துர்க்கை அம்மன் ஆலயத்தில் பண்ணிசை விழா 2011



 நேற்று 19.11.2011 துர்க்கையம்மன் ஆலயத்தில் பண்ணிசை விழா 2011 சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியிலிருந்து 12.30 மணிவரை காலைநேர பண்ணிசையும் மாலை 1.30 மணியிலிருந்து 4.00 மணிவரை மாலை நேர பண்ணிசையும் இடம்பெற்றது.  திரு செ.பாஸ்கரனின் அறிமுகத்தோடு அம்மன் கோவில் பிரதமகுரு சிவாச்சாரியார் செந்திலின் கற்பூர தீபத்தோடும் அர்ச்சகர் சின்ன செந்திலின் திருமுறையுடனும் நிகழ்வு ஆரம்பமானது.





தொடர்ந்து துர்கா தேவி தேவஸ்தான தலைவர் திரு.மகேந்திரனின் வரவேற்பும் அதனை அடுத்து திரு.செல்லையா சத்தியமூர்த்தியின் சிறப்புரையும் பண்ணிசைவிழாகுழுவின் தொடர்பாளர் திரு.மா.அர்சுனமணியின் உரையும் இடம்பெற்று பண்ணிசைவேந்தர் இரா இராசரெத்தினம் அவர்களின் வினாயகர் துதி, குரு வணக்கத்தோடு நிகழ்வு தொடர்ந்தது .காலைநேர பண்ணிசை திருமதி கேதீஸ்வரி பகீரதனின் மாணவர்களும், டாக்டர் திருமதி. சிவரதி கேதீஸ்வரனின் மாணவர்களும் கோம்புஹ் சைவ பாடசாலை மாணவர்களும், சைவ மன்ற பண்ணிசைக் குழுவினரும் பண்ணிசை வழங்கினார்கள். டாக்டர் சிவரதி கேதீஸ்வரனுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்திருந்தார் செல்வன் பிரணவன் ஜெயராஜா.12.30 மணிக்கு காலை நேர நிகழ்வு நிறைவுற்றது.



கலந்து கொண்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கௌரவிக்ப்பட்டார்கள். துர்க்கை அம்மன் ஆலயத்தில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை நேர நிகழ்ச்சியில் திருமதி.அமிர்தகலா ஞானரட்ணத்தின் மாணவர்களும், திருமதி கலா சந்திரமோகனின் மாணவர்களும், திருமதி மீனாட்சி வெங்கடேசனின் மாணவர்களும் ,திருமதி கனகாம்பிகை ஜெகநாதன் தலைமையில் துர்க்கை அம்மன் பஜனைக் குழுவினரும் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள்.  திருமதி கலா சந்திரமோனின் நிகழ்ச்சியின்போது திரு பவன் சிவகரன் மிக அருமையாக மிருதங்கம் வாசித்தார். நிகழ்ச்சி சரியான நேரத்திற்கு 4 மணிக்கு, மாலைநேரம் பங்குபற்றிய ஆசிரியர்களையும் மாணவர்களையும் கௌரவித்து நிறைவுற்றது. 

இன்நிகழ்வில் பல இளம் சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால் பாடிய குழந்தைகளின் பெற்றோரகள்; எல்லோரும் வருகை தந்திருந்தால் சபை நிறைந்திருக்கும். பலர் குழந்தைகளை இறக்கி விட்டுவிட்டு சென்று விடுவது வேதனையானது என்று சிலர் கருத்து தெரிவித்ததை கேட்க முடிந்தது. 
















































4 comments:

kirrukan said...

மேடையில சிறுவர்களை ஏற்றாமல் விட்டமைக்கு என்ன காரணமோ?நாயன்மாரின் படங்களையாவது மேடையில் வைத்திருக்கலாம் ...அணுராதா ஷிராமின் படம் மேடையை அலங்கரித்தது ..சிறுவர்கள் பண்ணிசையை அனுராதாவுக்கு வழங்கினார்களா அல்லது நாயன்மாருக்கு வழங்கினார்களா என்று எண்ணத்தூண்டியது.

சிறுவர்கள் தேவாரம் பாடும்பொழுது மைக் டெஸ்டிங் வண்..டு...திரி(1.2.3)என்று சவுண்ட் இஞினியர் சவுண்ட் கொடுத்தார்...சிறுவர்கள் தப்பு செய்யலாம் பெரிசுகள் நாம் தப்பு செய்யலாமோ?இதுகள் விழா ஏற்பாட்டாளருக்கு சில வேளை சின்ன விடயங்களாக தெரியலாம் ஆனால் பார்வையாளருக்கு அது ஒரு பெரியவிடயம்.மற்றது நிகழ்ச்சி நடை பெறும் பொழுதுதான் மைக்குடன் சம்பந்தப்பட்ட கருவிகளை செட் பண்னுவதன் காரணம் என்ன? முதலே இதை ஒழுங்கு செய்து வைக்கலாம்தானே அதை ஒப்பரேட் பண்னுவதற்கு ஒருவர் இருந்தால் பொதும்...எம்மவர்நிகழ்ச்சியில்தான் இந்த ஒடுப்பாடுகள் இருக்கும்....

சிறுவர்களை சிறை வைக்க கூடாது..சில சிறுவர்கள் பெற்றோரின் கட்டாய்த்தில் அதில் இருந்தார்கள்.சில சிறுவர்கள் நிட்டன்டொ டி. எஸ் யை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்,
அன்னதானம் வழங்கப்படும் என்று ஒரு போர்ட்டை முன்னுக்கு போட்டிருந்தால் நானும் கொஞ்ச நேரம் இருந்திருப்பேன்....அன்னதானம் நடந்த விடயம் டமிழ்முரசுமூலம்தான் அறிந்தேன்

Anonymous said...

Indra கூறியதில் எனக்கும் உடன்பாடுதான். இது ஆற்றைக் கடந்த சாமிமாரின் கதைபோன்று இருக்கின்றது. பார்த்த விடயங்கள் எத்தனையோ இருக்க பார்க்கதேவையில்லாதவற்றைப் பார்த்துவிட்டு கவலைகொள்கின்றார். பண்ணிசையை ரசிக்காமல் அனுராதாவின் படத்தைத்தான் பார்த்து மனம் வெந்திருக்கிறார்போல் உள்ளது. டாக்டர் சிவரதியும் திருமதி கலா சந்திரமோனும் நன்றாக மாணவர்களை பயிற்றுவித்து கொண்டுவந்து பாடிவித்தார்கள் கேட்பதற்கு அருமையாக இருந்தது. குறிப்பாக முத்தைதரு பத்தித் திருநகை.வாழ்த்துக்கள்

நன்றி

கணேஸ்

kirrukan said...

குறைகள் இருந்தால் அதை சொல்லத்தான் வேண்டும் அப்ப தான் அடுத்த நிகழ்ச்சியில் அது நிவர்த்தி செய்யப்படும்...பாராட்டத்தான் வேண்டும் அதற்காக குறைகளை மூடி மறைக்க ஏலாது...

kirrukan said...

யார் அப்பா அந்த பஞ்ச பாண்டவர்கள் அந்தப்படத்தில் வேஷ்டியுடன் நிற்பவர்கள்.....