ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் துப்பாக்கி |
தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் துப்பாக்கி படம் பற்றி நாளுக்கு நாள் புது தகவல்கள் உலா வருகின்றன. |
விஜய்- முருகதாஸ்- தாணு போன்ற பிரபலங்கள் இணைந்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை இப்படி ஒரு படத்தில் நான் நடித்ததே இல்லை என படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் கூறியிருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இயக்குனர் முருகதாசும் படத்தின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதற்கு காரணம், துப்பாக்கி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளாராம் முருகதாஸ். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிரசாந்த் நாயர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
நன்றி விடுப்பு |
தமிழ் சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment