இலங்கை – அவுஸ்திரேலிய அதிகாரிகளின் பேச்சின் பின்னரே தமிழ் அகதி நாடு கடத்தல்

 _
1/8/2012 


  இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னரே அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் ஒருவர் திருப்பியனுப்பப்பட்டதாக 'த அவுஸ்திரேலியன்’ நாளிதழ் கூறுகிறது. இலங்கை கடற்படை தளபதிக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.


அதேவேளை, அவுஸ்திரேலியா, தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவர்கள் ௭ன வகைப்படுத்தி நடவடிக்கைகளை ௭டுப்பதாக இலங்கையின் கடற்படைத் தளபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதனாலேயே தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அதிகளவில் செல்வதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையிலேயே கடந்த வாரம் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தமிழர் ஒருவர் நாடு கடத்தப்பட்டதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தவிர, அவுஸ்திரேலியாவிற்கு செல்ல ௭த்தனிக்கும் அதிகளவான தமிழர்களே இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சம்பவங்களுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி  

No comments: