.
மேற்படி நிகழ்வு தமிழ் பொறியியலாளர் அமைப்பினால்8
ஜூலை 2012 அன்று சில்வவாட்டர்(Silverwater) இல் அமைத்துள்ள Bhai centre இல் மண்டபம்
நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக
வந்திருந்த பொறியியலாளர் மாணிக்கவாசகரையும் அவரது துணைவியாரையும் ஸ்ரீதரன் மங்கள
விளக்கேற்ற அழைக்கவும், இந்த அமைப்பை உருவாக்குவதற்கு முன்னோடியாக இருந்த அதன் தலைவர் தெய்வேந்திரனையும் அவரது துணைவியாரையும்
கார்த்திகா நாகேஸ்வரன் அழைக்கவும், இந்நிகழ்வு 5:33 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன்
இனிதே ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வின், முதல் நிகழ்ச்சியாக
சப்தஸ்வராவின் இன்னிசை, சகலகலாவல்லவனை எங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தக்கூடிய உச்சஸ்தாயி இசையுடன் ஆரம்பமாகியது.
இராக, தாளங்களின் துல்லிய ஏற்ற இறக்கங்களுடன்
பல பழைய புதிய பிரபல இசைக்கலைஞர்களை எங்கள் மனக்கண் முன் அழைத்து வந்து இசை மழை
வழங்கிய சப்தஸ்வர குழுவின் இசைக்கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
சப்தஸ்வராவின் நெறியாளர் பாலா அவர்களுக்கும்,
அவருக்கு அனுசரணையாக இருந்த ஜெயராமும், ரவி அவர்களும் இதில் பங்குபற்றிய பாடகர்களும் இசைக்கலைஞர்களும்
பாரட்டப்பட வேண்டியவர்களே! மண்டபம் நிறைந்த கரகோசத்துடனும் TMS இணையும் P.சுசீலாவையும்
பார்வையாளர்களுக்கு ஞாபகமூட்டியும் இந்நிகழ்ச்சி நிறைவேறியது.
சப்தஸ்வராவினை தொடர்ந்து சிட்னியில்
பிரபலம் வாய்ந்த ஜனனி பீடில் அவர்களின் நெறியாள்கையில் இந்தியன் நாட்டிய பாடசாலை மாணவர்களின்
Bollywood நடனம் மக்களின் மனதை கவர்ந்தது. இதில் பங்கு பற்றிய மாணவர்கள்
மிகவும் ஆர்வத்துடன் இந்நாட்டிய நிகழ்வு விறுவிறுப்புடன் அமைந்தது பாரட்டத்தக்கது.
இந்நிகழ்வுக்கு முன்னோடியாக இருந்த பொறியியலாளர்
சிவசுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார்.
வரவேற்புரையில் பொறியியலாளர் சங்கத்தினர்
ஆற்றிய சேவை பற்றியும் இந்நிகழ்வின் நோக்கத்தையும் வெளிபடுத்தினார்.
இவ்வமைப்பு வடக்கு கிழக்கில் வாழும்
சிறுவர்களின் நலன்களைப் பேணுவதற்கும் அங்குள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும்
உதவி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களது மேலதிக சேவைகள் பற்றி எந்திரமாலை
2012 மலரில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது வரவேற்கதக்கது.
நீர்பாசனதுறையில் நவீன தொழில்நுட்பங்களை
அறிமுகபடுத்திய பிரதம விருந்தினர் பொறியியலாளர் மாணிக்கவாசகர் அவர்கள் தமிழ்
பொறியியலாளர் அமைப்பின் மீது அவருக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தி அந்த அமைப்பு வடக்கு
கிழக்கில் வாழும் மக்களுக்கு உதவி புரிவதை பாராட்டினார்.
இடைவெளியினை தொடர்ந்து பத்மபூசனம் அனுஷா
தர்மராஜாவின் மாணவர்கள் கோகுலம் எனும் பரதநாட்டிய விருந்தினை வழங்கி பார்வையாளர்களின்
மனதை மகிழவைத்தர்கள். இந்த மாணவர்கள் நீலவண்ண கண்ணனின் கோகுலத்தைப் பாடியும், மாயங்களை
புகழ்ந்தும் அற்புதங்களை காண்ப்பித்தும், அழகான கண்ணன் ஆயர்பாடி மாளிகையில் கோபியரின்
தாலாட்டில் உறங்கியதையும், குழலூதி உள்ளங்களை கொள்ளை கொண்டதையும், அஞ்சா நெஞ்சுடன் காலிங்கனுடன் போராடியதையும், கோபியர்கள் யசோதாவிடன்
மாயலீலைகளை கூறுவதையும், அன்னை யசோதாவின் அருந்தவத்தை புகழ்வதையும் திமாலின் தசாவதாரத்தையும்
கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
இந் நிகழ்வினை ஸ்ரீதரன், திவ்யா தெய்வேந்திரன்,
மது ஆகியோர் திறம்பட தொகுத்து வழங்கியிருந்தார்கள்.
அனுஷா தர்மராஜாவின் நெறியாள்கையில் திருமதி
சிவரதி கேதீஸ்வரனினதும் திரு பாரத் மோகனின் இனிமையான குரலினுடன் இந்நிகழ்வு இனிதாக
அமைந்தது. இதற்கு கலாநிதி ரகுராம் சிவசுப்ரமணியம் மிருதங்க இசை வழங்கி இருந்தார்.
வெங்கடேஷ் ஸ்ரீதரன் புல்லாங்குழல் இசையும்
வரலட்சுமி ஸ்ரீதரன் வீணை இசையும் ஜனனி மயூரன் keboard இசையும் வழங்கி சிறப்பித்தமை
குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களும் இசைக்கலைஞர்களும் மிகவும் பாராட்டபட
வேண்டியவர்கள்.
கணக்காளர்களில் ஒருவரான பொறியியலாளர்
உசிலானந்தன் இந்நிகழ்வின் ஆரம்பத்திற்கும் வெற்றிற்கும் காரணமாக இருந்த அனைவருக்கும்
நன்றி தெரிவித்தார்.
இவ்வமைபினால் வெளியிடபட்ட மலரில் தமிழ் பொறியியலாளர்
அமைப்பின் நோக்கங்களும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகளும் வரவு செலவும் தெளிவாக காட்டபட்டது.
ஒரு முன்னோடிதனமாகும் என பலரும் பாராட்டினார்கள்.
நன்றி உரையை தொடர்ந்து பொறியியலாளர்
ஸ்ரீதரன் அவர்கள் American Auction திறம்பட நடத்தினார். பலரும் இதனால் திரட்டப்படும்
பணம் வடக்கு கிழக்கில் வாழும் பாதிக்கபட்ட மக்களுக்கு பல வழிகளிலும் உதவும் என்கிற
காரணத்தினால் பெருந்தன்மையுடன் இதில் பங்கேற்றது அதனை எதிர்பார்த்ததற்கு அதிகமான தொகைக்கு
விற்பதற்கு உதவினார்கள். American Auction ஐ தொடர்ந்து இந்நிகழ்வு 10 மணியளவில்
இனிதே நிறைவேறியது.
1 comment:
நிகழ்ச்சி நன்றாக இருந்தது
Post a Comment