சகுனி - விமர்சனம்
- Wednesday, 27 June 2012

இடித்துத் தள்ளிவிட்டு அங்குதான் ரயில்வே டிராக் போட திட்டமிடுகிறது
அரசு. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற பொதுநல நோக்கத்தோடு (?)
முதல்வரை சந்திக்க வருகிறார் ஹீரோ கார்த்தி. வந்த இடத்தில் இவர் பண்ணும்
சகுனி வேலைகள்தான் முழு படமும்.
கோட், சூட் சகிதமாக வந்திறங்கும் கார்த்தியை 'வெயிட்
பார்ட்டி' என்று கருதி அவருக்கு செலவு செய்யும் சந்தானம், கடைசியில்
ஏமாந்து தொலைப்பது ஜாலி துவக்கம். ரஜினி கமல் ரசிகர்களையும் பாக்கெட்டில்
வைத்துக் கொள்ள துடிக்கும் இவர்களது யுக்தி, காலத்திற்கேற்ற சமயோஜித
புத்தி! அப்புறம் திடீரென்று தான் வந்த வேலை கார்த்தியின் நினைவுக்கு வர,
அவர் வைக்கும் ஸ்டெப்புகள் அத்தனையிலும் கொஞ்சம் மிரட்சி, கொஞ்சம் வறட்சி.
ஆப்பக்கடை ராதிகாவை அந்த ஊருக்கே மேயராக்குகிறார்.
எலக்ஷன் நேரத்தில் தன் வீட்டில் கை நனைத்து பின்பு நன்றி மறந்த முதல்வர்
பிரகாஷ்ராஜை ஆட்சி கட்டிலில் இருந்து தள்ளிவிடுகிறார். ஜெயிலில் ஜால்ரா
வாத்தியத்தில் மெய் மறந்து கிடக்கும் எதிர்க்கட்சி தலைவர் கோட்டா
சீனிவாசராவை முதல்வராக்குகிறார். இறுதியில் டில்லிக்கே ராஜாவாக
துடிக்கிறார். இப்படியாக கார்த்தியின் டிரேட்மார்க் எண்ட் சிரிப்போடு
படத்திற்கு எண்ட் போடப்படுகிறது.
முதல் படத்திலிருந்து, சகுனிக்கு முந்தைய படம்
வரைக்கும் கார்த்தியின் கதை கேட்கும் இலாகாவிலிருந்த முக்கிய நபர்
தலைமறைவாகியிருக்கிறார் போலும்... ஆனால் அவரை தேடிப்பிடிக்க வேண்டிய நேரம்
வந்தாச்சு கார்த்தி.
அரசியல் படம் என்று முடிவெடுத்தாகி விட்டது. ஊசியை
வளைத்து வளைத்து குத்துவதற்குதான் இங்கு ஆயிரமாயிரம் சம்பவங்கள்
இருக்கிறதே, அப்புறம் என்ன தயக்கம்? மற்றபடி கார்த்தியின் சிரிப்பும்,
அந்த நக்கலும் என்றும் மாறா இளமையோடு துள்ளித்திரிகிறது படம் முழுக்க.
சந்தானத்தின் ட்ரிப்பிள் மீனிங் பஞ்ச்சுகளை புரிந்து
கொண்டு, 'அடக்கடவுளே' என்று அதிர்வதற்குள் அடுத்ததை போட்டுத் தாக்குகிறார்
மனிதர்.
மசாலா படத்தில் கதாநாயகிக்கு என்ன பெரிசாக வேலை
இருந்துவிடப் போகிறது? ப்ரணிதாவின் கோழிமுட்டை கண்களும், கொழுக் மொழுக்
சமாச்சாரங்களும் நாலைந்து டூயட்டுகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது.
நடிப்பை பொழிஞ்சாதான் பார்ப்போம்னு யாரும் துடிக்காத போது அவரும்தான் என்ன
செய்வார் பாவம்?
மேயராகிவிட்ட ராதிகா, ஒவ்வொரு படியேறும்போதும் தனது
வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் எண்ணிப் பார்க்கிற காட்சியில்
டைரக்டரின் சரக்கு பளிச்சிடுகிறது. ஆனால் அவ்ளோ பெரிய ஸ்டோரிக்கு இவ்ளோ
சரக்கு போதுமா பிரதர்?
அட... கொஞ்சம் அழகாக, மெருகு குலையாமல் கிரண்!
ஹ்ம்ம்... ஜெமினியில் அறிமுகமாகி தமிழ்சினிமாவில் பிழிந்தெடுக்கப்பட்ட அதே
கிரண்தான். பிரகாஷ்ராஜின் தயவால் மேயராக நினைத்தவர் குண்டுக்கு தப்பி
எதிரி முகாமில் சரணடைந்து படத்தின் 'கொண்டை வளைவு' திருப்பத்திற்கும்
உதவியிருக்கிறார்.

நாசர் 'பேஷா' நடித்து அந்த ஜீன்ஸ் சாமியாரை
தோற்றப்படுத்துகிறார். பீடியில் ஆரம்பித்து கோடியில் புரளும் அவரது ஆன்மீக
பிசினெஸ் கடைந்தெடுத்த உண்மை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் சில மெலடிகளுக்கு உயிர்
இருக்கிறது. பூ படத்தின் மூலம் அறிமுகமாகி 'கெத்தய்யா'வாக வலம் வந்த
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இப்படத்தை பொறுத்தவரை வெறும் வெ...!
சூரிய நமஸ்காரத்தை எதிர்பார்த்து போகிறவர்களுக்கு மினுக்கட்டாம் பூச்சியின் வெளிச்சமே மிச்சம்!
நன்றி தினக்குரல்
மறுபடியும் ஒரு காதல்
மறுபடியும் ஒரு காதல்

'மறுபடியும் ஒரு காதல்
கோட்டை' என்றே தலைப்பு வைத்திருக்கலாம். 'ஈயடிச்சான்...' விஷயத்தில்தான்
அப்படியொரு ஒற்றுமை. பார்க்காத காதலால் பரவசப்படும் ஒரு ஜோடி,
சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறது. தான் காதலித்த அதே
இதயத்தோடுதான் இணைந்திருக்கிறோம் என்பதே புரியாமல் எண்ணையும் தண்ணீருமாக
திரியும் இருவரும் உண்மை தெரியவரும்போதாவது ஒன்று சேர்ந்தார்களா என்பது
க்ளைமாக்ஸ்.
லண்டனில் படிக்கும் பணக்கார
பெண் ஜோஷ்னா, இந்தியாவிலிருக்கும் அனிருத்தை காதலிக்கிறார். ஒரு வானொலி
நிகழ்ச்சிக்காக இருவரும் கவிதை எழுதி அனுப்ப, இரு கவிதைகளின் சாயலும் ஒரே
மாதிரியாக அமைகிறது. பய புள்ளைங்க லவ்வுக்கு இந்த ஒரு காரணம் போதாதா?
மெயிலேயே காதல் ரயில் விட்டுக் கொள்கிறார்கள் இருவரும்.
மருத்துவரான அனிருத்
நாட்டின் ஜனாதிபதிக்கே வைத்தியம் பார்க்கிற அளவுக்கு உயர்கிறார்.
லண்டனிலிருந்து இந்தியாவுக்கு படிக்க வரும் ஜோஷ்னா, அனிருத்தின் மெயில்
அட்ரஸ் மற்றும் இன்னபிற ஆவணங்களை லண்டனிலேயே தவறவிட்டு விடுவதால், இங்கு
வந்து தவியாய் தவிக்கிறார். இந்த நிலையில் அனிருத்துக்கும் ஜோஷ்னாவுக்கும்
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. பெயரளவில்தான் புருஷன்
பெண்டாட்டி. மற்றபடி காதல் தோல்வியால் சரக்கடிக்க துவங்கிவிடும் அனிருத்,
வாந்தியும் பிராந்தியுமாக வாழ ஆரம்பித்துவிடுகிறார்.
க்ளைமாக்ஸ் நடைபெறும் இடம் மருத்துவமனை. புரிந்திருக்குமே?
அனிருத்துக்கு இது முதல்
படம் என்றால் நம்பவே முடியாது. நடிப்பை பொறுத்தவரை து£க்கல், ஆள்
வில்லனுக்குரிய விசேஷ தகுதிகளுடன் இருப்பதால் இவரது லவ்வில் ஒரு லைவ்வே
இல்லை.
முதல் படம், கதையை பற்றி
கவலைப்பட முடியாது. அட்லீஸ்ட் சதையை பற்றியாவது கவலைப்பட்டிருக்கலாம்
புதுமுகம் ஜோஷ்னா. கிள்ளியெடுக்க முடியாத ஒல்லி. நல்லவேளை, நடிப்பில்
மட்டும் கில்லி!
தாரை, தப்பட்டை, பேண்டு,
வாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட வேண்டிய வடிவேலு, இப்படத்தின்
மூலம் ரீ என்ட்ரி. எப்பவோ துவங்கிய படம் என்றாலும் வடிவேலு தரிசனம் அமையத்
தந்த ஒரே காணத்திற்காகவே டைரக்டர் வாசு.பாஸ்கருக்கு நன்றி. போலி டாக்டராக
வரும் வடிவேலு ஒரு நோயாளி வயிற்றுக்குள் ஹெல்மெட்டை வைத்து
தைத்துவிடுகிறார். இன்னொரு நோயாளியிடம் தருவதற்கு மீதி சில்லரை இல்லை
என்பதற்காகவே நன்றாக இருக்கும் வேறொரு பல்லை பிடுங்கிவிட்டு 'சில்லரை
சரியாப் போச்சு' என்கிறார். குதிரை இளைத்தாலும் ஓட்டத்துக்கு குறையேது?
மிக சோகமான காட்சிகளில்
ஒய்.ஜி.மகேந்திரனின் பர்பாமென்ஸ் வொய் ஜி வொய்? என்று நம்மை கதற வைக்கிறது.
முடியல பாஸ், சினிமாவையே விட்ருங்க. பொழச்சி போகட்டும்...
ஒரு குத்தாட்டம் இருக்கிறது.
தாடி தேவராஜும் லேடி சஞ்சனாவும் ஆடுகிறார்கள். செம என்ஜாய்மென்ட்.
பாடல்களில் தனி கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
ர.கண்ணனின் ஒளிப்பதிவில் லண்டன் அழகோ அழகு. நேரில் பார்த்த மாதிரி
சந்தோஷம்.
மெயிலில் முதல் எழுத்தை டைப்
செய்தாலே நமக்கு பழக்கமான மெயில்கள் வரிசை கட்டி நிற்குமே, ஜோஷ்னா
குழம்புவது ஏன்? குறிப்பிட்ட லண்டன் வானொலியின் போன் நம்பரை நெட்டில்
தேடினால் சட்டென்று கிடைக்குமே, பிறகென்ன சிக்கல்?
இப்படி நொண்டியடிக்கிற கேள்விகள் நமக்குள்ளிருந்து முண்டியடித்துக் கொண்டு வருவதால், இந்த அமர லவ்வு ஒரே ஜவ்வு...
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி தமிழ்சினிமா
No comments:
Post a Comment