ஐ.நா அமைதி காக்கும் படை உயர் பதவிக்கு சவேந்திர சில்வா நியமனம்


.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதிசவேந்திர சில்வாவை நாம் தெரிவு செய்யவில்லை ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியின் ஆலோசனைக் குழுவில்சவேந்திர இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ஐக்கியநாடுகள் அமைப்பு இவ்வாறு பதிலளித்துள்ளது.
சவேந்திர சில்வாவை, ஆசிய பிராந்திய வலய நாடுகளே ஆலோசனைக்குழுவிற்கு தெரிவு செய்தன என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர்மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இந்த நியமனத்திற்கும் தொடர்பு கிடையாதுஎன அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா அமைதி காக்கும் படை உயர் பதவிக்கு சவேந்திர சில்வா நியமனம்
27-01-2012 - 09:40
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதிசவேந்திர சில்வா, அமைதி காக்கும் படை உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் விசேட ஆலோனைக் குழுபிரதிநிதிகளில் ஒருவராக சவேந்திர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முதல் தடவையாக இலங்கையர் ஒருவர் இந்தப் பதவிக்காகநியமிக்கப்பட்டுள்ளார்.
சவேந்திர சில்வா ஆசிய பசுபிக் பிராந்திய வலய நாடுகளின்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கனேடிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் லுயிஸ் பெர்ச்டெய், முன்னாள்அமெரிக்க துணை பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் டொப்பின்ஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் ஆலோசனைக் குழுவின் முதல்கூட்டத் தொடர் இந்த மாதம் நடைபெறவுள்ளது.
Nantri :globaltamilnews

No comments: