சன்டி சூறாவளி: அமெரிக்காவில் 12 பேர் பலி
பிலிப்பைன்ஸை தாக்கிய சொன் ரின்ஹ் புயல்: 24 பேர் பலி
சான்டிப் புயலின் கோரத் தாண்டவம்: மீண்டும் மூடு விழா கண்ட சுதந்திர தேவி
40 பேரின் உயிரைக் காவு கொண்டது சன்டி மின் விநியோகம் , போக்குவரத்து தொடர்ந்தும் முடக்கம்; சேதங்களை ஒபாமா நேரில் பார்வையிட்டார்
யுத்த நிறுத்தத்திற்கு மத்தியிலும் சிரியாவில் தொடர்ந்து வன்முறைகள் கார்க்குண்டுத் தாக்குதலில் 10 பேர் பலி
சன்டி சூறாவளி: அமெரிக்காவில் 12 பேர் பலி
By
General 2012-10-30 |
மேற்கு வேர்ஜினியா முதல் வட கரோலினா மற்றும் கனெக்டிக்கட் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதில் பலியாகியுள்ளனர்.
மேலும் 3 மில்லியன் பாவனையாளர்களுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க் நரப்பகுதியில் மாத்திரம் 1 மில்லியன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சூறாவளியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க் பங்குச்சந்தை, பிராந்திய பாடசாலைகள் ஆகியனவும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, பிராந்தியத்திலான அனைத்து பஸ், புகையிரத மற்றும் விமான போக்குவரத்துகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க் நகரமும் சன்டி சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி
பிலிப்பைன்ஸை தாக்கிய சொன் ரின்ஹ் புயல்: 24 பேர் பலி
By
General 2012-10-29 |
பிலிப்பைன்ஸை தாக்கிய சொன் ரின்ஹ் புயலால் குறைந்தது 24 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
தென் மற்றும் மத்திய பிலிப்பைன்ஸில் மரணங்களில் அதிகளவு மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
உயிரிழந்தவர்களில் அரைப் பங்கினர் மண் சரிவுகளில் சிக்கியும் மூழ்கியுமே உயிரிழந்துள்ளனர்.
15000 பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.
இந்த புயலையடுத்து 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேற்படி புயலானது மேற்கே வியட்நாமை நோக்கி மணிக்கு 22 மைல் வேகத்தில் நகர்ந்து வருகிறது
நன்றி வீரகேசரிசான்டிப் புயலின் கோரத் தாண்டவம்: மீண்டும் மூடு விழா கண்ட சுதந்திர தேவி
- Wednesday, 31 October 2012
மன்ஹட்டான் நகர மத்தியில் அமைந்துள்ள அமெரிக்கர்களின் வரலாற்றுச் சின்னமான சுதந்திர தேவிச் சிலையை சமீபத்தில்தான் சீரமைத்தார்கள்.
அதுவரைக்கும் மூடப்பட்டிருந்த இச்சிலை, பணிகள் முடிவடைந்து கடந்த ஞாயிறே திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது 'சான்டி' புயலின் கோரத் தாண்டவம் காரணமாக சுதந்திர தேவி சிலை மறுபடியும் முடப்பட்டிருக்கிறது.
30 மில்லியம் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப் பட்ட சீரமைப்புப் பணிகள் காரணமாக இது கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டிருந்தது.
151 அடி உயரமுள்ள இந்த சிலை புயலின் சீற்றம் தணிந்தால் இன்று அல்லது அதற்கு அடுத்த நாள் திறக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டின் அன்பளிப்பாக 1886ம் ஆண்டு நிறுவப்பட்ட சுதந்திர தேவிச் சிலை 1924ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் சுமார் 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இச்சின்னத்தைப் பார்க்க வருகை தருகிறார்கள் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது.
நன்றி தினக்குரல்
40 பேரின் உயிரைக் காவு கொண்டது சன்டி மின் விநியோகம் , போக்குவரத்து தொடர்ந்தும் முடக்கம்; சேதங்களை ஒபாமா நேரில் பார்வையிட்டார்
- Wednesday, 31 October 2012
சன்டி புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் நிலையில் அமெரிக்காவின் வடக்குக் கிழக்கு பிராந்தியத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மின் விநியோகத்தை இழந்திருப்பதுடன், போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் முடங்கி கிடப்பதாகவும் பி.பி.சி. தெரிவித்துள்ளது.
நியூயோர்க் நகரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், வெள்ள நீர் நிரம்பியுள்ள சுரங்கப் பாதைகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன. 18 ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், நியூயோர்க்கிலும் நியூஜேர்சியிலும் குறைந்தளவிலான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காற்று காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மேற்கு வேர்ஜினியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தது. பனிப்பொழிவானது நியூயோர்க் மாநிலம் ஊடாக நேற்று புதன்கிழமை கனடா நோக்கி நகரவிருந்தது.
சன்டி புயல் காரணமாக குறைந்த பட்சம் 8 மில்லியன் வீடுகளும் வியாபார ஸ்தாபனங்களும் மின்விநியோகத்தை இழந்திருப்பதாக அமெரிக்காவின் சக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. 1960 ஆம் ஆண்டு டோன்னா புயலின் போது ஏற்பட்ட 10 அடி ( 3 மீற்றர்) அலையே முன்னைய சாதனையாக பதிவாகியிருந்த நிலையில், சன்டி புயல் காரணமாக மத்திய மன்ஹட்டன் பகுதியில் ஏற்பட்ட சுமார் 14 அடி ( 4.2 மீற்றர்) அலையே மிகப் பெரியதென தற்போது பதிவாகியிருப்பதாக தேசிய காலநிலை சேவை குறிப்பிட்டுள்ளது.
இது மிகக் கோரமான புயல்காற்றாக இருந்தது. இதுவே நாம் இதுவரை சந்தித்ததில் மிகவும் மோசமானதாகக் கூட இருக்கலாம் என்று நியூயோர்க் மேயர் மிக்கேல் புளும் பேர்க் தெரிவித்துள்ளார். அத்துடன் நியூயோர்க் சுரங்கப் பாதை முறைமைத் திட்டமானது அதனது 108 வருட வரலாற்றில் மிக மோசமான சேதத்தை கண்டிருப்பதாக நகர இடைத்தங்கல் அதிகார சபையின் தலைவர் ஜோசப் லோட்டா தெரிவித்துள்ளார்.
பஸ் சேவைகளை நேற்று புதன்கிழமை ஆரம்பிக்க கூடுமானதாக இருந்திருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்த புளும்பேர்க், எனினும் சுரங்கப் பாதைகளை எப்போது மீளத் திறப்பது என்பது தொடர்பில் கால எல்லையொன்றை வரையறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நியூயோர்க் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு 2 அல்லது 3 நாட்களுக்குள் மின் விநியோகத்தை மீண்டும் சரி செய்து விடக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நியூஜேர்சியிலுள்ள ஜோன் எப். கென்னடி மற்றும் நியூவார்க் விமான நிலையங்கள் குறைந்தளவிலான சேவைகளுடன் நேற்று புதன்கிழமை காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படவிருந்த அதேநேரம், நியூயோர்க்கிலுள்ள லாகுவார்டியா விமான நிலையம் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது. இரு நாட்கள் மூடப்பட்டிருந்த நியூயோர்க் மற்றும் ரஷ்டக் பங்குச் சந்தைகள் மீண்டும் திறக்கப்படவிருந்தன. இறுதியாக 1888 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் பங்குச் சந்தை இரு நாட்கள் மூடப்பட்டிருந்ததாகவும் பி.பி.சி. தெரிவித்துள்ளது.
நியூஜேர்சியில் பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஜனாதிபதி பராக் ஒபாமா , மாநில ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியுடன் சென்று நேற்று புதன்கிழமை நேரில் பார்வையிட விருந்தார். குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான மிற் ரோம்னியின் தீவிர ஆதரவாளரும் அக் கட்சியைச் சேர்ந்தவருமான நியூஜேர்சி மாநில ஆளுநர் கிறிஸ்டி, ஜனாதிபதி ஒபாமா புயல் தொடர்பான நடவடிக்கைகளைக் கையாளும் விதத்தை பாராட்டியுள்ளார்.
“ ஜனாதிபதியுடன் நான் நேற்று (திங்கட்கிழமை ) 3 தடவைகள் பேசினேன் ‘என்று கிறிஸ்டி சீ.என்.என். க்கு தெரிவித்துள்ளார். அவர் எமது மாநிலத்துக்கு மிகவும் ஒத்துழைப்பாகவும் உதவியாகவும் இருக்கிறார். அவர் இதில் ஒரு போதும் தேர்தலை கொண்டு வரவில்லை.
அவர் அதை கொண்டு வரவில்லை என்றால் நானும் நிச்சயமாக அதைக் கொண்டு வரப் போவதில்லை என்று கிறிஸ்டி கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சி வேட்பாளரான ரோம்னி , மிக முக்கிய தேர்தல் மாநிலமான ஒஹியோவில் கூட்டமொன்றை புயல் நிவாரண நிகழ்வாக மாற்றி செவ்வாய்க் கிழமை தமது பிரசார நடவடிக்கைகளை மீள ஆரம்பித்துள்ளார். இதேநேரம் 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கத்தரீனா புயல் தாக்கத்தின் பின்னர் சேதங்களை துப்புரவு செய்ய 100 பில்லியன் டொலர் செலவாகியிருந்த நிலையில் அதை விட மிகக் குறைந்த தொகையான 30 40 பில்லியன் டொலரே சன்டி புயல் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் சேதங்களை துப்புரவு செய்யச் செலவாகும் என்று பி.பி.சி. வர்த்தக செய்தியாளரான மார்க் கிரகரி சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி தினக்குரல்
யுத்த நிறுத்தத்திற்கு மத்தியிலும் சிரியாவில் தொடர்ந்து வன்முறைகள் கார்க்குண்டுத் தாக்குதலில் 10 பேர் பலி
- Wednesday, 31 October 2012
டமஸ்கஸ்: சிரியாவில் தற்காலிக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட
பின்னரும் நான்காவது நாளாகவும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன்
தலைநகர் டமஸ்கஸில் இடம்பெற்ற இரட்டைக் கார்க் குண்டுத் தாக்குதல்களில் 10
பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நகரின் தென் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பெண்கள்
சிறுவர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிராந்திய தொலைக்
காட்சி தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்கு முன்பும், ஹராஸ்ரா மாவட்டத்தில் சிரிய அரசு படை ஜெட் விமானக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமியர்களின் பெருநாளான ஹஜ்ஜினை முன்னிட்டு இரு தரப்புக்களின் ஒத்துழைப்புகளுடன் ஐ.நா. அரபு லீக் சிறப்பு பிரதிநிதி லஹ்கர் பிராஹிமி தற்காலிக யுத்த நிறுத்த மொன்றினை அறிவித்திருந்தார்.
ஆயினும் இரு தரப்பும் இந்த அறிவித்தலை மீறியுள்ளதாக பிராஹிமி தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் மோசமடைந்து வருவதாகவும் இது கூடாததொன்றெனவும் மொஸ்கோ நகரில் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கைய் லாவ்ரோவ்வுடன் சந்திப் பொன்றினை மேற்கொண்ட பின்னர் பிராஹிமி குறிப்பிட்டுள்ளார்.
எங்களால் இந் நிலைமையை ஊக்குவிக்க முடியாது. ஏனெனில் சிரியாவும், சிரிய மக்களும் மிகவும் முக்கியமாகும். நாம் சிவில் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வரவே எண்ணுகிறோம். யுத்தமில்லாத புதிய சிரியா உருவாக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எதிரணி கட்சிகளுடனான பேச்சு வார்த்தைகளின்றி சிரிய அரசு எந்தவொரு பிரச்சினைகளுக்குமான தீர்வினை பெறமுடியாதென லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். நன்றி தினக்குரல்
இச்சம்பவத்திற்கு முன்பும், ஹராஸ்ரா மாவட்டத்தில் சிரிய அரசு படை ஜெட் விமானக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமியர்களின் பெருநாளான ஹஜ்ஜினை முன்னிட்டு இரு தரப்புக்களின் ஒத்துழைப்புகளுடன் ஐ.நா. அரபு லீக் சிறப்பு பிரதிநிதி லஹ்கர் பிராஹிமி தற்காலிக யுத்த நிறுத்த மொன்றினை அறிவித்திருந்தார்.
ஆயினும் இரு தரப்பும் இந்த அறிவித்தலை மீறியுள்ளதாக பிராஹிமி தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் மோசமடைந்து வருவதாகவும் இது கூடாததொன்றெனவும் மொஸ்கோ நகரில் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கைய் லாவ்ரோவ்வுடன் சந்திப் பொன்றினை மேற்கொண்ட பின்னர் பிராஹிமி குறிப்பிட்டுள்ளார்.
எங்களால் இந் நிலைமையை ஊக்குவிக்க முடியாது. ஏனெனில் சிரியாவும், சிரிய மக்களும் மிகவும் முக்கியமாகும். நாம் சிவில் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வரவே எண்ணுகிறோம். யுத்தமில்லாத புதிய சிரியா உருவாக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எதிரணி கட்சிகளுடனான பேச்சு வார்த்தைகளின்றி சிரிய அரசு எந்தவொரு பிரச்சினைகளுக்குமான தீர்வினை பெறமுடியாதென லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். நன்றி தினக்குரல்
No comments:
Post a Comment