*
அவுஸ்திரேலிய பாராளுமன்றில் சட்டம் நிறைவேற்றம்
புகலிடக்
கோரிக்கையாளர்களின் தடுப்பு முகாம்களை அவுஸ்திரேலியாவுக்கு வெளியில்
அமைப்பதற்கான சட்ட மூலத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரம்
அளித்துள்ளது. இதன்படி, புகலிடக் கோரிக்கையாளர்களின் தடுப்பு முகாம்களை
மீண்டும் பப்புவா நியுகினியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள
சிறு தீவான நவ்ருவுக்கு கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய
பிரதமர் ஜூலியா கில்லாட் நியமித்த சுயாதீன குழுவின் பரிந்துரைக்கமைய
அந்நாட்டு பாராளு மன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்ட
சட்ட மூலத்திற்கு எம்.பிக்கள் ஆதரவளித்துள்ளனர். இந்த சட்ட மூலம் தற்போது
பாராளு மன்றத்தின் செனட் சபைக்கு அங்கீகா ரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு ஆளும் தொழிலாளர் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவளிப்பதால் ஒரு சில
தினங்களில் இந்த சட்ட மூலம் நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் 2008ம் ஆண்டு
முன்னாள் பிரதமர் கெவின் ருட்டின் காலத்தில் மூடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. நன்றி தேனீ
No comments:
Post a Comment