.
நவரத்தினம் அல்லமதேவன்
அவுஸ்த்திரேலிய கண்டத்தில் மெல்பேர்ண் மாநகரில் உதித்த சமூகவானொலி தான் வானமுதம் எனும் தமிழ் ஒலிபரப்புச் சேவை. வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை சீராகவும், நேர்த்தியாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் அன்றாடம் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் சகல தேவைகளையும் சளைப்பின்றி, முழுமனதோடு நிறைவேற்றி வருகின்றது. வானமுதம் எனும் தமிழ் வானொலியின் முன்னேற்றம் வானுயர்ந்து வளர்வதைப் பார்க்க முடிகின்றது.
மெல்போர்ணில் விற்றில்சீ தமிழ்ச் சங்கம்(Whittlesea Tamil Association) 2006 ஆம் ஆண்டு அதன் செயற்பாடாக உதயமானது தான் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை.Plenty valley FM 88.6 எனும் பண்பலைவரிசையில் சமூக வானொலியின் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்ற போது பல்லின சமூகங்களுக்கும் பயன் பெறக் கூடிய வகையில் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
இலங்கை, இந்தியா, சீனா, இத்தாலி, கிரேக்கம், ஈரான், ஈராக், மஸிடோனியா, சோமாலியா, பிஐpத் தீவுகள், என்ற பன்னாட்டுமொழி பேசும் மக்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையிலே பிரதி செவ்வாய்க்கிழமைகள் தோறும் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணி; வரைPVFM 88.6பண்பலை வரிசையூடாக வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை ஒலிபரப்பாகின்றது.
வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டதன் பிரகாரம் தற்போது ஆறு ஆண்டுகளைப் பூர்த்தி செய்து நானிலமும், நான்கு திசைகளிலும், ஒலிக்கும் வானமுதம் தமிழ் ஒலிபரப்பு 6ஆவது ஆண்டில் காலடி பதித்துள்ளது.
வானமுதத்தின் ஒலிபரப்புச் சேவை தற்போது இரண்டு மணித்தியாலங்கள் தரணியில் ஒலிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலியூடாகவும் ஒலிபரப்புச் செய்யப்படுவதால் சகல தமிழ் இல்லங்களிலும் ஒலிக்கின்றது என்பது மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். இந்த நேரத்தில் இன்பத்தமிழ் வானொலி நிலையத்தாருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் ஒலிபரப்பு வசதியை ஏற்படுத்தித் தந்தPVFM 88.6 நிறுவனத்தாருக்கும் மனமார்ந்த நன்றியைக் கூறுகின்றோம். வானமுதம் வானொலிச் சேவைக்குப் பின்னால் கடுமையாக உழைத்த இன்றும் உழைத்துக் கொண்டிருக்கும் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கின்றேன்
வானமுதம் ஒலிபரப்புச் சேவை பயன்தரும் பல நிகழ்ச்சிகளை அற்புதமாகப் படைக்கின்றது. தமிழ் இன்பம், சிறுவர் சங்கமம், பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சி, பௌர்ணமி நேரம், திரையிசைப்பாடல்களையும் சுமந்து வரும் ராகபந்தம், நூலில் நுகர்ந்தவை, பாடலில் பிறந்த கதை, கலைஞர்கள், எழுத்தாளர்கள், முதியோர்கள், மற்றும் ஆர்வலர்கள் உடனான சந்திப்புகள், கவிதையும் கானமும், உள்ளுரில் நடைபெறும் நடப்புக்களை உடனடியாக எடுத்துவரும் உள்ளுர்தகவல்கள், உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகள, நகைச்சுவை நிகழ்ச்சிகள் என்று பல நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டலாம். அதுமட்டுமல்லாமல் தினமும் நடைபெறும் நம்மவர் நிகழ்வுகளான பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துக்கள், மரணச்செய்திகள் என்று பல வகையானவை எடுத்து வரப்படுகின்றன.
எமது தாயக உறவுகளின் செய்திகளையும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் சரி தனது செவையை அகமகிழ்வுடன் ஆற்றுவதிலும் சரி என்றுமே தவறாமல் தனது கடமையைச் செய்கின்றது.
விற்றில்சீ தமிழ்ச் சங்கம் ஆற்றும் பணிகளை என்று பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். தற்போது நடப்பு வருடத் தலைவராகவும், உள்ளுர்த் தகவல் தயாரிப்பாளராகவும் இருக்கும் திரு.வில்லியம் இராஜேந்திரம், அரிய சேவைகளைச் செய்யும் சமூக சேவையாளர். அறிவிப்பாளர் திரு.எட்வேட் மரியதாசன் உடன் கைகோர்த்து நிற்கும் அறிவிப்பாளர்கள் நவரத்தினம் அல்லமதேவன், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, நிருத்தசொரூபி தர்மகுலேந்திரன், ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரஞ்சன், திருமதி.நீனா அந்தனி ஆகியோரின் அளப்பரிய சேவைகளை யாவரும் பாராட்டுகிறோம். இவர்கள் அனைவரும் புலம் பெயர்நாட்டு இயந்திர வாழ்க்கை, குடும்ப சுமை, வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆற்றும் சேவை உழைப்பில் தொடர்வது தான் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையாகும். இவர்களுக்கு பக்க பலமாக, தூணாக நின்று துணைபுரியும் விற்றில்சீ தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு.சாம்பசிவம் தியாகராஜா, சங்க உறுப்பினாகள்; அறிவிப்பாளர் திரு.எட்வேட் அருள்நேசதாசன் மற்றும் திரு.ஜோசெவ் நிரோஷ் ஆகியோர். இவர்களது பணிகள் தொடர வாழ்த்துகின்றேன்.
ஆண்டுகள் ஆறினைக் கடந்தாலும் தன்னிகரற்ற சேவைமூலம் தரணியெங்கும் அனைத்து நேயர்களின் பங்களிப்புடன் எங்கும் தமிழ் மணம் பரப்பும் வானமுதம் ஒலிபரப்புச்சேவை வளரவேண்டும். வானமுதம் ஒலிபரப்பு, இன்பத்தமிழ் வானொலி நேயர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். தமிழ் நேயர்களின் இல்லங்களில் தமிழ் ஒலிக்கும் இவ்வேளை அவர்களின் பங்களிப்பும் தொடரவேண்டும்.
உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் இணையத்தளத்தில் www.pvfm.org.au இல் livestreaming ஊடாகக் கேட்டு மகிழலாம்.
செவ்வாய் மாலையில் தித்திக்கும் சேவையை தரணியெங்கும் முத்தாகத் தவழவிடும் வானமுதம் நீ வாழ்க. வளர்க நின் சேவை.
வானமுதம் தொடர்புகட்கு அஞ்சல் முகவரி
Vaanamutham
, P.O.Box 93, Thomustown. Victoria -
3074.
மின்னஞ்சல் vaanamutham@hotmail.com
No comments:
Post a Comment