இலங்கைச் செய்திகள்




புலம்பெயர் தமிழர்களில் சிலர் கோத்தபாயவுடன் சந்தித்து பேச்சு?

கருணாநிதியின் கொடும்பாவி கொழும்பில் எரிப்பு

அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது: யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி

படிப்படியான செயல்பாடுகளினால் சீர்குலைவுக்கு உள்ளாகும் சட்டம் மற்றும் ஒழுங்கு

பள்ளிவாசல் தீயிடப்பட்டமைக்கு பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனம்

புலம்பெயர் தமிழர்களில் சிலர் கோத்தபாயவுடன் சந்தித்து பேச்சு?

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் ௭ன்று நம்பப்படுகின்ற புலம்பெயர் தமிழர்களில் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.



கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அந்தப் புலம்பெயர் தமிழர்கள் குழு வடக்கு மற்றும் கிழக்கிற்கும் விஜயம் செய்து திரும்பியதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குழுவில் அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 பேர் அடங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலிகளின் முன்னாள் ஆதரவாளரான கே.பி. ௭னப்படும் குமரன் பத்மநாதன் தலைமையிலான குழுவினரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவைச் சந்தித்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிகின்றன.

இலங்கையில் முதலீடுகளைச் செய்வது குறித்தே இந்தச் சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் வெளிநாடுகளில் இலங்கை அரசு குறித்து தவறான பரப்புரைகளில் ஈடுபடவே ண்டாம் ௭ன்று அக்குழுவினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவினர் முன்னாள் புலிகளின் புன ர் வாழ்வு நடவடிக்கை, அரசியல் கை திக ளின் விடுதலை தொடர்பான விடய ங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ள னர். அதேவேளை இலங்கையில் முதலீடு செய்வதாக இருந்தால் தமக்கு அதற்குச் சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் ௭ன்றும் அக்குழுவினர் வலியுறு த்தியதாகவும் அத்தகைய ஒரு சூழல் ஏற்படுவது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில் தான் தங்கி இருக்கிறது ௭ன்று சுட்டிக்காட்டியதாகவும் அறியமுடிகின்றது.
நன்றி வீரகேசரி



  கருணாநிதியின் கொடும்பாவி கொழும்பில் எரிப்பு
By M.D.Lucias
2012-08-12
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக்கத்துக்கு முன்னபா எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இதன்போது கருணாநிதி, சம்பந்தன் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதோடு இம் நாட்டில் ஈழம் என்ற சொல்லை பாவிக்க கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.




   நன்றி வீரகேசரி 


  அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது: யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி
 15/08/2012
ருணா, கே.பி, பிள்ளையான் போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வியெழுப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையைக் கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட தென்னிலங்கை முற்போக்குக் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
 நன்றி வீரகேசரி 


படிப்படியான செயல்பாடுகளினால் சீர்குலைவுக்கு உள்ளாகும் சட்டம் மற்றும் ஒழுங்கு
வவுனியாவை சேர்ந்த விஜிதா யோகலிங்கம் நீர்கொழும்பு காவல்துறையினரால் சித்திரவைதை செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்
   கிஷாலி பின்ரோ ஜெயவர்தனா
ஸ்ரீலங்காவில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான செயற்பாடுகள் நடைமுறையில் முறிவடைந்து போயுள்ளதைப்பற்றிய சூடான கருத்துக்கள் நிறைந்த பொது விவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. குற்றச்செயல்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதுடன், குற்றச்செயல்கள் பற்றி அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிடுவது மிகவும் அபத்தமானது என பழி சுமத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கான அடி வேரான காரணமாக உள்ளது, பிரதானமாக உயர் மட்டம் தொடங்கி அடிமட்டம் வரையான அரசியல்வாதிகளின் பாதாள உலக தொடர்புகள் மற்றும் ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரிகளின் கொடிய செயற்பாடுகள் யாவும் கண்டும் காணாமல் ஒதுக்கித் தள்ளப்படுவதுதான்.
எதையும் அறிந்து கொள்வது பொதுமக்களின் உரிமை
sl policeஇந்த வாரம் நாங்கள் கேள்விப்பட்ட அச்சமூட்டும் ஒரு கதை கொழும்பிலுள்ள வணிக நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவர், ஏற்பாடு செய்யப்பட்ட கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு, அவரை துன்புறுத்துவதற்காக மூன்று நாட்கள் சட்டவிரோதமான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த நிறுவன உரிமையாளரின் மனைவியின் கழுத்தணி ஒன்றை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டதின் பெயரிலேயே அவருக்கு இந்த உபசரணை வழங்கப்பட்டது. அவரை தடுத்து வைத்து சித்திரவதை செய்தபோதிலும் ஊகிக்கத்தக்க தகவல் எதுவும் வெளிப்படவில்லை, ஏனெனில் அந்த கழுத்தணியை உண்மையிலேயே அவர் திருடவில்லை. இதைப்பற்றி எதையும் வெளியே சொல்லக்கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டாராம். உள்ளுராட்சிமன்ற அரசியல்வாதி ஒருவரும் அந்த குழுவில் ஒரு அங்கத்தவராம்.
இதில் வரவேற்கத் தக்கதாக உள்ளது என்னவென்றால் சாதாரணமாக தண்டனை விலக்களிக்கும் கதைகளுக்கு முரண்பாடாக, கொழும்பு குற்றவியல் பிரிவினர் இந்த வாரம் சிலரை கைது செய்துள்ளதாகவும் மற்றும் உள்ளுராட்சி அரசியல்வாதி உட்பட ஏனையோரின் கைதுகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவருகிறது (ஐலன்ட், 7 ஆகஸ்ட் 2012). எப்படியாயினும் இந்த கைதுகள் சட்ட விதிகளின்படி உறுதியான நடவடிக்கைகளுக்கு முன்னோக்கி இட்டுச் செல்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
அதேவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு பிரித்தானிய சுற்றுலாப் பயணியை வேண்டுமென்றே கொலை செய்து அவருடைய பெண் நண்பரான ரஷ்ய பிரஜையை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினருக்கு உரிய தண்டனை அளிக்கப்பட்டு விட்டதா என்பதை நாம் அறிய விரும்புகிறோம? இந்த குணாதிசயம் கொண்டவரை (தற்போது பிணையில் வெளிப்படையாக வெளியே உலாவுபவரை) கட்சிப் பொறுப்புகள் மற்றும் உத்தியோக பூர்வ பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக பகிரங்க களத்தில் கடிதங்கள் வெளிவந்தன, பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன. இதுதான் உண்மையான நிலையா,அல்லது இல்லயா? அதை அறிவதற்கு பொதுமக்களுக்கு உரிமை உள்ளது.
காவல்துறை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதின் அறிகுறி
இந்தப் பத்தியானது ஸ்ரீலங்காவில் சட்டம் ஓழங்கு சீர்குலைவதைப்  பராமரப்பதில் கவனம் செலுத்தப்படுவதன் முக்கியத்துவத்துவத்தை பற்றிய கருத்தில் எழுதப்படுகிறதே தவிர, காவல் துறையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் வில்லன்களாக சித்தரிக்கும் நோக்கத்தில் இல்லை. இன்னும் சரியாக சொல்லப்போனால் காவல்துறை ஒழுக்காற்று கட்டமைப்பை மறுசீரமைப்பது மற்றும் நல்ல அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அரசியல் கட்டுப்பாடுகளை அகற்றி, மற்றும் நியமனம் பெறுவோர் அரசியல் பாதாள உலகத்தினரது சாக்கடைக்குள் உறிஞ்சப்பட்டு விடாமல் நேர்மையாக உழைப்பதற்கான வாய்ப்பினை வழங்குவதை வலியுறுத்துவதற்காகவுமே
.எந்தக் காரணத்தைக் கொண்டும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் மற்றும் குற்றத்தை குறைப்பதை ஊக்குவிப்பதற்காகவும் சித்திரவதையை ஒரு அங்கமாக பயன்படுத்தக்கூடாது என்பது வெளிப்படையான உண்மைகள். குறிப்பாக கடந்த தசாப்த காலம் முழுவதையும் பரிசீலித்தால்,சித்திரவதை நடவடிக்கைகளை பயன்படுத்துவது ஸ்ரீலங்காவிலுள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளின் கடமையின் ஒரு பகுதியாக இருப்பதை நன்கு காணலாம்.Police Bicycle
குறித்த தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது இரண்டு வேறுபட்ட அம்சங்களில் குறிப்பிடப்படுகின்றன. முதலாவதாக விசாரணை செய்வதற்காக (ஒரு பயங்கரவாத சந்தேக நபர் காவலில் உள்ளபோது) சித்திரவதை புரியப்படுவது, மற்றும் இரண்டாவதாக அதிகாரத்தை சுத்தமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக வெளிப்படையாகத் தெரியும்போது, இரண்டாவது வகையான விடயங்களில் பாதிக்கப்படுபவர்கள் சிறிய திருட்டுக்கள் செய்ததாக சந்தேகிக்கப்படுபவர்கள், அல்லது அவன் அல்லது அவள் பெயர் பெற்ற ஒரு குற்றவாளிக்காக தவறுதலாக அடையாளம் காணப்படுபவர்கள்.
உண்மையில் ஒரு காவல் துறை உத்தியோகத்தரின் பெயரைக் கேட்பது போன்ற அற்பமான விடயங்களில்கூட அத்தகைய இழிவான நடவடிக்கைகள் தொடரக்கூடும். சில சந்தர்ப்பங்களில்  முன்பு சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்கள் தங்கள் வியாபாரங்களை கைவிட்ட பின்னரும்கூட உள்ளுர் காவல்துறையினரால் தண்டிக்கப் படுகிறார்கள். அத்தகைய வியாபாரங்கள் மூலமாக அநேகமாக காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் வழங்கிவரும் இலஞ்சம் பணம் ஒரு கூடுதல் வருமானத்தை ஈட்டித்தருவதாக இருந்தது. இதன் விளைவாக சட்டவிரோத மது விற்பனையாளர்கள் தங்கள் தொழிலை கைவிடுவது இந்த அதிகாரிகளுக்கு அளவற்ற சினத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக காவல்துறையினரால் அற்பத்தனமாக கைது செய்யப்படுவபர்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை புனைவது முக்கியமான ஒரு விடயமாக உள்ளது.
இத்தகைய சந்தர்ப்பங்களின் போதெல்லாம், பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமைகள் அதாவது கைதுசெய்யப்படுவதற்கான காரணத்தை தெரிவித்தல், நீதிபதி முன்பாக விரைவாக கொண்டுசெல்வது போன்ற பண்புகள் யாவும் மறுக்கப்படுகின்றன.
குறிப்பாக பெண்கள் அபாயத்தில் சிக்கியுள்ளார்கள்
இப்படியான விடயங்களில் எல்லாம் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் பொதுவாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பிரதிபலிப்பதற்கு வவுனியாவை சேர்ந்த யோகலிங்கம் விஜிதாவுக்கு நடந்த சித்திரவதைகளை குறிப்பிடுவது பொருத்தமானது. நீர்கொழும்பு காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு ரிசர்வ் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான சிவில் உடை தரித்த ஒரு குழுவினர்; (பின்னர் அவர்கள் காவல்துறையினர் என இனங்காணப்பட்டது) அவரை அணுகி அழைத்துவந்து பின் அவரை கைது செய்து முதலில் ஒரு வாகனத் தரிப்பிடத்துக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர் ஒரு எல்.ரீ.ரீ.ஈ தற்கொலை குண்டுதாரி எனக் குற்றம்சாட்டி ஒரு குண்டாந்தடியினால் அவரது முங்கால்கள், மார்பு, அடிவயிறு மற்றும் பிட்டம் போன்ற இடங்களில் பலமாகத் தாக்கினர். நான்கு மணித்தியாலங்களின் பின்னர் நீர்கொழும்பு காவல் நிலையத்தில் உள்ள சிறைக்கூண்டு ஒன்றில் அப்போது நிலவிய அவசரகால விதிகளின்படி வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின்படி ஐந்து நாட்கள் அங்கு தடுத்து வைத்திருந்தனர்.
அவர்கள் கொடுத்த சித்திரவதையை தாங்கமுடியாமல், அவருக்கு வாசித்துக் காட்டப்படவோ அல்லது விளங்கப்படுத்தப்படாத குற்ற ஒப்புதல் கடிதம் ஒன்றில் அவர் கையெழுத்திட்டார். அதன்பின் அவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் மேலும் தாக்குதலுக்கு ஆளானார். செப்ரம்பர் 21ல்,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அளவுக்கதிகமான உடல் உபாதை மற்றும் உளவியல் அழுத்தம் என்பனவற்றால் துன்புற்றபோதிலும், உச்ச நீதிமன்றத்துக்கு செல்வதை அவர் வலியுறுத்தினார். அவரது வழக்கை கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் காவல்துறையினர் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு அவருக்கு இழப்பீடும் வழங்கியது. நீதிமன்றம் தெரிவித்திருப்பது ,ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் என சந்தேகத்தின் பேரில் அவரை கைதுசெய்ததுக்கு சாதகமாக ஒரு துளியளவு சாட்சியம்கூட கிடையாது (எப்.ஆர் முறையீடு இல.186 – 2001 எஸ்.சீ.எம். 23.08.2002 ஐ பார்க்க). அவர் சட்டத்துக்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம், அவரை விட்டு பிரிந்து சென்ற அவரது கணவர், தனக்கு நன்கு பரிச்சயமான குற்றக்காரர்களான காவல்துறை உத்தியோகத்தர்களை இந்த செயலை செய்யத் தூண்டியதுதான்.
பின்னர் ஸ்ரீலங்காவின் சித்திரவதைகளுக்கு எதிரான 1994 மாநாட்டு உடன்படிக்கையின் விசேட செயற்பாடுகளின்படி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என வினாவியபோது, பாதிக்கப்பட்டவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதே அரசாங்கத்தின் பதிலாக இருந்தது, இது சாத்தியமற்ற ஒன்று (சித்திரவதை மற்றும் ஏனைய கொடிய மனிதாபிமானமற்ற அல்லது கீழ்தரமான உபசரணை அல்லது தண்டனைக்கான ஐநா விசேட பதிவாளரின் அறிக்கையின்படி ஈ.சீ.என்.4 – 2004 – 56 – மேலதிக.1, 23 மார்ச் 2004. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 16வது அமர்வின் பத்தி 1574 பிற்சேர்க்கையில் தனிப்பட்ட வழக்குகள் அரசாங்கத்துக்கு மாற்றப்பட்டு அதன்படி பெற்ற பதில்களின் தகவல்களின் சுருக்கம் உள்ளது). இதேபோன்ற அநேகமான வழக்குகளில் இப்படியான பதிலே வழங்கப்படுகிறது, இப்படியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களுக்கு நீதி கிடைக்கும்படி செய்யவேண்டிய தனது சொந்தக் கடமையை அரசாங்கம் அலட்சியம் செய்கிறது.
படிப்படியான செயல்பாடுகளினால் சீர்குலைவுக்கு உள்ளாகும் சட்டம் மற்றும் ஒழுங்கு
அரசியலமைப்பின் 18வது திருத்தம் போன்ற விடயங்களினாலும், அதேபோல ஸ்ரீலங்காவின் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு உள்ள அச்சுறுத்தல் காரணமாகவும் சட்டம் ஒழுங்கிற்கு ஏற்பட்டுள்ள சீர்குலைவு திடீரென ஏற்பட்டதல்ல. அதன் மறுதலையாக கடந்த தசாப்தம் முழுவதும் நுணுகி ஆராய்ந்தால் இதுவும் ஒரு படிப்படியான நடைமுறைதான் என்பதை காணக்கூடியதாக இருக்குProtest .Policeம்.
காவல்துறையினரது கஷ்டம் புரிந்து கொள்ளக்கூடியதுதான். பொதுமக்களின் சட்டத்தை அமல்படுத்தும் இயந்திரம் என்பதற்கு அப்பால், இராணுவமயமான பயங்கரவாத எதிர்ப்பின் தன்மையை யுத்தம் நடைபெற்ற தசாப்தங்களில் பயன்படுத்த வேண்டியிருந்தது, இந்த நிருவாகத்தின்கீழ் காவல்துறையினர் மீதான அரசியல் கட்டுப்பாடு ஒரு புதிய உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. நேர்மையான அதிகாரிகள் சரியாக வேலை செய்வதற்கு ஏறத்தாழ முடியாத ஒரு நிலையில் இருந்தார்கள், மற்றும் பாரபட்சமற்ற ஆட்சியை நிலைநிறுத்த இயன்றளவு சாத்தியமான தற்போதைய காவல்துறை கண்காணிப்பாளர் நாயகம் மேற்கொள்ளும் முயற்சியும்  உண்மையில் முடிவுறாத பயனற்ற ஒரு பணியாகவே தோன்றுகிறது. குடித்துவிட்டு கலாட்டா செய்யும் காவல்துறை அதிகாரிகளைப்பற்றிய கதைகள் தினசரி எங்கள் பத்திரிகைகளில் பத்திபத்தியாக வருவதுடன்,  அரசியல்வாதிகள், வியாபாரிகள், எதிராளிகள், குடும்ப அங்கத்தவர்கள் போன்றவர்களின் தூண்டுதல் காரணமாக சாதாரண பொதுமக்களும் காவல்துறையினரின் கைகளிலகப்பட்டு சித்திரவதை அனுபவிக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளன.
இப்போதுள்ள நிலமை வித்தியாசமானதாக இருக்கலாம், ஒரு கட்டத்தில் தைரியமும் மதிநுட்பமும் உள்ள ஒரு சமூகம் என்று நாங்கள் செயல் பட்டால் மட்டுமே, சட்டம் ஒழுங்கு நடைமுறை இப்போது உள்ளதுபோல தலைகீழாக மாற்றமடையாமல் தடுக்க முடியும். அப்படி செய்வதற்கு நாங்கள் தவறும் பட்சத்தில், ஒரு நாளின் எந்த நேரத்திலும் ஒருவர் ஒரு அமைப்பில் முறைகேடுகளுக்கு உள்ளாகும் தருணங்களில் எங்கள் ஒவ்வொருவரையும் மிக மோசமான பின்விளைவுகளை சந்திக்கவேண்டிய ஆபத்தில் வீழ்த்துவதற்கு அது வழி வகுக்கும். ஆபத்தானது இப்போது வெறும் பயங்கரவாத சந்தேக நபர் என்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இதுதான் எங்களுடைய மிகவும் குறைபாடான செயலற்ற தன்மைக்கு நாம் கொடுக்கும் உயர்ந்த விலை.
(நன்றி : சண்டே ரைம்ஸ்)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் நன்றி தேனீ 



பள்ளிவாசல் தீயிடப்பட்டமைக்கு பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனம்
By Farhan
2012-08-16 15:44:27
மட்டக்களப்பு மாவட்ட உன்னிச்சைப் பகுதியின் இறுநூறுவில் உள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதானத்தை விரும்பும் மக்களிடையே கவலையைத் தோற்றுவித்துள்ளது என காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமது லெவ்;வை, செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் ஆகியோர் கையொப்பம் இட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைப் பகுதியின் இறுநூறுவில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதனை அண்டிய குடியிருப்புக்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்பு சம்பவத்திற்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனம் தெரிவிக்கின்றது.

கடந்த 30 வருடங்களாக இடம்பெற்றுவந்த இன முரண்பாடுகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் அடங்குகின்றனர். உயிர் மற்றும் உடைமைகளை இழந்தது மாத்திரமல்லாமல், தமது வாழ்விடங்களைக்கூட இழந்து அகதி என்ற பட்டத்துடன் பல ஆண்டு காலமாக நாட்டின் பல பகுதிகளிலும் சிதறுண்டு வாழ்ந்துவருகின்றனர்.

தற்போதைய சமாதான சூழலில் தமது பூர்வீக கிராமங்களில் மீள்குடியேறிக்கொண்டிருக்கும் உன்னிச்சைப் பகுதியின் இறுநூறுவில் கிராம முஸ்லிம்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் தொடர்ந்தும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே கடந்த 12.8.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறையில்லமான இறுநூறுவில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தீ வைப்பு சம்பவத்தை கருதவேண்டியுள்ளது. இந்தச் செயலை எமது சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்தச் சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதானத்தை விரும்பும் மக்களிடையே கவலையைத் தோற்றுவித்துள்ளது. அத்துடன,; இது தேர்தல் காலமாக இருப்பதால் இனக்கலவரத்திற்கான ஒத்திகையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தினையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     நன்றி வீரகேசரி
 

No comments: