நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழாவில் பல்லாயிரம் அடியார்கள் பங்கேற்பு

.
நல்லூர்க்கந்தன் ஆலய தேர்த்திருவிழாவில் யாழ். குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்  பல்லாயிரம் அடியார்கள் கலந்துகொண்டார்கள்.


ஆலய வெளிவீதி சனசமுத்திரம் போல காட்சியளித்ததோடு ஆலய சுற்றாடல் முழுவதும் வாகனங்களினால் நிறைந்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.







பொலிஸார் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். ஆலய சுற்றாடலில் இம்முறை முதல் தடவையாக மாணவர் படையணியினர் தண்ணீர் பந்தல் அமைத்து அடியவர்களுக்கு தாக சாந்தி அளித்தார்கள். காலை 7.15 மணியளவில் தேர் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு வீதியுலா வர சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சென்றன.

தேரில் சுவாமி வெளிவீதியுலா வந்தவேளையில் பலாலி இராணுவ முகாமிலிருந்து வந்த உலங்கு வானூர்தியிலிருந்து பூக்களை  மாரியாக  தேரின் மீது தூவி படையினர் வழிபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அடியார்கள் அங்கப்பிரதட்சை, கற்பூரச்சட்டி, பாற்செம்பு, தூக்குக்காவடிகள் எடுத்து தமது நோர்த்திக்கடன்களை நிறைவேற்றினார்கள்.

நன்றி வீரகேசரி 

No comments: