உலகச் செய்திகள்

.
இத்தாலி பூமியதிர்ச்சி: ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்

பாரிய சவாலை எதிர்நோக்கும் நேபாள அரசியல் மாற்றம்

இத்தாலியில் பூமியதிர்வு; மூவர் பலி

ஜப்பானில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறக்கப்பட்டது

ஜப்பானின் வடகிழக்கில் கடுமையான நிலநடுக்கம்

இத்தாலி பூமியதிர்ச்சி: ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்

வடக்கு இத்தாலியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்து தற்காலி முகாம்களில் தங்கி வருகின்றனர். எனினும் நேற்றைய தினத்திலும் பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இத்தாலி நேரப்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சியில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதோடு 50 பேரளவில் காயமடைந்தனர். 5.1 ரிச்டர் அளவில் பதிவான இந்த பூமியதிர்ச்சியில் வட மத்திய பொலொக்னா பகுதி அதிகமாக பாதிக்கப் பட்டது. இந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து வீடிழந்த 3000 க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர்.


குறிப்பாக கால்பந்து மைதானங்களில் முகா மைத்த இவர்கள் தங்கவைக்கப்பட் டுள்ளனர். இதில் பலர் வீடிழந்ததால் முகாம்களில் தங்கியிருப்பதோடு ஒரு சிலர் வீட்டில் இருக்க பயத் தில் முகாம்களில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பூமியதிர்ச்சியில் இத்தாலி யின் பழைமையான கட்டிடங்கள் பல சேதத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

நன்றி தினகரன்

பாரிய சவாலை எதிர்நோக்கும் நேபாள அரசியல் மாற்றம்  
Tuesday, 22 May 2012  
நேபாளத்தில் தசாப்தகாலமாக நீடித்திருந்த உள் நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 5 வருடங்கள் கடந்த நிலையிலும் அந்த நாட்டின் அரசியல் ரீதியான  உருமாற்றத்திற்கு சிறப்பான வகையில் ஆரம்ப சுழி போடப்பட்டிருப்பதாக தென்படவில்லை. அந் நாட்டின்  பழங்குடி தேசிய இனங்களை உள்ளடக்கிய அமைப்பானது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் மூன்று நாள்  ஹர்த்தாலுக்கு விடுத்த அழைப்பினால் நேபாளத்தின் இயல்பு வாழ்வு முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் (மே 15 இல்) ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) , நேபாள காங்கிரஸ் , நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ( ஐக்கிய மார்க்சிஸ்ட்,லெனினிஸ்ட்) ஆகிய  மூன்று பிரதான கட்சிகளும் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்தே ஹர்த்தால் நடத்தப்படுகிறது. நேபாளத்திலுள்ள ஓரம் கட்டப்பட்ட சமூகங்களை உள்ளடக்கிய அமைப்பானது தத்தமது அடையாளத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி முறைமையை வலியுறுத்துகின்றது. அங்கு இடம்பெற்று வரும் ஹர்த்தாலானது அண்மைக் காலங்களில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டங்களிலும் பார்க்க உக்கிரமானதாக காணப்படுகின்றது. எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் நேபாள அரசியலமைப்பு நிர்ணய சபையின் ஆயுள் காலம் முடிவடைகிறது. இருவருட ஆயுள் காலத்தைக் கொண்டதாக இச் சபை அமைக்கப்பட்டிருந்த போதும் இதுவரை 4 தடவைகள் அதன் ஆயுள் காலம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 27 வரை நீடிக்கப்பட்டிருக்கும் ஆயுள் காலமே இறுதியானது என்றும்  இக் காலப் பகுதிக்குள் புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்படாவிடின் மற்றொரு  தேர்தலோ அல்லது சர்வ ஜன வாக்கெடுப்போ நடத்தப்பட வேண்டும் என்று அந் நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இலங்கையிலுள்ள பேரினவாத கடும் போக்கு கட்சிகளைப் போன்றே நேபாளத்திலும் மேலாதிக்கம் செலுத்தும் பகுன் , சேத்ரிஸ் போன்ற சமூகங்கள் சமஷ்டி முறைமையை எதிர்க்கின்றன. இனத்துவ அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டிக் கட்டமைப்புக்கு இந்தச் சமூகங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வரும் அதேசமயம் அந் நாட்டின் பூர்வீக இனக் குழுமங்களான ஜன்ஜாட், மாதேசி போன்ற சிறுபான்மைச் சமூகங்கள் சமஷ்டி முறைமை மூலமே தமது இன, கலாசார ரீதியான அதிகாரத்தை பெற்றுக் கொள்ள முடியுமென உறுதியாக நம்புகின்றன. மே 15 இல் பிரதான மூன்று கட்சிகளும் மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்கால சமஷ்டி கட்டமைப்புஅரசியலமைப்பு ஏற்பாட்டில் 11 மாகாணங்கள் அமைக்கப்படும். அவற்றின்  பெயர்களும் எல்லைகளும் பின்னர் தீர்மானிக்கப்படும். ஆனால் மாதேசிகளும் ஏனைய பூர்வீக இனக் குழுக்களும் 14 மாகாணங்கள் அல்லது 10 மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு குழுவிலுள்ள இந்த விடயங்களை கையாளும் குழுவானது தனது அறிக்கையில் 14 மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று  பரிந்துரை செய்துள்ளது. அதேவேளை அரச மீள் கட்டமைப்பு ஆணைக் குழுவானது 10 மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தது. இவற்றில் ஒன்றையே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று  வலியுறுத்தும் மாதேசிகளும் ஏனைய பழங்குடிச் சமூகங்களும் மூன்று பிரதான கட்சிகளின் உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்தே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தன. 11 மாகாணங்களாக பிரிக்கப்படும் போது இந்த மாகாணங்களில் தாங்கள் சிறுபான்மையினராகிவிடுவார்கள் என்று பூர்வீக இனக் குழுக்கள் அஞ்சுகின்றன. அதே சமயம் திராய் சமவெளிப் பிராந்தியத்தை 5 மாகாணங்களாகப் பிரிக்கும் பெரிய கட்சிகளின் யோசனையை மாதேசிகள் எதிர்க்கின்றனர். 320 க்கும் மேற்பட்ட இன மற்றும் மாதேசி சமூக எம்.பி.க்கள் பிரதான  கட்சிகளின் உடன்படிக்கையை எதிர்த்திருப்பதுடன் தற்போது அமைச்சர்களாக இருக்கும் மாதேசி சமூக அமைச்சர்களும் தற்போதைய உடன்படிக்கையை மீளாய்வு செய்யாவிடின் தமது பதவிகளை இராஜிநாமா செய்யப் போவதாக எச்சரித்திருக்கின்றனர்.
அதேசமயம் இந்த உடன்படிக்கையானது அதன் நியாயபூர்வத் தன்மையை இழந்து விட்டதாகவும் அதனை மீளாய்வு செய்வது அவசியமென மாவோத் தலைவர் புஷ்ப கமல் தகால் பிரசண்டா கடந்த சனிக்கிழமை கூறியிருந்தபோதும் அதனை நேபாள காங்கிரஸும் நேபாள மார்க்ஸிஸ்ட்  லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்திருக்கின்றன. இந் நிலையில் அரசியலமைப்பு நிர்ணய சபையின் ஆயுள் காலத்துக்கு இன்னமும் 5 நாட்களே முழுமையாக உள்ள நிலையில் இந்தச் சர்ச்சைகளுக்கு சுமுகமான இணக்கப்பாடு ஏற்படுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
எதுவானாலும் 2006  மக்கள் இயக்கத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு நேபாளத்தின் அரசியல் தலைவர்களின் கரங்களில் தங்கியுள்ளது. எண்ணிக்கையில் பெரும்பான்மையான சமூகங்களின் அபிலாஷைகளை மட்டுமே உள்ளீர்த்துக் கொண்ட தீர்மானங்களை மேற்கொள்ளாமல் சிறுபான்மை இனக் குழுக்களின் மொழி ,கலாசார,  உரிமைகளை பாதுகாக்கும் விடயங்களை அந் நாட்டின் பெரிய கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். குறுகிய அரசியல்  இலாபம்  கருதி செயற்படாமல் நீண்ட காலத்துக்கு நிலை பெறக்கூடிய தீர்மானங்களை எட்டுவதே சாலச் சிறந்தது.
நன்றி தினக்குரல்

பாகிஸ்தான் கடற்படைக்கு புதிய அணு ஆயுத தலைமையகம்


Monday, 21 May 2012

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கடற்படையினரின் அணு ஆயுதங்களைக் கையாளவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் புதிய அணு ஆயுத கட்டுப்பாட்டு மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடற்படைக்கான அணு ஆயுதங்களைக் கையாளவும் கட்டளைக்கு ஏற்ப பயன்படுத்த வசதியாகக் கொண்டு செல்லவும் புதிய தலைமையகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் கடற்படையின் தலைமைத் தளபதி முகம்மது ஆசிப் சாண்டிலா ஆரம்பித்து வைத்தார்.

இராணுவ உத்திகளுக்கான திட்டமிடல் பிரிவுத் தலைவர் லெப் ஜெனரல் காலித் கித்வாய், மூத்த கடற்படை இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தத் தலைமையகத்தின் தலைமை அதிகாரியாக கடற்படை துணைத் தளபதி தன்வீர் பைஸ் பதவி வகிப்பார்.

அணு ஆயுதங்களை இராணுவத்தின் தரைப்படையும் விமானப் படையும் பயன்படுத்த ஏற்கெனவே ஒரு தலைமையகம் இருக்கிறது. கடற்படைக்காக இது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிடம் எத்தனை அணு ஆயுதங்கள் இருக்கின்றன. விமானத்தில் கொண்டு செல்லக் கூடியவை எத்தனை, கப்பல்களில் கொண்டு செல்லக் கூடியவை எத்தனை, ஏவுகணைகள் தேவைப்படும், அணு குண்டுகள் எத்தனை என்ற தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

ஆசியத் துணைக் கண்டத்தில் இராணுவ சம பல நிலையைப் பராமரிக்கவும் நம்மை யாரும் திடீரென தாக்க நினைக்காமல் இருக்க அவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்தத் தலைமையகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று நிகழ்ச்சியில் பேசிய அனைத்து மூத்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளும் தெரிவித்தனர்.

1998 இல் அணு ஆயுத சோதனை நடத்திய இந்தியா, எந்த நாட்டின் மீதும் நாங்களாக முதலில் இதைப் பயன்படுத்தமாட்டோம் என்று அறிவித்தது. பாகிஸ்தான் அப்படி எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினக்குரல்

இத்தாலியில் பூமியதிர்வு; மூவர் பலி


Sunday, 20 May 2012

earthquake_இத்தாலியின் வடபகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு பொலோக்னவில் 6.0 ரிச்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பூமியதிர்ச்சி காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்களை மதிப்பீடு செய்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நன்றி தினக்குரல்


ஜப்பானில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறக்கப்பட்டது


Thursday, 24 May 2012

skytree_001ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.

Sky Tree என பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரம் 634 மீற்றர் உயரமானதாகும்.

இக்கோபுரத்தின் 350 மீற்றர் உயரத்திலும், 450 மீற்றர் உயரத்திலும் அவதானிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட Sky Tree இருமடங்கு உயரமானதாகும், எனினும் துபாயில் உள்ள 828 மீற்றர் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
skytree_006

















skytree_007


















skytree_008


நன்றி தினக்குரல்



ஜப்பானின் வடகிழக்கில் கடுமையான நிலநடுக்கம்


Thursday, 24 May 2012

Earthquakeஜப்பானின் வடகிழக்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் ஹக்சினோஹி பகுதியில் ஏற்பட்டது.
நன்றி தினக்குரல்







No comments: