இலங்கையின் உறுதிமொழிகளை ஏற்க முடியாது - மன்னிப்புச் சபை
மீள்குடியேற்றப்பட்ட இடம்பெயர் மக்கள் சிரமங்களை
எதிர்நோக்கி வருவதாக ஐ.ஆர்.ஐ.என் ஊடகம் தகவல்
மெனிக்பாம் முகாமில்
தங்கியிருந்த மக்களை அரசாங்கம் காடுகளில் குடியேற்றியுள்ளது முன்னாள் கொழும்பு மாநகரசபையின்
பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்
நெஹ்ரு தீவில் புகலிடக்
கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போரட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைமாற்றியமைக்க gl வேண்டும்
கண்டி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான இலங்கையின் உறுதிமொழிகளை ஏற்க முடியாதென
சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான இலங்கை
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை தொடர்ந்தும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என
அச்சபை கோரியுள்ளது. யுத்தத்தின் பின்னரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் புதிதாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு
அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளில் பல இன்னமும்
நிறைவேற்றப்படவில்லை என மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. சில தசாப்தங்களாகவே
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை வெற்று வாக்குறுதிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் மாற்றுக் கருத்துக்களை வெளியிடும்
தரப்பினர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமைக்காக குரல் கொடுப்போர் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும்
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பாடத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும்
அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மீள்குடியேற்றப்பட்ட இடம்பெயர் மக்கள் சிரமங்களை
எதிர்நோக்கி வருவதாக ஐ.ஆர்.ஐ.என் ஊடகம் தகவல்
மீள்குடியேற்றப்பட்ட இடம்பெயர் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஐ.ஆர்.ஐ.என்
ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தற்காலிக முகாம்கள் மற்றும் கூடாரங்களில்
மீள்குடியேற்றப்பட்டவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் .
,tu;fspy; சிலர் மிக நீண்ட காலமாக இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ச்சியாக
தங்க நேரிட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் gytifahd துயரங்களை எதிர்நோக்க நேரிடும் vd;W ஐக்கிய நாடுகspd; மனிதாபிமான இணைப்பு நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளர் பொன்டினி ரன்டிசியோ தெரிவித்துள்ளார்.
2
மெனிக்பாம் முகாமில்
தங்கியிருந்த மக்களை அரசாங்கம் காடுகளில் குடியேற்றியுள்ளது முன்னாள் கொழும்பு மாநகரசபையின்
பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்
மெனிக்பாம் முகாமில்
தங்கியிருந்த மக்களை அரசாங்கம் காடுகளில் குடியேற்றியுள்ளதாக முன்னாள் கொழும்பு மாநகரசபையின்
பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஐக்கிய
நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளுக்கு
அஞ்சியே அரசாங்கம் இவ்வாறு மக்களை மெனிக்பாம் முகாமிலிருந்து அகற்றி மீள்குடியேற்ற நடவடிக்கைள் பூர்த்தியாகியுள்ளன
என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு காண்பிக்கும் நோக்கில் செயற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெனிக்பாம் முகாமில்
தங்கியிருந்த தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் குரல்
கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுs;s mtu;
அரசாங்கம் அவசர அசரமாக
மக்களை காடுகளில் குடியேற்றியுள்ளதாகவும், இந்தப் பிரதேசங்களில் குடிநீர், பாடசாலைகள்,
மலசலகூடங்கள் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
3
நெஹ்ரு தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போரட்டம் நடத்தி
வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெஹ்ரு தீவுகளில் 170 புகலிடக் கோரிக்கையாளர்கள் பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தை
நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அமைதியான முறையில் நெஹ்ரு தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்ப்பு போராட்டங்களை
நடத்தி வருவதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், எத்தனை பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்
என்பது பற்றிய சரியான புள்ளி விபரங்களை குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானியர் ஒருவர் கடந்த 22 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக்
குறிப்பிடப்படுகிறது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஹ்ரு தீவு முகாம் ஒர் மனநல காப்பகம் போன்று அமைந்திருப்பதாக புகலிடக் கோரிக்கையாளர்
ஒருவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
இந்த முகாம்கள் மனிதர்கள் வாழப் பொருத்தமற்றது என சில புகலிடக் கோரிக்கையாளர்கள்
அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
4
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைமாற்றியமைக்க gl வேண்டும்
கண்டி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைமாற்றியமைக்க gl வேண்டும். அதேபோல தமிழர்களுக்கு நியாயம்கிடைக்க வேண்டும். அதற்கு மாகாணசபைமுறை உகந்ததல்ல என;று கண்டி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதியஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமை பற்றி அமைச்சர்தினேஷ் குணவர்தன மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ
சுமங்கள தேரரை வெள்ளிக்கிழமை காலை சந்தித்து தெளிவுபடுத்தினார். இதனைஅடுத்து மஹாநாயக்க தேரர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை எமதுநாட்டுக்கு உகந்தது அல்ல. நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும்ஒருவரது கையிற்கு அது செல்வதை தடுக்க வேண்டும். இந்தநாட்டின் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.அதற்காக மாகாணசபை முறையும் தற்போதைய தேர்தல்முறையும் உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
5
சண்டே லீடர் பத்திரிகை முன்னாள் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா
ஜேன்ஸ், 500,000 ரூபா நட்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னணி ஞாயிறு ஆங்கில வார இதழ்களில் ஒன்றான
சண்டே லீடர் பத்திரிகை முன்னாள் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸ், பிரபல சட்டத்தரணி
நலின் லந்துவேஹெட்டிக்கு 500,000 ரூபா நட்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி நலின் லந்துவேஹெட்டிக்கு அவதூறு ஏற்படும் வகையில்
செய்திகளை பிரசூரம் செய்ததாகத் தெரிவித்து நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றது.
இதன் போது இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதன்படி, வழக்கைத் தாக்கல் செய்த சட்டத்தரணி நலின் லந்துவேஹெட்டிக்கு
நட்ட ஈடாக 500,000 ரூபாவினை வழங்குவதாக பெட்ரிக்கா ஜேன்ஸ் இணங்கியுள்ளார். 2011ம் ஆண்டு
பெப்ரவரி மற்றும் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் ஆகிய காலங்களில் சண்டே லீடர் பத்திரிகையில்
பிரசூரமான சில செய்திகள் தொடர்பில் சட்டத்தரணி லந்துவேஹெட்டி இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
குறிப்பாக புனித தோமியர் கல்லூரியின் மாணவரான லந்துவேஹெட்டியின்
புதல்வர் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இதேவேளை, இந்த நட்டஈட்டுப் பணத்தை தலா ஒரு லட்சம் என்ற அடிப்படையில் ஐந்து அறக்கட்டளைகளுக்கு
வழங்க லந்துவேஹெட்டி தீர்மானித்துள்ளார்.
6
இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் புது
டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூம் இந்திய வெளிவிவகார
அமைச்சர் சல்மான் குர்ஷீடும் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவது
குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலும் இந்தியாவிலும் முன்னெடுக்கப்பட்டு வரும்
திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளினதும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும்
கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
7
தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவாசல் உடைப்பு, 10க்கும்
மேற்பட்டோர் வைத்தியசாலையில்
குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல பிரதேசத்தில்
பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல்
நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில்
காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ரிதிகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
கொகரல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பழைமைவாய்ந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் முரண்பட்டுக்
கொண்டு பிரிந்த சென்ற அணியினர் புதிய ஜும்ஆப் பள்ளிவாசலை ஆரம்பித்ததுள்ளனர். பின்னர்
நீதி மன்றத்தில் இரு சாராருக்கிடையே இது குறித்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில்
நீதிமன்றம் புதிய பள்ளிவாசலைச் சார்ந்த குழுவினருக்கு தொழுகையை மேற்கொள்ளுமாறு தீர்ப்பு
வழங்கியது. இதனை அடுத்து புதிய பள்ளியில் இந்த அணியினர் தொழுகையை மேற்கொண்டிருந்த போது
அங்கு வந்த மற்றுமொரு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொகரல்ல
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் சில காலமாக இரு
மார்க்கக் குழுக்களுக்கிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடே குறித்த கைகலப்புக்கு காரணம்
என தெரிவிக்கப்படுகின்றது.
_____________________________________
முள்ளிவாய்க்காலில் பாரிய ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
முல்லைத் தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதக்
கிடங்கொன்றிலிருந்து ஆயுதங்கள் வெள்ளிக்கிழமை
இராணுவத்தினரால் தோண்டி எடுக்கப்பட்டன. இதிலிருந்து 130 மி.மீற்றர் ஆட்லறி 1, 152 மி.மீற்றர்
ஆட்லறி 4, மணிக்கு 120 கிலோ மீற்றர் குதிரை வேகம் கொண்ட அதிவேக தாக்குதல் படகு உட்பட
பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment