியும் துள்ளியும் பலவிதங்களில் அபிநயம் பிடித்துக்காட்டியும் எம்மை மகிழ்வித்தார்கள். .

தொன்முதற் குடியானவர்களின சிறந்த ஆன்மீக இயல்பினையும் இயற்கையுடன் கூடிய தொடர்பையும் பிரதிபலிக்கும் ‘நாங்கள் ஒன்றே ஆனால் நாங்கள் பலரே’ என்ற பிரபலமான அவுஸ்திரேலியப் பாட்டொன்றை இசைத்ததுடன் தங்களின் நிகழ்ச்சியை நிறைவுசெய்திருந்தார்கள். அபோறியினல் புள்ளி ஓவியத்தால் வரையப்பட்ட வானவிற் பாம்பையும் அவுஸ்திரேலியாவின் தனித்துவமான தாவர வளத்தையும் விலங்கினங்களையும் உருவகப்படுத்திக்காட்டும் அழகிய பின்திரை இவர்களின் நிகழ்ச்சிக்கு மெருகு ஊட்டியது.

இந்தக் கலை நிகழ்ச்சியிற் பங்கேற்றவர்களைக் கௌரவித்துப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் நிகழ்ச்சியிற் கலந்து சிறப்பித்த அவையினருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

2 comments:

Anonymous said...

May be Baba has already trained you to become paedophile.

Anonymous said...

Well done kids!!
May God and Swami continue to bless you
(The tree bearing fruit, gets stoned)