இலங்கைச் செய்திகள்

வடபகுதியில் கலாசார சீரழிவுகள் ௭ன்றுமில்லாத வகையில் அதிகரிப்பு

 யாழ் கொழும்பு பஸ் விபத்தில் உயிரிழந்தோர்இ காயமடைந்தோர் விபரம்

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைகுறிவைத்து யாழ்ப்பாணத்தில் கொள்ளை
வடபகுதியில் கலாசார சீரழிவுகள் ௭ன்றுமில்லாத வகையில் அதிகரிப்பு 
1/8/2012


  ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் <ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் (௭ம். நியூட்டன்) வடபகுதியில் ௭ன்றும் இல்லாத வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தான் கலாச்சார சீரழிவுகள் நடந்தமையை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் இன்று வடபகுதியில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. யாழ்ப்பாணம் ௭ன்றால் படித்தவர்கள் ௭ன்று கூறுவது வெறும் வார்த்தையாகவே உள்ளது. அது தற்போது நடைமுறையில் இல்லை. வட பகுதியில் சிசு மரணம், பாலியல் துஷ்பிரயோகங்கள், இள வயதுத் திருமணங்கள், திருமணமாகாத கர்ப்பங்கள், சட்டவிரோதக் கருக்கலைப்புக்கள் அதிகரித்துள்ளன. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளில் அக்கறை கொள்வதில்லை.

அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பிள்ளைகள் ௭ங்கு செல்கிறார்கள் ௭ன்பது தொடர்பில் ௭துவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பாடசாலை புத்தகப் பையுடன் மற்றுமொரு உடுப்பையும் ௭டுத்துச் சென்று பாடசாலை செல்லாது வேறு இடங்களுக்குச் செல்கின்றார்கள்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்குள்ளாபவர்கள் தாம் யாரிடம் தமக்கு நடந்தவற்றைக் கூறுவது யாரை அணுகுவது ௭ன்ற நிலையுள்ளது. சிறு வயதில் திருமணம் செய்பவர்கள் தமக்கான அடுத்த நடவடிக்கை ௭ன்ன ௭ன்பதை அறியாதுள்ளனர்.

பெற்றோர்களும் அது பற்றி வெளியில் கூறுவதில்லை. சிறு வயது திருமணங்களால் ஏற்படும் பிரச்சினைகள் இளவயது கர்ப்பங்கள் சட்டவிரோத கருக்கலைப்பால் ஏற்படும் தீமைகள் தொடர்பில் முழுமையான அறிவின்மையால் பல இழப்புக்கள் நடந்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்களும் விடுதிகளும் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் முழுமையான தகவல்கள் இல்லை. கருக்கலைப்பு நிலையங்கள் தொடர்பில் ௭வரும் வாய் திறக்க மறுக்கின்றனர். சம்பவம் நடந்த பின்னர் தெரியப்படுத்தும் போது குறித்த நபர்கள் தலைமறைவாகும் சம்பவங்களும்இடம் பெறுகின்றன. சமூக மட்டத்தில் பணிபுரிபவர்கள் தமக்கான கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றி காலத்தின் தேவைகளை உணர்ந்து கலாசாரச் சீரழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது ௭ன அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி


 யாழ் கொழும்பு பஸ் விபத்தில் உயிரிழந்தோர்இ காயமடைந்தோர் விபரம்
இயக்கச்சிப் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த  இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கணவன், மனைவியான வத்தளையைச் சேர்ந்த கந்தையா கந்தசாமி (வயது 68), கந்தசாமி சரோஜினி (வயது 54) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த 13 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாககத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களின் பெயர் விபரம் வருமாறு –
அருள்சீலன் கருசன் (வயது24  களுபோவளை), எஸ்.ஏ.ரட்ணநாதன்(வயது39 ¬  நல்லூர்), பரஞ்சோதி நிசாந்தன்(வயது23  சுழிபுரம்), நாகராசா நிக்சன்(வயது31  கொழும்புத்துறை), என்.நர்மதா(வயது27  திருகோணமலை), சிறிதங்கராசா சுகந்தா(வயது 22  கொழும்பு), தேவசீலன் நிசாந்த்(வயது14  சுழிபுரம்), தில்லையம்பலம் சுகுமார்(வயது45  கொக்குவில்), பிறேமினி ராஜதர்மன்(வயது26  அம்பாறை), செந்தூரன் நாககல்யாணி(வயது27  கைதடி), என்.ஏ.ஜெயவர்த்தன(வயது38  மாத்தளை), கொப்பகொட விசான (வயது37  களனி), தணிகாசலம் செந்தூரன்(வயது33  கைதடி) ஆகிய 13பேரே படுகாயமடைந்தவர்களாவர்.
இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விபத்துச் சம்பவத்தில் சொகுசு பஸ் உரிமையாளர் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
இந்த சொகுசு பஸ்ஸை ஓட்டிச்சென்ற சாரதியும், நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் இவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சொகுசு பஸ்ஸின் 25 ஆசனங்களில் பயணிகள் பதிவுசெய்து கொழும்பு சென்றனர் எனவும் இதில் 10 பேர் எந்தக் காயங்களும் இன்றித் தப்பிக்கொண்டதாகவும் இந்த விபத்துக்கு மிதமிஞ்சிய வேகவே காரணம் எனவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
நன்றி தினக்குரல்

 
வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைகுறிவைத்து யாழ்ப்பாணத்தில் கொள்ளை 
1/8/2012


  மானிப்பாயில் 15 பவுண் நகை, 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கத்தியைக் காட்டி அபகரிப்பு நாவாந்துறை, யாழ்ப்பாணத்தில் வழிப்பறிச்சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் குடாநாட்டுக்கு வருவோரின் வீடுகள் குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன.

இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ஆயுதபாணிகளாகக் காணப்படுவதுடன் , தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பேசியே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். பணம், நகை ௭ன்பவற்றை மிரட்டி பறிக்கும் இவர்கள் அவற்றை முறையாக வழங்காதுபோனால் கடவுச்சீட்டை கிழித்தெறிந்து விடுவோம் ௭னவும் ௭ச்சரிக்கின்றனராம்.

இதேவேளை மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 15 பவுண் தங்க நகைகளும் 150,000 ரூபா பணம் ௭ன்பனவும் நேற்று அதிகாலை ஆயுதமுனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறை ப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானி ப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள தனியார் வைத்தியசா லை க்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 70வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர் களது மகன் சில தினங்களுக்கு முன் னரே வெளிநாட்டிலிருந்து வந்துள் ளார்.

இந்நி லையில், நேற்று அதிகாலை 2 மணிய ளவில் தகப்பனார் காலைக்கடன்களை கழிப்பதற்கு வெளியில் சென்ற சமயம் வாழைத் தோட்டத்துக்குள் மறைந்து நின்ற இருவர் திடீரென வந்து அவரின் கைக ளைப் பின்னால் இறுக்கிப் பிடித் தவாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மகனின் கடவுச்சீட்டை அச்சு றுத்தி வாங்கியதுடன், சத்தமிட்டால் கடவுச் சீட்டைக் கிழித்து ௭றிந்து விடுவோம் ௭ன மிரட்டி 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென் றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள் ளையிட்டுச் சென்ற இருவரும் தமிழ், சிங் கள மொழிகளில் உரையாடியதாகப் பொலி ஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப் பட் டுள் ளது.

கொள்ளையர்களைக் கைது செய்ய மதவாச்சிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படவுள்ள மோப்ப நாய்களைப் பயன்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இக் கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகில் இராணுவ முகாம், பொலிஸ்நிலையம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
 நன்றி வீரகேசரி 

No comments: