.
ஈரானை உலுக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக
சிரிய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்
விண்வெளியிலிருந்து இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சுனிதா!
அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க ஈக்வடார் அதிபர் ஒப்புதல்
அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்க ஈகுவடோர் தீர்மானம்!
அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஸ்யா
தன்மானத்தை இழக்காத ஈரான்!
ஈரானை உலுக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வுயர்வு
தப்றிஸ் மற்றும் அஹார் நகர்களுக்கு அருகில் 6.4 ரிச்டர் மற்றும் 6.3 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சிகள் தாக்கின. மேற்படி பூமியதிர்ச்சி சம்பவங்களால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான மக் கள் தற்காலிக முகாம் களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர். வர்ஸகான், ஹரிஸ் கிழக்கு அஸெர்பெ ய் ஜான் ஆகிய பிரதேசங்களிலேயே பெரு மளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
தற்காலிக முகாம்களில் 16000 பேருக்கும் அதிகமானோர் தங்கியுள்ளதாக ஈரானிய செம்பிறைச் சங்கம் தெரிவித்தது.
பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ள ஈரா னிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உத விகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.
பிரதான இரட்டை பூமியதிர்ச்சி சம்பவ ங்களைத் தொடர்ந்து சிறிய அளவான சுமார் 10 பூமியதிர்ச்சிகள் அப்பிராந்தி யத்தை தாக் கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2003 ஆம் ஆண்டு ஈரானின் பாம் நகரை தாக்கிய பூமியதிர்ச்சியொன்றில் சிக்கி 25,000 பேர் பலியானமை குறிப்பிட த்த க்கது.
நன்றி வீரகேசரி

அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி
வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியிலிருந்து இந்தியர்களுக்கு தனது
சுதந்திரதின வாழ்த்ச் செய்தியை தெரிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் கடந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து சோயுஷ் டி.எம்.ஏ.-05எம் என்ற விண்கலத்தில் சர்வதேச விண்வெளிக்கு புறப்பட்டு சென்றார்.
அவருடன், ரஷ்யாவை சேர்ந்த யூரி மலன்சைன்கோ, ஜப்பானின் அகிஹினோ ஹோஷிடி ஆகியோரும் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் விண்வெளி மையத்தில் இருந்தபடியே இந்தியர்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியையும் ஏற்றினார்.தனது சுதந்திர தின விழா வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-
இன்று சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு எனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். நான் ஒரு பாதி இந்தியன். எனது தந்தை குஜராத்தை சேர்ந்தவர். எனவே இந்திய கோட்பாடு மற்றும் கலாச்சாரத்தில் எனக்கும் பங்கு உண்டு.
இந்த சுதந்திர தின விழாவில் எனக்கும் பங்கு உண்டு என்பதில் கர்வம் கொள்கிறேன். இந்தியா ஒரு அதிசயத்தக்க நாடு. இந்தியன் என சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998-ம் ஆண்டில் 'நாசா' மையத்தில் விண்வெளி வீராங்கனையாக சேர்ந்தார். சர்வதேச விண்வெளியில் 195 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்கு அதிக நாட்கள் தங்கிய முதல் பெண் வீராங்கணை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
நன்றி வீரகேசரி
அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்க ஈகுவடோர் தீர்மானம்!
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடோர் நாட்டு தூதரகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தஞ்சமடைந்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் எச்சரிக்கைக்கு மத்தியிலேயே ஈகுவடோர் இம்முடிவினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஸ்யா
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலொன்று அமெரிக்க
கடற்பரப்புக்குள் நுழைந்து உளவுப்பார்த்துச் சென்ற சம்பவம் தொடர்பான
தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த கப்பலானது அமெரிக்காவின் அனைத்து கண்காணிப்புகளையும் மீறி தனது பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.
ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலெனத் தெரிவிக்கப்படுகின்றது.
விளாடிமீர் புடின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியான பின்னரே இந்த ஊடுருவல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகின்றது.
அக்கப்பல்அமெரிக்க கடல் பகுதியை விட்டு வெளியே சென்ற பிறகே இந்தத் தகவல் அமெரிக்கக் கடற்படைக்கு தெரியவந்துள்ளது.
எனினும் அமெரிக்க இதனை மறைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலின் நோக்கம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை அழிப்பது மட்டுமே என இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில் ரஸ்ய நீர்மூழ்கியொன்று அமெரிக்க கடற்பரப்பில் இணங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தன்மானத்தை இழக்காத ஈரான்!
பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா வழங்க முன்வந்த நிவாரண உதவியை ஏற்க முடியாது என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில், தப்ரிஸ் நகரில், கடந்த 11ம் தேதி, இரண்டு முறை பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதில், 306 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தால் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அரசு, நிவாரண உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது.
தற்போது இதுகுறித்து, ஈரான் உள்துறை அமைச்சர் ஹசன் கடாமி குறிப்பிடுகையில், "பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா நல்லெண்ணத்துடன் உதவுவதாக தெரியவில்லை. தற்போது, எங்களுக்கு மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. அமெரிக்கா உண்மையில் உதவுவதாக நினைத்தால், மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்' என்றார்.
மேலும் ஜேர்மனி, தாய்வான்ஆகிய நாடுகளிடமிருந்தான உதவிகளையும் ஈரான் ஏற்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் கட்டார், பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வழங்கிய உதவிகளை ஈரான் ஏற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஈரான் அணுச்செறிவாக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க உட்பட பல நாடுகள் அதன்மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. நன்றி வீரகேசரி
ஈரானை உலுக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக
சிரிய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்
விண்வெளியிலிருந்து இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சுனிதா!
அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க ஈக்வடார் அதிபர் ஒப்புதல்
அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்க ஈகுவடோர் தீர்மானம்!
அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஸ்யா
தன்மானத்தை இழக்காத ஈரான்!
ஈரானை உலுக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வுயர்வு
வட மேற்கு ஈரானை சனிக்கிழமை தாக்கிய
இரட்டை பூமியதிர்ச்சிக ளில் சிக்கி உரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஆக
உயர்ந்துள்ளது. மேலும் இதில் சிக்கி 2000 பேருக்கும் அதிகமானோர்
காயமடைந்துள்ளனர்.
தப்றிஸ் மற்றும் அஹார் நகர்களுக்கு அருகில் 6.4 ரிச்டர் மற்றும் 6.3 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சிகள் தாக்கின. மேற்படி பூமியதிர்ச்சி சம்பவங்களால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான மக் கள் தற்காலிக முகாம் களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர். வர்ஸகான், ஹரிஸ் கிழக்கு அஸெர்பெ ய் ஜான் ஆகிய பிரதேசங்களிலேயே பெரு மளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
தற்காலிக முகாம்களில் 16000 பேருக்கும் அதிகமானோர் தங்கியுள்ளதாக ஈரானிய செம்பிறைச் சங்கம் தெரிவித்தது.
பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ள ஈரா னிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உத விகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.
பிரதான இரட்டை பூமியதிர்ச்சி சம்பவ ங்களைத் தொடர்ந்து சிறிய அளவான சுமார் 10 பூமியதிர்ச்சிகள் அப்பிராந்தி யத்தை தாக் கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2003 ஆம் ஆண்டு ஈரானின் பாம் நகரை தாக்கிய பூமியதிர்ச்சியொன்றில் சிக்கி 25,000 பேர் பலியானமை குறிப்பிட த்த க்கது.
நன்றி வீரகேசரி
சிரிய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்
14/08/2012 |
சிரியா நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தீவிர
தாக்குதல் நடத்திவருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை சமாளிக்க சிரிய அரசு விமானத்தாக்குதல்
நடத்தி வருகின்றது.
இந்நிலையில், நேற்று கிழக்கு சிரியாவில் சிரியா இராணுவ போர்விமானம் ஒன்று
வெடித்துச் சிதறி, தரையில் விழுந்தது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவே விமானம் விழுந்து
நொறுங்கியது என சிரியா அரசு செய்தி தொலைக்காட்சியில் அறிவித்தது.
ஆனால், கிழக்கு சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் விமானம் வானில்
தாழ்வாகப் பறந்துவந்தபோது, தாங்கள்தான் அதை சுட்டுவீழ்த்தியதாக
தெரிவித்தனர்.
போர் விமானம் வெடித்து சிதறும்போது கிளர்ச்சியாளர்கள் வெற்றிகளிப்பில்
கோஷமிட்டனர்.
இதேவேளை சிரியாவில் பல பகுதிகளில் இராணுவத்தினருக்கும்,
கிளர்ச்சியாளர்களுக்குமிடையே உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதில் அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரிவிண்வெளியிலிருந்து இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சுனிதா!
15/08/2012 |
சுனிதா வில்லியம்ஸ் கடந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து சோயுஷ் டி.எம்.ஏ.-05எம் என்ற விண்கலத்தில் சர்வதேச விண்வெளிக்கு புறப்பட்டு சென்றார்.
அவருடன், ரஷ்யாவை சேர்ந்த யூரி மலன்சைன்கோ, ஜப்பானின் அகிஹினோ ஹோஷிடி ஆகியோரும் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் விண்வெளி மையத்தில் இருந்தபடியே இந்தியர்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியையும் ஏற்றினார்.தனது சுதந்திர தின விழா வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-
இன்று சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு எனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். நான் ஒரு பாதி இந்தியன். எனது தந்தை குஜராத்தை சேர்ந்தவர். எனவே இந்திய கோட்பாடு மற்றும் கலாச்சாரத்தில் எனக்கும் பங்கு உண்டு.
இந்த சுதந்திர தின விழாவில் எனக்கும் பங்கு உண்டு என்பதில் கர்வம் கொள்கிறேன். இந்தியா ஒரு அதிசயத்தக்க நாடு. இந்தியன் என சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998-ம் ஆண்டில் 'நாசா' மையத்தில் விண்வெளி வீராங்கனையாக சேர்ந்தார். சர்வதேச விண்வெளியில் 195 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்கு அதிக நாட்கள் தங்கிய முதல் பெண் வீராங்கணை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
நன்றி வீரகேசரி
அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க ஈக்வடார் அதிபர் ஒப்புதல்
லண்டன்:
"விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க, ஈக்வடார்
நாடு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு
ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டு, பரபரப்பை
ஏற்படுத்தியவர், ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக,
சுவீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அசாஞ்ச்,
பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். சுவீடன் கோரிக்கைப்படி, இவர் கைது
செய்யப்பட்டார். லண்டன் கோர்ட் இவருக்கு, ஜாமின் வழங்கியது. இதற்கிடையே,
தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, சுவீடன் கோரியது. இதை எதிர்த்து,
அசாஞ்ச் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் ஏழு
நீதிபதிகளில், ஐந்து நீதிபதிகள், அசாஞ்சை சுவீடனிடம் ஒப்படைக்கும்படி
உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, அசாஞ்ச், மேல் முறையீடு
செய்தார். ஆனால், இவரது மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து,
அசாஞ்சை கைது செய்து, சுவீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை
தவிர்ப்பதற்காக, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில்,
கடந்த, ஜூன் 19ம் தேதி தஞ்சம் புகுந்தார். தூதரகத்தை விட்டு
வெளியேறும்பட்சத்தில், அவர் கைது செய்யப்படுவார். இதுகுறித்து, அசாஞ்ச்,
முன்பு குறிப்பிடுகையில், "சுவீடனுக்கு என்னை நாடு கடத்தினால்,
அமெரிக்காவிடம் நான் ஒப்படைக்கப்படுவேன். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை
வெளியிட்டதற்காக, எனக்கு அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம்
உள்ளது' என்றார். அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க, ஈக்வடார் அதிபர் ரபேல்
கொரியா, தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். ஒலிம்பிக் போட்டி முடிந்த பிறகு,
ரபேல், தனது கருத்தை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதுகுறித்து,
ரபேல் குறிப்பிடுகையில், "அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்கப்படும். இதற்கான
சர்வதேச சட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது' என்றார். ஈக்வடார்
அதிபர் ஒப்புதல் அளித்தாலும், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தை விட்டு
வெளியேறிதும், அவர் கைது செய்யப்பட உள்ளதால், இது தொடர்பாக தூதரக
அதிகாரிகள், போலீசாருடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். அசாஞ்சை கைது
செய்யாமல் தவிர்ப்பதற்கு, பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளாகக்
கூறப்படுகிறது.
நன்றி தேனீ அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்க ஈகுவடோர் தீர்மானம்!
By
Kavinthan Shanmugarajah 2012-08-16 18:17:14 |
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்கவுள்ளதாக ஈகுவடோர் அறிவித்துள்ளது.
ஈகுவடோர் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரிகாடோ படினோ இவ்வறிப்பை மேற்கொண்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடோர் நாட்டு தூதரகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தஞ்சமடைந்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் எச்சரிக்கைக்கு மத்தியிலேயே ஈகுவடோர் இம்முடிவினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஸ்யா
16/08/2012 |
குறித்த கப்பலானது அமெரிக்காவின் அனைத்து கண்காணிப்புகளையும் மீறி தனது பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.
ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலெனத் தெரிவிக்கப்படுகின்றது.
விளாடிமீர் புடின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியான பின்னரே இந்த ஊடுருவல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகின்றது.
அக்கப்பல்அமெரிக்க கடல் பகுதியை விட்டு வெளியே சென்ற பிறகே இந்தத் தகவல் அமெரிக்கக் கடற்படைக்கு தெரியவந்துள்ளது.
எனினும் அமெரிக்க இதனை மறைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலின் நோக்கம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை அழிப்பது மட்டுமே என இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில் ரஸ்ய நீர்மூழ்கியொன்று அமெரிக்க கடற்பரப்பில் இணங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தன்மானத்தை இழக்காத ஈரான்!
16/08/2012 |
ஈரானில், தப்ரிஸ் நகரில், கடந்த 11ம் தேதி, இரண்டு முறை பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதில், 306 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தால் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அரசு, நிவாரண உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது.
தற்போது இதுகுறித்து, ஈரான் உள்துறை அமைச்சர் ஹசன் கடாமி குறிப்பிடுகையில், "பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா நல்லெண்ணத்துடன் உதவுவதாக தெரியவில்லை. தற்போது, எங்களுக்கு மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. அமெரிக்கா உண்மையில் உதவுவதாக நினைத்தால், மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்' என்றார்.
மேலும் ஜேர்மனி, தாய்வான்ஆகிய நாடுகளிடமிருந்தான உதவிகளையும் ஈரான் ஏற்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் கட்டார், பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வழங்கிய உதவிகளை ஈரான் ஏற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஈரான் அணுச்செறிவாக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க உட்பட பல நாடுகள் அதன்மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment