அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 17/03/2025 - 23/03/ 2025 தமிழ் 15 முரசு 50 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
.
தீர்க்கமான தருணம்.
கொழும்புவிற்கு மனம் திறந்த மடல்
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று ஆரம்பம்
இந்திய அரசின் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள்
இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: தி.மு.க. தலைவருக்கு பிரதமர் மன்மோகன் கடிதம்
கிழக்கு மாகாண சபையில் தமிழர்களுக்கு ஏன் பதவி எதுவும் கிடைக்கவில்லை? விளக்குகின்றார் துரை
தீர்க்கமான தருணம்.
சுகு-ஸ்ரீதரன்
தமிழ்
தரப்பினால் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து ஒரு மாகாண சபையை கிழக்கில்
உருவாக்கமுடியவில்லை. இது மிகவும் பலவீனமான நிலையாகும். சமூக அக்கறை
இருக்குமானால் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு பரிகாரம் காணப்படவேண்டும்
நில
அபகரிப்பு இராணுவமயமாக்கல் சிவில் நிர்வாகத்தில் படையினர் தலையீடு போன்ற
நிலைமைகளில் இது மிகவும் முக்கியமானது. தவிர மாகாணங்களுக்கு அதிகாரங்கள்
பகிர்வதற்குப் பதில் மத்தியை நோக்கி நகர்த்துவதென்பது திட்டமிட்ட முறையில்
வெளிப்படையாகவே நிகழ்கிறது. கிழக்குமாகாண ஆளுனர் எப்போதும் மக்களால் தெரிவு
செய்யப்பட்;ட பிரதிநிதிகளிடம் அதிகாரங்கள் போவதை விரும்பாதவர். கடந்த
மாகாண சபையின் மீது அவரின் செயற்பாடுகள் அதற்கு சாட்சி. அது அவரின்
சித்தமல்ல . ஆண்டவனின் சித்தப்படி அவர் நடக்கிறார். மாகாண சபையின் அன்றாட
செயற்பாடுகளுக்கான அதிகாரங்கள் கூட அவற்றிடம் இல்லை. இது முன்னாள்
முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட கடந்த மாகாண சபை உறுப்பினர்களது அனுபவம்.
எது
எவ்வாறெனினும் இம்முறை மாகாண சபை அதிகாரப்பரவலாக்கலுக்காக குரல் எழுப்பும்
மேடையாகவே காணப்படும். அது அவ்வாறிருக்க வேண்டிய தேவையுள்ளது. இந்தியா,
உலகம் 13வதற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குமாறு இங்கு இருப்பதை
பிடுங்குவதற்கான நிலைமைகளே காணப்படுகின்றன.
13
வதற்கு அப்பால் என்னும் போது அது ஒற்றை ஆட்சி கடந்ததாக இருக்கவேண்டும்.
தற்போதைய அனுபவங்கள் தரும் பாடமும் அதுதான். ஜனாதிபதி , பாராளுமன்றம்,
நீதித்துறை இவற்றின் சுயாதீனம் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை
சட்டம் ஒழுங்கு ஆகியன அரசியல் மயப்பட்டு அராஜகம் தாண்டவமாடும் நிலைமை
ஏற்பட்டுள்ளது. எனவே ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பரவலாக்கல் நடைமுறையில்
வரும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தினுடாக தீர்வுகாணலாம் என்றும்
அர்த்தப்படுகிறது.
ஆனால்
இலங்கையில் நீதித்துறை இருக்கும் நிலையில் இது மிகவும் கடினமானது. எனவே
ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்றே தீர்வு காணவேண்டும்.தமிழ் தேசிய
கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவாhத்தை நடத்தும் போது இந்த ஒற்றையாட்சி அமைப்பை
நீக்குவது பற்றிய கலந்துரையாடல் முக்கியமானது.
அரசியல்
மயப்பட்டு இன சமூக நிலைமைகளை கருத்திற்கெடாமல் நீதித் துறை
செயற்படுமிடத்து அதற்கு நிhபந்திக்கப்படுமிடத்து பேரினவாத நியாயங்கள்
பாராளுமன்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் வரை ஒற்றையாட்சியின் கீழ்
அதிகாரப்பரவலாக்கல் சிறுபான்மைச் சமூகங்களுக்கு சாத்தியமில்லை. ஓட்டைப்
பாத்திரத்தில் தண்ணீர் அள்ளுவது போலத்தான் இருக்கும்.
இலங்கையை
ஜனநாயகப்படுத்தும் பிரச்சனை இருக்கிறது. அதிகார போதையில் திளைப்பவர்கள்
தொழிலாளர்கள் விவசாயிகள் ஆசிரியர்களின் அபிலாசைகள்
கருத்திற்கெடுக்கப்படுவதில்லை. நிலபிரபுத்துவமும் பின்தங்கிய
முதலாளித்துவமும் ஜனநாயக விரோத ஆட்சி முறையொன்றை திணிக்க முயல்கின்றன..
கல்விக்கு
ஒதுக்க வேண்டிய தொகையை அதிகரிக்கக் கோரியும் ஆசிரியர்களின் சம்பள
அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்தும் கடந்த நான்கு மாதங்களாக
போராடுகிறார்கள். இதனை செவிமடுப்பதற்கான பொறுமை இலங்கையில் அதிகாரத்தில்
உள்ளவர்களுக்கு கிடையாது. இனப்பிரச்சனையிலும் சரி கல்வியாயினும் சரி இது
நாட்டிற்கான மக்களுக்கான தேவை சேவை என்பதைவிட அதிகார சவுக்கு தமது கையில்
இருக்க வேண்டும் என்ற போக்கே காணப்படுகிறது. தொழிலாளர்களின் சேமலாப நிதி
பங்குசந்தைக்குச் சென்றுள்ளது. பங்குச்சந்தை ஒருநாட்டின் வளர்ச்சியை
சுட்டிக்காட்டும் என்பது அரைகுறை உண்மையாகும். அதுவொரு பகிரங்கமான
சூதாட்டம்.சட்டபூர்வமான பாதுகாப்புக்களை கொண்டது.
சமூகத்தில்
சாதாரண சூதாடிகள் கைது செய்யப்படுகிறார்கள் சிறைகளில் வாடுகிறார்கள்.
ஆனால் வெளியில் கனவான்கள் போல் வாழும் பங்குசந்தை வியாபாரிகள் பெரும்
கொள்ளைகாரர்கள். என்னடா சம்பந்தா சம்பந்தமில்லாமல் இல்லாதவற்றுக்கிடையே
முடிச்சுப் போடுகின்றேன் என்று நினைக்க வேண்டாம்.
இனப்பிரச்சனையாயினும்
சரி நாட்டின் சமூக ,பொருளாதார சவாலானாலும் சரி பெருவாரியான மக்களின்
ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்சனையே. தத்தமது சமூகத்திற்கு
அதிகாரப்பரவலாக்கல் காலம் போய் ஏதோ பார்த்து செய்யுங்கள் எமக்கும் பங்கு
தாருங்கள் என்ற போக்கு வளர்ந்து வருகிறது.
தேசிய இன சமூகங்கள் சட்டபூர்வமான முறையில் இலங்கையின் ஆட்சி முறையில் பங்குதாரர்களாக ஆக்கப்படல் வேண்டும். அதேவேளை நாட்டின் சமூக பொருளாதார விடயங்கள் தொடர்பில் மக்களின் அபிப்பிராயங்கள் எதிர்ப்பியக்கங்கள் ஜனநாயக முறையில் அணுகப்படல் வேண்டும். அவற்றை முன்னெடுப்பதற்கான சுதந்திரமும் மறுதலிக்க முடியாத வகையில் அரசியலமைப்பில் இடம் பெறல் வேண்டும். இராணுவவாத போதனைகள் கட்டுப்பாடுகள் மனிதகுலத்திற்கு பொருந்தாதவை. அது மனித தேடல் உணர்வை புதியது புனைவதற்கான ஆற்றலை மழுங்கடித்துவிடும். போர் வெற்றியினூடு இராணுவவாத கண்ணோட்டத்தின் ஊடாக மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் அணுகமுடியாது.
இலங்கையின்
அரசியலமைப்பு ஜனநாயகம் சார்ந்த சீர்திருத்தத்திற்கு உள்ளாக வேண்டும். சர்வ
அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உட்பட மீள் பரிசீலனை செய்வது நாட்டிற்கு
நல்லது. மிக அவசியமானது. எதிர்காலத்தில் தேர்தல் என்று வரும் போது இந்த
முறைமையை அகற்றுவதற்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கே மக்கள்
வாக்களிக்க வேண்டும். நிலமானிய உறவு முறைகள் சண்டித்தன அரசியல்
மக்களிடமிருந்து அன்னியப்பட்ட நட்பில்லாத சட்டம் ஒழுங்கு;(பொலிஸ்)
துறையில் மாற்றம் வேண்டும்.
இலங்கையின் பிரதானமான இரண்டு மொழிகளிலும் (தமிழ் சிங்களம்) மக்கள் சுயமரியாதை கௌரவத்துடன் நிர்வாகம் மற்றும் அதிகார மட்டத்துடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படல் வேண்டும். சிவப்பு நாடாக்கள் எதுவும் தடையாக இருக்கக் கூடாது. கட்டுநாயக்காவிலோ சிலாபத்திலோ தொழிலாளர்கள் மீனவர்களுடன் இலங்கையின் சட்டம் ஒழுங்குத்துறை நடந்துகொண்டது போன்ற பாராம்பரியம் இலங்கையிலிருந்து அகல வேண்டும். 1940 களில் தொழிற்சங்கவாதி கந்தசாமி சுட்டுக்கொல்லப்பட்டதாக இருக்கட்டும் 1970களில் டெல்டா டெவன் சங்குவாரி சிவனு லெட்சுமனன் போன்றவர்களுக்கு நடந்ததாக இருக்கட்டும் 1971 கிளர்ச்சியில் கதிர்காமத்து அழகுராணி மன்பெரிக்கு நடந்ததாக இருக்கட்டும் இன்று லலித் குகன் போன்றவர்களுக்கு நேர்ந்ததாக இருக்கட்டும் சாதாரண இளைஞர்கள் தொழிலாளர்களுக்கு நேர்ந்தவை இனிமேலும் நிகழக்கூடாது. தெற்கிலும் வடக்கிலும் இவை நிகழ்ந்தன. பல்லாயிரக்கணக்கான சாதாரண பொது மக்களின் இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளின் மரணங்களை சாதாரணமாக அலட்சியம் செய்துவிட்டு போகமுடியாது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் 40 ஆயிரம் பேர் வீதிக்கு துரத்தப்பட்டார்கள். அவர்களுக்கு பிறகு எந்த ஆட்சியிலும் நீதி கிடைக்கவில்லை. இனக்கலவரங்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்கவில்லை. யுத்தத்தின் போதுபேரழிவுக்குள்ளான மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. நீடித்து நிலவும் இனப்பிரச்சனைக்கான தீர்வும் காலங்கடந்து இழுபட்டுச்செலிகிற்து அரசாங்காத்தால் வௌ;வேறு காலங்களில் நியமிக்க்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவும் உண்மைகளை கணடிறியும் குழுவும் சில உருப்படியான பரிந்துரைகளைச் செய்துள்ளன. இவை முதலில் நடைமுறைக்கு வரவேண்டும். சில சீர்திருத்தங்கள் நிகழந்திருக்கின்றன என்பதற்காக தொழிலாளர்கள் விவசாயிகள் மத்தியதர வர்க்கத்தினர் கல்வித்துறையினரின் பிரச்சினைகள் தீர்த்துவிட்டதாகிவிடாது. 40 வருடங்களுக்கு மேல் அவசரகால சட்டத்தின் கீழும் 33 வருடங்களுக்கு மேல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் ஆட்சி நடத்துபவர்களுக்கு சற்று வெட்க உணர்ச்சி வேண்டும். சமூகங்களிடையே சுயமரியாதை கௌரவத்துடனான நல்லிணக்கமும் ஜனநாயக மனித உரிமைகளும் பாதுகாக்கப்படல் வேண்டும். அப்போதுதான் இலங்கையில் சமூக பொருளாதார மறுமலர்ச்சி சாத்தியம். நாம் ஜனநாயக உலகுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளவும் புதிய உலக சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். எமது சுற்றாடல் புவி வெப்பமாதல் நாடு பிராந்தியம் உலகம் பற்றிய அக்கறை இருக்க வேண்டும். சிறிய தீவு சிந்தனை பத்தாம்பசலித்தனமாகவும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகவும் அமையும். சுகு-ஸ்ரீதரன் நன்றி தேனீ
கொழும்புவிற்கு மனம் திறந்த மடல்
அதிபர்
மகிந்த ராஜபக்சே கடந்த வாரம் புதுதில்லி வருகை தந்தது, இந்தியா - இலங்கை
இடையி லான உறவுகள் தொடர்பாக இருந்து வந்த சந்தேகங்கள் பல களையப்பட உதவி
இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித
உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா
ஆதரித்ததிலிருந்து, கொழும்பு ஒருவித மான நம்பிக்கையற்ற உணர்வுட னேயே
இந்தியாவுடன் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் நிலவும் கட்சி களுக்கிடையிலான
போட்டி அரசியலில், திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இலங்கை அரசுக்கு
எதிராக ஆவேசமான நிலையினை எடுத்து வருகின்றனர். இது இந்தியாவிற்கு எதிராக
பாது காப்பற்ற உணர்வினை கொழும்புவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது. மத் தியப்
பிரதேசத்தில் உள்ள சாஞ்சி யில் நிறுவப்படவுள்ள சர்வதேச புத்தர் பல்கலைக்
கழகத்தின் திறப்புவிழ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த இலங்கை அதிபர்
ராஜபக்சே, தில்லியில் சிறிது நேரம் தங்கி இருந்தது இரு நாடுகளின் இடையே
உறவுகளை மறு படியும் புதுப்பித்துக் கொள்ள ஒரு சரியான வாய்ப்பை அளித்தது.
கடந்த இருபதாண்டுகளில், இரு தரப்பிலும் நட்புரீதியான உறவுகள் வெற்றிகரமாக
வலுப்படுத்தப் பட்டன.
அதன்மூலம்
இரு நாடு களின் பொருளாதார உறவுகளும் விரிவடைந்தன. உலக அளவில் இந்தியா,
இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். அதே போன்று,
தெற்காசியாவில், இலங்கை, இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக்
கூட்டாளியாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுலா, மத ரீதியான,
விளையாட்டு ரீதியான மற்றும் கல்வி ரீதியான தொடர்புகளும் தழைத்தோங்கி
வளர்ந்து கொண்டிருந்தன. எல்டிடிஇ-யினரைத் தோற்கடித்திட இலங்கை ராணு
வத்திற்கு இந்தியா ராஜதந்திர ரீதியில் பங்களிப்பினைச் செய்தது. ராஜபக்சே
அரசாங்கம் சிங்களர் வெற்றியை அடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத்
தீர்வு காண்பதற்குப் பதிலாக, தமிழ்மக்கள் மீது சிங்களர்களின் வெற்றி
ஆதிக்கம் செலுத்த அனுமதித்து வருகிறது என்பதில் எவ்வித ஒளிவுமறைவும்
கிடையாது. இலங்கை அமைதியாக வும், ஒன்றுபட்டும் இருக்க வேண்டும்
என்பதில்தான் இந்தியா உறுதி பூண்டிருக்கிறது. இதற்கு தமிழர் பிரச்சனைக்கு
சுமூகத் தீர்வு காணப் பட வேண்டியது அவசியமாகும். இதனை விடுத்து
‘‘தமிழ்நாட்டு அரசியலு’’க்கு புதுதில்லி ஆர்வம் காட்டுவதாகக் கூறுவது
எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள மறுப்பதாகும். அதேபோன்று ‘சீனாவைக்
காட்டி’ அல்லது ‘பாகிஸ்தானைக் காட்டி’ இந்தியாவைப் பயமுறுத்து வதும்
இந்தியா இதன் மீது காட் டிடும் முக்கியத்துவத்தை மாற்றி விடாது.
இலங்கைத்
தமிழர் பிரச்ச னைக்கு ஓர் அரசியல் தீர்வு காண் பதற்கான ஒரு திட்டத்தை
இறுதிப் படுத்த வேண்டியதன் அவசரத்தை அதிபர் ராஜபக்சேயிடம் இந்தியா,
இருநாட்டின் பாதுகாப்பு நலன் களை கணக்கில் எடுத்துக் கொண்டு, வலியுறுத்தி
இருக்கிறது. இது காலங்கடந்த ஒன்று என்ற போதிலும், இப்போது மிகவும் சரியாக
வலியுறுத்திக் கூறப்பட்டி ருக்கிறது. இலங்கை அரசாங்கத்திற் கும் தமிழ்
தேசியக் கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இதுவரை உருப்படியான
பலனைத் தந்திடவில்லை. தமிழ் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற தேர்வுக் குழுவில்
இணைவதற்கு நம்பிக்கை கொள்ளவில்லை. இதற்கு முன் இருந்த அனைத்துக்
குழுக்களின் உழைப்பும் வீணாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய பின்னணியில், தமிழர்களின் நம்பிக்கையைப் பெறக் கூடிய விதத்தில்
நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு
இருக்கிறது. வட மாகா ணத்தில் தேர்தலை நடத்துவது இதற்காக எடுத்து
வைக்கப்படும் மிக முக்கியமான முதல் அடியாகும். தேர்தலுக்காக எவ்வளவு
சீக்கிரம் தேதி அறிவிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு இரு தரப்பினருக்கும்
இடையே சமரச இணக்கம் காண்பதற்கான பாதை எளிதாகும்.
(தி இந்து:28.09.12தலையங்கம்)
தமிழில்: ச. வீரமணி
நன்றி தேனீ
![]() இதனைத்தொடர்ந்து தவிசாளர் ஒருவர் தெரிவு இடம்பெற்றதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஐPப் அப்துல் மஐPத் சபை உறுப்பினர் ஆரியவத்தி கலப்பத்தியின் பெயரை முன்மொழிய ஸ்ரீ.ல.மு.கா கிழக்கு மாகாண சபைக் குழுத்தலைவர் ஏ.எம்.nஐமீல் அதனை வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது. ![]() இதனையடுத்து பிரதித்தவிசாளர் தெரிவு செயலாளரினால் அறிவிக்கப்பட்ட போது மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது.இதனை ஸ்ரீ.ல.மு.கா.அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிந்தார். இதனையடுத்து கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதையொட்டி 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படுமென புதிய தவிசாளர் ஆரியவத்தி கலப்பத்தி தெரிவித்தார். ![]() நன்றி வீரகேசரி இந்திய அரசின் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள்
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 50
ஆயிரம் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை
காலை மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு
ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.
மகாத்மா காந்தியின் 143 ஆவது பிறந்த நாளான இன்று குறித்த வீட்டுத் திட்டம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம்
வீட்டுத்திட்டத்தில் 43 ஆயிரம் வீடுகள் வடக்கில் யுத்தத்தினால்
பாதீக்கப்பட்ட மக்களுக்கும் ஏணைய 7 ஆயிரம் வீடுகள் கிழக்கு மாகாண
மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை பெரிய மடு ம.வி பாடசாலையில் இடம் பெற்ற
குறித்த ஆரம்ப நிகழ்வின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
ராஜபக்ஸ,கைத்தொழில் மற்றும் வானிபத்துரை அமைச்சர் றிஸாட் பதீயுதீன்
,இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தா,வீடமைப்பு அமைச்சர்
விமல் வீரவன்ச, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய 5
பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட
மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
ராஜபக்ஸ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த நிகழ்வு பெரியமடு கிராமத்தில்
இடம் பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கான
உறுதிக் கடிதங்கள் வைபவ ரீதியாக அமை்சர்களினால் வழங்கி வைக்கப்பட்டது
வழங்கி வைக்கப்பட்டது.
![]() ![]() இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: தி.மு.க. தலைவருக்கு பிரதமர் மன்மோகன் கடிதம்
இலங்கையில் தமிழர்களுக்கு
அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,
தி.மு.க.தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு குறித்து கலைஞர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், கருணாநிதிக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கையில் இறுதிக்கட்ட போர் முடிவுற்ற பின்னர் இலங்கைத் தமிழர்களின் நலனில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது.
தமிழர்களின் மறுவாழ்வு,
குடியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சமத்துவம்,
சுயமரியாதையுடன் வாழ வலியுறுத்தி வருகிறோம்.
அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
Wednesday, October 3, 2012
கிழக்கு மாகாண சபையில் தமிழர்களுக்கு ஏன் பதவி எதுவும் கிடைக்கவில்லை? விளக்குகின்றார் துரை
|
No comments:
Post a Comment