உலகச் செய்திகள்

.
* இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 12 வயது சிறுவன் பலி

* சோமாலியாவில் தினமும் 100 குழந்தைகள் பலி

* தங்கம், பணத்துடன் கடாபி புர்க்கினா பாசோவுக்கு தப்பியோட்டம்?

* சர்வதேச பனி ஹொக்கி வீரர்கள் உட்பட 43 பேர் ரஷ்ய விமான விபத்தில் பரிதாபமாக பலி

* சிரிய நகரில் படையினரின் நடவடிக்கைகள் தீவிரம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 12 வயது சிறுவன் பலி _


 6/9/2011 

ந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 52 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.6 ரிக்டர் என பதிவாகியுள்ளது.

பந்தா அசே பகுதிக்கு தென்மேற்கில் 400 கி.மீ., சுற்றளவில் அதன் பாதிப்பு இருந்ததாகவும் ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டு சுமத்ரா தீவில் 9.9 நிலநடுக்கம் ஏற்பட்டு, 2,20,000 மேற்பட்ட மக்கள இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

நன்றி வீரகேசரி இணையம்

சோமாலியாவில் தினமும் 100 குழந்தைகள் பலி


6/9/2011
சோமாலியாவில் பஞ்சம் மற்றும் பட்டினியால் தினமும் 100 குழந்தைகள் பலியாகி வருவதாக ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது.

ஆபிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த இருமாதங்களாக பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

சோமாலியா மட்டுமின்றி எத்தியோப்பியா, கென்யா போன்ற பகுதிகளிலும் பஞ்சம் வேகமாக பரவி வருகின்றது. மேலும் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளினால் உயிரிழந்து வருகின்றன.

சோமாலியா மொத்தம் 4 மில்லியன் மக்கள் தொகையை கொண்டது.

இதில் 53 சதவீதத்தினர் பசி, பட்டினி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

தற்போது சோமாலியாவின் மொத்தம் 6 மண்டலங்களில் பஞ்சம் வேகமாக பரவி வருகிறது.

இப்பகுதிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றபோதிலும் அவை போதுமானதாக இல்லை எனத்தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலை தொடருமானால் சுமார் 750,000 பேர் உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகின்றது
நன்றி வீரகேசரி இணையம்





தங்கம், பணத்துடன் கடாபி புர்க்கினா பாசோவுக்கு தப்பியோட்டம்?


7/9/2011 

கேணல் கடாபி நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் லிபியாவை விட்டு தப்பியோடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் லொறிகள் நிறைய தங்கம் மற்றும் பணத்துடன் மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினோ பாசோவுக்கே அவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புர்க்கினா பாசோ வடக்கே மாலி, கிழக்கே நைஜர், தென்கிழக்கே பெனின், தெற்கே டோகோ மற்றும் கானா, தென்மேற்கே ஐவரி கோஸ்ட் ஆகிய 6 நாடுகளால் சூழப்பட்டது.

தென் ஆபிரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அடுத்து கடாபிக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாக புர்க்கினா பாசோ அறிவித்திருந்தது.

எனினும் கடாபி லிபியாவிலேயே மறைந்துள்ளதாக வேறு சிலதகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடாபியின் பாதுகாப்பு உயரதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று நைஜர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

சர்வதேச பனி ஹொக்கி வீரர்கள் உட்பட 43 பேர் ரஷ்ய விமான விபத்தில் பரிதாபமாக பலி


8/9/2011

ரஷ்யாவின் யரோசிலாவ்ல் நகரத்தின் அருகிலுள்ள விமான நிலையமொன்றிலிருந்து புறப்பட்ட யாக் 42 என்ற விமானமொன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 43 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும் இதில் பயணித்த 2 பேர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானமானது பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்க் நகருக்குப் புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் இதன் சிதைவுகள் வொல்கா ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

100 பேர் பயணிக்கக்கூடிய இவ்விமானத்தில் 45 பேர் பயணித்துள்ளனர்

இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் பனி ஹொக்கி கழக அணியான லொகோமோடிவைச் சேர்ந்த பிரபல வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆவர்.

இதில் 11 பேர் கனடா, சுவீடன், பெலாரஸ், செக் குடியரசு, ஜேர்மனி, லத்வியா, சுலோவாகியா மற்றும் உக்ரேன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதுவரை 35 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 12 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவர்களின் உயிரிழப்பானது பனி ஹொக்கி விளையாட்டிற்கு பாரிய இழப்பென தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிசெய்யப்படாத போதிலும், வானொலிக் கோபுரமொன்றில் மோதியமையினால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி



சிரிய நகரில் படையினரின் நடவடிக்கைகள் தீவிரம்
Thursday, 08 September 2011

டமாஸ்கஸ்: சிரியாவின் ஹோம்ஸ் நகரில் துருப்புகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


புதிதாக இடம்பெற்ற தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை சிரியா மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜுபே அது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் தடைகளை எதிர்கொள்ள நேரிடுமென எச்சரித்துள்ளது.

ஜனாதிபதி பஸார் அல் அசாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்த கடந்த 5 மாதங்களில் 2200 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஹோம்ஸ் நகரில் தாங்கிகள் சகிதம் படையினர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சி.  (நன்றி தினக்குரல்)



No comments: