மெல்பேர்னில் அரங்கேறிய இளம் துளிர் - 2012.



Perpetual Money Transferஆதரவில் மெல்பேர்ன் George Wood Performing Arts Centerல் கடந்த சனிக்கிழமை 14.04.2012 மாலை மண்டபம் நிறைந்த ரசிகப் பெருமக்களின் முன்னிலையில் அரங்கேறிய மாபெரும் இசை விருந்து இளம் துளிர் - 2012.
அவுஸ்திரேலியாவில் பிரபல்யமான இளம் இசையமைப்பாளர் பல்கலை வித்தகன் நிரோஷன் சத்தியமூர்த்தியின் நெறியாள்கையில் புதிய பூபாளம் இசைக்குழுவினர் வழங்கிய இசைநிகழ்ச்சி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மனதைப் பிடித்து விட்ட அல்லது கொள்ளை கொண்ட நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. தென்னிந்திய திரைப்படப் பாடகர்களான முகேஷ், ஷியாம், அனித்தா ஐயர், பிரியதர்ஷினி ஆகியோர் உட்பட சிட்னி, மெல்பேர்ன் இசைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியாக ஒரு வெற்றிப் படைப்பாக நடந்தேறியது என்றால் அது மிகையாகாது.





அற்புதமான பழைய, புதிய பாடல்கள், பாடல்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட காட்சிகள், முக்கியமாக கண்களைக் கவர்ந்த பரத நாட்டியம்,Bollywood நடனங்கள், விஷேச ஒளியமைப்பு, காதுக்கினிய ஒலியமைப்பு இவற்றுக்கு அப்பால் ரசிகர்களின் கரகோஷங்கள் மண்டபத்தை அதிரவைத்த ஆனந்தமான இரவு நிகழ்சி. பார்த்தவர்களைப் பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சி. நல்ல தொரு தரமான நிகழ்ச்சி தான். முழு நுழைவுச் சீட்டுக்ளும் விற்பனையாகி மண்டபம் நிறைந்து காணப்பட்டதிலிருந்து அதன் தரத்தைப் பார்க்கலாம்.
இந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமயன்று 22.04.2012 சிட்னி நேயர்களுக்காக நடைபெறவுள்ளது. எனவே சிட்னி மக்கள் இந் நிகழ்ச்சியைத் தவற விடாதீர்கள். கண்டு களியுங்கள். இளம் பிள்ளைகளின் கூட்டுமுயற்சியாக நடந்தேறியுள்ளது. நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட நிதி அவுஸ்திரேலிய தமிழ் மருத்துவ நிதியத்தின் ஊடாக எமது தாயக மக்களின் புனர்வாழ்க்கு அனுப்ப்பட இருப்பது வரவேற்கப்பட வேண்டிய தொன்றாகும். இளம் பிள்ளைகளுக்கு ஒரு சபாஷ். இவ்வகையான முயற்சிகள் கடவுளின் கிருபையுடன் தொடரவேண்டு;ம்.

மெல்பேர்ன் ரசிகன்.

No comments: