சிட்னி முருகன் கோவிலில் சூரன் போர் - செ.பாஸ்கரன்

.
சென்ற செவ்வாய்க் கிழமை சிட்னி முருகன் கோவிலில் சூரன்போர் இடம்பெற்றது.

 வாரநாளாக இருந்தாலும் மாலையிலேயே சூரன்போருக்கான ஆயத்தம்தொடங்கிவிட்டது. சூரனுக்கும் முருகனுக்கும் சண்டை. முருகன் யுத்த சன்யுத்தனாய் முதல்நாள் தாயார்கையால் பெற்ற வெற்றி வேலோடு களமிறங்குகின்றான்.ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும் அலங்கார ஆபரணம் அணிந்தமார்பும் என்ற பாடலலுக்கேற்றது போல்வருகின்ற முருகனை மிக பக்தி சிரத்தையோடு சாந்தமாக கொண்டு வருகின்றார்கள்.




                                                                                                                   படப்பிடிப்பு ஞானி



ஏன் முருகன் யுத்தத்திலும் சாந்தமாகதான் நடந்து கொள்வானா என்று பாழாயப்போன மனம் நினைத்துக் கொள்கிறது.சூரன்  பலவகை ஆட்டம் போட்டுக்கொண்டு வருகின்றான் எறிவது ஏந்துவது சரிப்பது நிமித்துவது ஓடுவது ஒழிப்பது இப்படி பல வகை விளையாட்டுக்களையும் செய்கின்றார்கள் சூரன் காவியவர்கள். சூரன் ஒரு அரக்கன்  அவனது உருவம் மிகப்பெரியது. அப்படி இருக்க வேண்டிய சூரன் குறைந்தது இங்குள்ள சமோவா ஜலண்ட் காரர்கள் போலாவது இருக்கவேண்டாமா ஒரு பச்சைப்பாலகனின் உருவத்தில் இருக்கிறானே என்று மீண்டும் கடிவாளம் விட்ட குதிரைபோல் மனம் ஓடுகிறது. பக்கத்தில் தந்தை தூக்கி வைத்திருந்த ஒரு சிறுவன் கூறுகிறான் அப்பா I thought Sooran was going to be a huge, scary man, but he’s really small அவன் கேட்டதைப்போல் சூரன் இருந்திருந்தால் எறிந்து ஏந்துவதற்கு எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்துக்கொண்டேன்.













பலதலைகள் மாற்றிவந்த சூரன் மாமரத்துள் மறைந்துவந்தபோது சூரனுக்கு சிறுவர்களின் ஆதரவு கூடிவிட்டது போல் தெரிந்தது. ஒரு பெரிய பட்டாளமாக சிறுவர்கள் சேர்ந்து கொண்டு சூரனின் பின் செல்கிறார்கள். இதென்ன சூரன் வழிபாடும் வந்து விட்டதோ என்று பார்த்தபோது. மாமரத்தில் இருந்து நாகி மாம்பழமாய்ப் போட்டுக் கொண்டிருக்கிறார்.சிறுவர்கள் அதை மகிழ்வோடும் போட்டிபோட்டுக்கொண்டும் பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள். சூரன் வெற்றி கொள்ளப்பட்டான். அவனது ஆணவம் ஒடுக்கப்பட்டு  முருகனின் காலடியில்  சேர்த்துக்கொள்ப் படுகின்றான். இதன் மூலம் அந்தத் தத்துவம் விளக்கப் பட்டது. விளங்கிக் கொள்ளாமல் ஆணவத்தோடு இன்னும் பலர்?






                                                                                                                            படப்பிடிப்பு ஞானி
               

                                                                                                                     படப்பிடிப்பு ஞானி




                                                                                                                                 படப்பிடிப்பு ஞானி
         




4 comments:

திருநந்தகுமார் said...

பாஸ்கரன்
உங்கள் வருணனை மிக மிக மிக நன்றாக இருந்தது. நான் செல்ல முடியாத சூழலில் மனத்திரையில் காட்சியை ஓடவிட்டீர்கள்!
சிட்னியில் இருக்கும் சூரன் (அல்லது சூரர்கள்) தோற்றத்தில் சிறிது தான். இணுவில் கந்தசுவாமி கோவிலில் நீங்கள் எதிர்பார்த்த அளவில் சூரன் மிகப் பிரமாண்டமானது. அதே அளவு பெரியது முருகன் உலாவரும் ஆட்டுக் கடா வாகனம். அதில் ஏறிவரும் ஆறுமுகப்பெருமானின் உருவமும் மிகப்பெரியது. ஆறுமுகசுவாமி விக்கிரம் செய்யப்பட்டபோது கோவில் வீதியில் மெழுகு அச்சைக் குழியில் வைத்து பஞ்ச உலோகம் உருக்கி ஊற்றிய பின் திறந்து பார்த்தபோது உருவம் சரியாக வரவில்லை என்றும், இப்படி சில தடவை முடிந்தும் எதுவும் சரிவராததால் பின்னர் குருக்கள் வீட்டுத் தாலிக்கொடியும் உலோகத்துடன் உருக்கிவார்க்கப்பட்டதாகவும் எனது ஆச்சி சொல்லியது நினைவில் உண்டு. இப்போது கிராமத்தில் இருக்கின்ற மூத்தோர்களில் சிலர் மட்டுமே இக்கதைகளை அறிந்திருக்கின்றனர்.
நல்ல நினைவுகளைக் கிளறிவிட்டது உங்கள் ஆக்கம்.
ஞானியின் படங்களும் பளிங்கு போல் உள்ளன.
நன்றிகள்

kirrukan said...

[quote]அவனது ஆணவம் ஒடுக்கப்பட்டு முருகனின் காலடியில் சேர்த்துக்கொள்ப் படுகின்றான். இதன் மூலம் அந்தத் தத்துவம் விளக்கப் பட்டது. விளங்கிக் கொள்ளாமல் ஆணவத்தோடு இன்னும் பலர்?
[/quote]
எங்களுக்குள் இருக்கும் பிரமாண்டமான சூரனை எங்களுக்குள்ளேயே இருக்கும் அழகிய சிறிய முருகனால் அடக்க வேணும் என்று சொல்லலாமோ?

அல்லது மற்றவையள் எல்லாம் சூரன்மார் நாங்கள் மட்டும் முருகன் என்ற எண்ணத்தில் மற்றவையளை போட்டுதாக்குதல் தான் சூரன் போர் என்று சொல்லலாமோ?கி..கி...


உந்த சூரன் சண்டையிலும் பார்க்க கோவில்கொமிட்டி சூரன் போர் சுப்பராக இருக்கும்

C.Paskaran said...

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தருநந்த குமார்.நீங்கள் குறிப்பிட்டது போல் பெரும்பாலான கோவில்களில் சூரன் மிகப் பெரிய உருவமாகவே இருக்கும்.

C.Paskaran said...

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி கிறுக்கன் .நீங்கள் பொடிவைத்து கிறுக்கியுள்ளீர்கள் விளங்க கொஞ்சம் கஸ்டமாக உள்ளது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா இது விளங்கும் போது வயதும் போய்விடும்.
சூரன வெண்ட சுப்பிரமணியராலயே எங்களை வெல்ல ஏலாது பாருங்கோ.