15/08/2012 |
இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
இந்தியாவின் 66 வது சுதந்திர தின விழாவையொட்டி காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி பின்னர், முப்படைத் தளபதிகளுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று, இன்று காலை 7.30 மணி அளவில் தேசியக் கொடியை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றி வைத்தார் .
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.நாட்டில் அரசியல் கட்சியினரிடம் ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது என்றார்.
செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக இந்தியா சார்பில் விண்கலம் செலுத்தப்படும்
இந்தியாவை போலியோ இல்லா தேசமாக மாரியுள்ளது என்று குறிப்பிட்டார். அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் போன்ற சம்பவங்கள், வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
நாட்டின் பொருளாதாரத்தை பொறுத்தவரை பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதும் வறுமையை ஒழிப்பதும் அவசரத்தேவையாக உள்ளது.
பருவ மழை குறைவான காரணத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடையும். அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது
அடுத்த ஐந்தாண்டில் மின் உற்பத்தி பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் போன்ற சம்பவங்கள், வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
என்று பிரதமர் உரையாற்றினார்.
இதேவேளை ஈழத் தமிழரின் துயர் துடைக்க இனியாவது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment