உலகச் செய்திகள்

.
                               ஈரான் ஒரு வருட காலத்திற்குள் அணு ஆயுதமொன்றை தயாரிக்கும் வல்லமையை பெற்றுவிடும்

பாகிஸ்தானில் வெள்ளம்: 422 பேர் பலி 

ஐ.நாவுக்கான ஆபிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த சமாதான தூதுவர்கள் 4 பேர் படுகொலை

தென் சூடான் மீது சர்வதேச மன்னிப்புச் சபையினால் மீண்டுமொரு பாரிய குற்றச்சாட்டு

ஈரான் ஒரு வருட காலத்திற்குள் அணு ஆயுதமொன்றை தயாரிக்கும் வல்லமையை பெற்றுவிடும்

ஈரானானது ௭திர்வரும் ஒரு வருட காலத்துக்குள் அணு குண்டொன்றை தயாரிக்கக் கூடிய நிலையில் உள்ளதெனவும் ௭னவே அது தொடர்பில் சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கையை ௭டுக்க வேண்டும் ௭னவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹு வலியுறுத்தியுள்ளார்.
193 அங்கத்தவர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அபாய ௭ச்சரிக்கை பிறப்பிக்கப்பட வேண்டும் ௭ன அவர் கூறினார். ஈரான் அணு ஆயுதமொன்றை தயாரிப்பதற்கு போதுமான அளவு யுரேனியத்தை செறி வூட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கான காலம் கடந்து கொண்டிருப்பதாக அவர் தெரி வி த்தார்.



இதன்போது அவர் குண்டின் வரைபடம் ஒன்றைக் காண்பித்து அபாய நிலையை சிவப்பு பேனாவால் கோடிட்டு காட்டினார். காலங் கடந்து இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ஈரான் அணு ஆயுதமொன்றை பெற்றுக் கொள்வதை தடுப்பதற்கான அமைதி வழியிலான ஒரே நடவடிக்கை, ஈரானின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் தெளிவான அபாய வரையறையொன்றை ஏற்படுத்துவதாகும் ௭ன நெட்டான்யாஹு கூறினார். ஈரான் 70 சதவீதம் யுரேனிய செறிவூட்டலை மேற்கொண்டு வருவதாக கூறிய நெட்டான்யாஹு, 90 சதவீத யுரேனிய செறிவூட்டலை அபாய நிலையாக சிவப்பு பேனாவால் அவர் கோடிட்டுக் காட்டினார்.
௭திர்வரும் கோடை காலத்துக்குள் ஈரானின் யுரேனிய செறிவூட்டல் வீதமானது நடுத்தர செறிவூட்டலை கடந்து இறுதிக் கட்டத்தை அடையும் சாத்தியமுள்ளதாக அவர் கூறினார். ஈரான் ௭திர்வரும் சில மாதங்களிலோ வாரங்களிலோ தனது முதலாவது அணு குண்டை தயாரிப்பதற்கு போதுமான யுரேனிய செறிவூட்டலை மேற்கொண்டு விடும் ௭ன்று அவர் தெரிவித்தார்.
நெட்டான்யாஹு ஈரான் மீது ஒரு தலைப்பட்சமான தாக்குதல் தொடர்பில் இதன்போது அச்சுறுத்தல் விடுக்காத போதும், ஈரானிய அணுசக்தி செறிவூட்டல் நிலையங்கள் ௭திர்வரும் ஆண்டு மத்தி வரை சாத்தியமான தாக்குதல் இலக்குகளாக உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் ௭ந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தாம் தயாராகவுள்ளதாக ஈரான் ௭ச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய பிரதித் தூதுவர் ௭ஸ்ஹாக் அல்– ஹபிப்பே மேற்படி ௭ச்சரிக்கையை விடுத்துள்ளார். பெஞ்ஜமின் நெட்டான்யாஹுவின் ஈரான் தொடர்பான குற்றச்சாட்டுகள் ௭துவித அடிப்படையும் அற்றவை ௭ன அவர் வலியுறுத்தினார். அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கட ந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றுகை யில், ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் அமெ ரிக்கா மேற்கொள்ளும் ௭ன தெரிவித்திருந்தார். நன்றி வீரகேசரி

பாகிஸ்தானில் வெள்ளம்: 422 பேர் பலி


பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 422 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 50 இலட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பருவ மழையின் போது, வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் நாட்டில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 422 பேர் பலியாகி இருப்பதாக தேசிய இயற்கை சீரழிவு தடுப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். மழையினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 50 இலட்சம் பேரில், 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக மழை வெள்ளத்தில் சிக்கி 239 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 443 பேர் பலியாகினர். அதேபோல கடந்த 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1,985 பேர் பலியானாதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யுனிசெப் அமைப்பு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, மற்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பருவ மழை இன்னும் 3 மாதங்கள் வரை தொடரலாம் என்பதால், இந்த ஆண்டு மழை வெள்ளத்தில் இன்னும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி 




Thursday, October 4, 2012


ஐ.நாவுக்கான ஆபிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த சமாதான தூதுவர்கள் 4 பேர் படுகொலை

சூடானில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஐக்கிய நாடுகளுக்கான ஆபிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த சமாதான தூதுவ ர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

சூடானின் மேற்கு பகுதியிலுள்ள டாபூர் நகரிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சூடானிலுள்ள சமாதான தூதுவர்களின் தலைமையகத்திற்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சூடான் அரசாங்கம் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகளுக்கான ஆபிரிக்க ஒன்றியத்தின் அமைதிப் பணியாளர்கள் வலியுறுத் தியுள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டாபூர் நகரில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான அமைதிப் பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

சூடானில் இடம்பெற்று வரும் வன்முறைகளினால் இதுவரை 78 அமைதிப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை அமைதிப் பணியாளர்களுக்கு எதிரான ஆயததாரிகளின் தாக்குதல் களுக்கு தென் சூடான் அரசாங்கம் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்குதவாக சூடான் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி இலங்கைநெட்  


Wednesday, October 3, 2012

தென் சூடான் மீது சர்வதேச மன்னிப்புச் சபையினால் மீண்டுமொரு பாரிய குற்றச்சாட்டு

தென் சூடான் பாதுகாப்பு படையினர், பொதுமக்களுக்கு எதிராக வன்முறை களை மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள் ளது. கொலை, சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்செயல்களை பொதுமக்களுக்கு எதிராக படையினர் மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள மனித உரிமை அமைப்புகளின் தகவல்களை அடிப்படையாக கொண்டு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. தென் சூடானின் கிழக்கு பகுதியிலுள்ள ஜோங்லி நகரிலுள்ள பாதுகாப்பு படையினரின் முகாம்களில் மக்கள் இத்தகைய சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கு எதிராக தென் சூடான் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சபை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஜோங்லி நகரிலுள்ள மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் மூலம் குறித்த உண்மை வெளிவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் படையினரால் பொதுமக்களின் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டும் அவர்களின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் குற்றச்சாட்டை தென் சூடான் அரசாங்கம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 நன்றி இலங்கைநெட்

No comments: