.
சமூக முதியோர் கவனிப்பு திட்டங்கள் என்பவை யாவை?
Ms Sree Vithya Harilingam
CPP Coordinator
(Community Partners Program – Hindi &Tamil)
Tamil – (Inner West & Western Sydney)
Hindi – (Western Sydney)
SydWest Multicultural Services Inc – CALDACS Project
Suite 9, 125 Main St Blacktown 2148
Tel: 02-8825 3739
Fax: 02-9621 4702
E-mail: Sree.VithyaHarilingam@sydwestmsi.org.au
சமூக முதியோர் கவனிப்பு திட்டங்கள் என்பவை யாவை?
நலிந்த வயதான அவுஸ்திரேலியர்கள் தமது சொந்த வீட்டிலேயே தொடர்ந்து வாழ உதவுவதற்கென ஒவ்வொரு தனிநபருக்கும் ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படும் திட்டங்களேபவையே ‘சமூக முதியோர் கவனிப்பு திட்டங்கள்’ (Community Aged Care Packages (CACPs)) எனப்படும். திட்டங்களாகும். வயதானோருக்குத் தேவைப்படும் சிக்கலான கவனிப்புத் தேவைகளை வழங்குவதற்கென இத்திட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அரசினால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
கிடைக்கும் உதவிகள் யாவை?
CACP எனப்படும் திட்டங்கள் வளைந்துகொடுக்கும் தன்மையுடையயவை அத்துடன் அவைமற்றும் ஒவ்வொரு தனிநபருக்கும் தேவைப்படும் கவனிப்புத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளனடவையாகும் இவை. இத்திட்டத்தின் ஒரு பாகமாக வழங்கப்படக்கூடிய சேவைகளது வகைகளில் பின்வருவன அடங்கும்:
• தனிநபர் கவனிப்பு;
• சமூக ஆதரவு;
• சந்திப்புவேளைகளை மேற்கொள்வதற்கான போக்குவரத்து வசதி;
• வீட்டு வேலைகளில் உதவி;
• உணவு வகைகளைத் தயார் செய்தல் மற்றும்
• தோட்டவேலை.
கவனிப்பினை வழங்குவது யார்?
நலிந்த வயதானோருக்கான கவனிப்பு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் ஒவ்வொரு திட்டத்திற்குமகான தினசரி நாளாந்த நிதியுதவியைதள்ளுபடிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் CACP அங்கீகாரம் பெற்ற சேவை வழங்குநர்களுக்கு அளிக்கிறது. CACP திட்டத்தில் கிடைக்கும் தனிநபர் ஒருவருக்கான சேவைகளை உங்களது உள்ளுர்ப் பகுதியில் உள்ள பல வகைப்பட்ட அமைப்புகள் வழங்கலாம், ஆனால் அங்கீகரிக்கப்பட்ட கவனிப்பு சேவை வழங்குநர் ஒருவரால் இவை திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்.
CACP திட்ட வசதியை என்னால் எப்படிப் பெற இயலும்?
CACP திட்டம் ஒன்றை நீங்கள் பெற வேண்டுமெனில், குறைந்த பட்சம் ‘கீழ் மட்ட கவனிப்பு’ (low level care) தேவைப்படுபவர் என ‘முதியோர் கவனிப்பு மதிப்பீட்டுக் குழு’ (Aged Care Assessment Team (ACAT)) ஒன்றினால் நீங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் சமூக மையங்களிலிருந்தோ அல்லது 1800 500 853* எனும் இலக்கத்தின் மூலம் ‘முதியோர் கவனிப்பு தகவல் இணைப்பை(Aged Care Information Line) அல்லது 1800 052 222* எனும் எண் மூலம் ‘பொதுநல அரசு இடையோய்வு மற்றும் கவனிப்பு இணைப்பு மையங்’(Commonwealth Respite and Carelink Centres)களை அழைப்பதன் மூலமாகவோ ACAT குறித்த தகவல்களைப் பெறலாம். ACAT மதிப்பீடுகள் இலவசமாகும்.
கீழ் மட்ட கவனிப்பிற்குத் தகுதியானவர் என்று உங்களை ACAT- யினரது மதிப்பீடு அங்கீகாரம் செய்தும், உங்களது வீட்டில் வைத்தே நீங்கள் கவனிக்கப்பட வேண்டும் என நீங்கள் விருப்பம் தெரிவித்தும் இதிருந்தால்;, உங்களது உள்ளுர்ப் பகுதியில் உள்ள சேவை வழங்குநரிடம் ACAT உங்களைப் பரிந்துரைக்கும், அவ்வழங்குநர் EACH வசதி கிடைக்குமாயின் அதனை உங்களுக்கு வழங்கும். CACP வசதி கிடைக்கும்போது உங்களது உள்ளுர்ப் பகுதியில் உள்ள உங்களுக்கு சேவை வழங்கக்கூடிய ஒருவருக்கு ACAT உங்களைப் பரிந்துரைக்கும்.
CACP எவ்வாறு ஏற்பாடு செய்யப்படுகிறது?
சேவை வழங்குநர் ஒருவர் உங்களை ஏற்றுக்கொள்ளும்போது, ACAT-யினரது மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சேவைத் திட்டம் ஒன்று வடிவமைக்கப்படுகிறது. உங்களது கவனிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விருப்பத்தெரிவுகள் (options) குறித்து சேவை வழங்குநர் உங்களுடன் கலந்தாலோசிப்பார் மற்றுமஅத்துடன்
‘சேவை பெறுநர் ஒப்பந்தம்’ (Care Recipient Agreement) ஒன்று ஏற்படுத்தப்படும்.
வழங்கப்படவேண்டிய கவனிப்பின் விதங்கள் மற்றும் அளவுகள் குறித்து சேவை வழங்குநருடன் பேச்சு-வார்த்தை நடத்துவதற்கான உரிமை உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் அல்லது வழங்குநர் உட்பட உங்களது பிரதிநிதிகளுக்கும் உண்டு. உங்களுக்கு வழங்கப்படும் கவனிப்பிற்கான சம்மதத்தை நீங்கள் அளிக்கும்போது, உங்களது ‘கவனிப்பு பெறுநர் ஓப்பந்த’த்தின் பிரதி ஒன்றையும், நீங்கள் பெறவிருக்கும் சேவைகளை எடுத்துக் கூறும் ‘கவனிப்பு திட்ட’(Care Plan) த்தின் பிரதி ஒன்றையும் சேவை வழங்குநர் உங்களுக்கு வழங்குவார்.
நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருக்கும்?
CACP வசதிக்கென கட்டணம் ஒன்றை செலுத்துமாறு நீங்கள் கேட்கப்படலாம். உங்களுக்கும் சேவை வழங்குநருக்கும் இடையேயுள்ள ‘கவனிப்பு பெறுநர் ஒப்பந்த’த்தின் ஒரு பகுதியாக நீங்கள் செலுத்தும் கட்டணம் அமையும்.
தனிநபர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகபட்ச அடிப்படை வீதப்படியான ஓய்வூதியம் பெற்றுவரும் வயதானவர்களிடமிருந்து அவர்கள் பெறும் ஓய்வூதியத்தின் 17.5மூ சதத்திஇற்கும் மேலாக கட்டணபட்சம் வசூலிக்கப்படக்கூடாது. ஓய்வூதியத் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப ஒவ்வொரு மார்ச்சு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகபட்ச கட்டணம் மாறும். ‘உடல்நலம் மற்றும் மூப்படைவு திணைக்கள’த்தின்’ (Department of Health and Ageing)த்தின் http://www.health.gov.au/ எனும் இணையதளத்திலிருந்தோ அல்லது 1800 500 853* எனும் இலக்கத்திலிருந்து ‘முதியோர் கவனிப்பு தகவல் இணைப்’பினை அழைப்பதன் மூலமாகவோ தற்போதைய அதிகபட்ச கட்டணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
அதிகமான வருமானம் உள்ளவர்களிடம்** கூடுதல் கட்டணங்கள் செலுத்துமாறு கேட்கப்படலாம். அதிகபட்ச ஓய்வூதிய வீதத்திற்கும் மேலாக உள்ள எந்த வருமானத்திலும் 50 சதம்% என இது வரையறுக்கப்பட்டுள்ளது. கட்டணங்கள் குறித்த தமது கொள்கைத் திட்டங்கள் (fee policy) என்ன என்பதை சேவை வழங்குநர்கள் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். இருப்பினும், கட்டணம் செலுத்த இயலாத நிலையில் ஒருவர் இருக்கிறார் என்பதை காரணமாகக் கொண்டு அவருக்கு தேவைப்படும் சேவை எதுவும் மறுக்கப்படமாட்டாது.
** ‘வருமானம்’ என்பது வரி மற்றும் மெடிகெயர் கட்டணம் (Medicare levy) ஆகியவை செலுத்தப்பட்ட பிறகு எஞ்சும் வருமானத்தைக் குறிக்கும்.
எப்படிப்பட்ட தரமான சேவைகளை நான் எதிர்பார்க்கலாம்?
அதியுயர்ந்த தரமான சேவைகளையே கவனிப்பில் இருப்போர் பெறுகின்றனர் என்பதை உறுதிசெய்யும் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்களால் சட்டப்படி பூர்த்தி செய்யப்படவேண்டிய ‘சமூக கவனிப்பு தரங்க’ளை’ (Community Care Standards)ளை அவுஸ்திரேலிய அரசாங்கம் கோடிட்டுக் காண்பித்துள்ளது.
CACP-யினரது கவனிப்பு சேவைகளைப் பெறுவோருக்கு (அல்லது அவர்களதுளை பிரதிநிதிசார்புபடுத்துவோருக்கு) கீழ்வரும் உரிமைகள் உள்ளன:
• மதிப்பிடப்பட்ட தமது சேவைகளைபதேவைகளைப் பூர்த்தி செய்யும் தரமான சேவைகள்;
• இயலக்கூடிய சூழ்நிலைகளில், தாம் விரும்பும் அளவிற்கான சமூக சுதந்திரம்;
• அனைத்து வேளைகளிலும் தமது கௌரவம் மற்றும் அந்தரங்கத்தன்மை ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கப்படல்;
• எப்படிப்பட்ட கவனிப்பு வகைகள் கிடைக்கின்றன என்பது குறித்த தகவல்களையும்,ப் பெறும் வசதி, மற்றும் தெளிவான விருப்பத் தெரிவுகளை மேற்கொள்ளத் தேவைப்படும் விபரங்களளையும் பெறும் வசதி;;
• அளிக்கப்படும் கவனிப்பு குறித்த விபரங்களைப் பெறும் வசதி; மற்றும்
• தமது தேவைகளுக்கு மிகவும் ஏற்ற சேவைத்திட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்றல்.
எனது உரிமைகள் மற்றும் பொறுப்புகள் யாவை?
‘சமூக கவனிப்பிற்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சாசனதம்தை’ (Charter of Rights and Responsibilities for Community Care (the Charter)) எனும் முறைமையை அக்டோபர் 1, 2009 அன்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
முதியோர் கவனிப்பு சேவைகளைப் பெறுவோரது உரிமைகளையும், கவனிப்பு வழங்கும் பணியாளர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை உள்ளடக்கிய அவர்களது பொறுப்புக்களையும் விளக்கிக் கூறும் சட்டப்படியான ஆவணமே ‘சாசனம்’ (the Charter) ஆகும்.
உடல்நலம் மற்றும் மூப்படைவு திணைக்கள(Department of Health and Ageing)த்தினரது இணையதளத்திலிருந்து இந்த ‘சாசன’த்தின் மினஇலத்திரனியல்; பிரதிகளைப் பெறலாம்.
புகார் ஒன்று இருந்தால் என்ன செய்வது?
CACP-யின் ஒரு பகுதியாக வழங்கப்படும் சேவைகள் குறித்து உங்களுக்கோ, உங்களது குடும்பத்தினருக்கோ அல்லது உங்களை சார்புபடுத்துபவருக்கோ சந்தோஷமமகிழ்ச்சி; இல்லையெனில், புகார் செய்யும் உரிமை உங்களுக்குண்டு.
இப்படிச் செய்வதற்கான ஏற்பாடுகளை அவுஸ்திரேலிய அரசு செய்துள்ளது. சேவை வழங்குபவருடன் நீங்கள் பேசிய பிறகும் பிரச்சினைக்குத் தீர்வு இல்லையென்றால் ‘முதியோர் கவனிப்பு புகார் விசாரணை திட்டம்’ (Aged Care Complaints Investigation Scheme) எனும் வசதியை அணுகலாம்.
1800 550 552** எனும் இலக்கத்தில் ‘முதியோர் கவனிப்பு புகார் விசாரணை திட்ட’த்தினருடன் தொடர்பு கொள்ளலாம்.
CACP சேவையினைப் பெறுபவர்களாலும், அவரது குடும்பத்தினராலும் மற்றும் அவர்களை சார்புபடுத்துபவர்களாலும் பரிந்துரைப்பு சேவைகளை (advocacy services)ளை அணுக இயலும். தமக்குள்ள உரிமங்கள் என்ன என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள பரிந்துரை சேவைகள் உதவும். பரிந்துரை சேவைகள் குறித்த தகவல்களைப் பெற 1800 500 853** எனும் எண் மூலம் ‘முதியோர் கவனிப்பு தகவல் இணைப்’பினை அழையுங்கள்.
‘சமூக முதியோர் கவனிப்பு திட்டங்க’ ளுக்கான’ (Community Aged Care Packages)ளுக்கான தள்ளுபடிதநிதியுதவித்; தொகை வீதம் என்ன?
ஓவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் திகதி தள்ளுபடிநிதியுதவித் தொகை வீதம் மாறும். http://www.health.gov.au/ எனும் ‘உடல்நலம் மற்றும் மூப்படைவு திணைக்கள’த்தினரது இணையதளத்திலிருந்தோ அல்லது 1800 500 853** என்ற இலக்கத்தில் ‘முதியோர் கவனிப்பு தகவல் இணைப்’பினை அழைப்பதன் வாயிலாகவோ தற்போதைய நிதியுதவிதள்ளுபடி வீதம் என்ன என்று அறிந்து கொள்ளலாம்.
மறுப்புக்கூற்று (Disclaimer): இந்த ஆவணம் அரசாங்கத்தின் சட்டம் மற்றும் கொள்கைத்திட்டங்களுக்கான ஒரு வழிகாட்டி மட்டுமேயன்றிhகும், மற்றும் தனிநபர் சூழ்நிலைகளை இதனால் கருத்தில் கொள்ள இயலாது. உங்களது குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகுந்த தொழிலர் அறிவுரையை நாடுமாறு அவுஸ்திரேலிய அரசின் ‘உடல்நலம் மற்றும் மூப்படைவு திணைக்களம்’(The Australian Government Department of Health and Ageing) சிபாரிசு செய்கிறது.
தொலைபேசி அழைப்புகளுக்கு ஆகும் செலவு
நில இணைப்புத் தொலைபேசியிலிருந்து செய்யப்படும் அனைத்து 1800 இலக்க அழைப்புகளும் அழைப்பவருக்கு பொதுவாக இலவசமாகும்.
நில இணைப்புத் தொலைபேசியிலிருந்து 13 அல்லது 1300 இலக்கங்களை அழைக்கும்பொழுது அழைப்பவரிடமிருந்து குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒன்று அரவிடப்படும்.
நகரும் தொலைபேசிகளிலிருந்து செய்யப்படும் அனைத்து அழைப்புக்களுக்கும் ஒவ்வொரு சேவை வழங்குநரும் குறிப்பிட்டுள்ள வீதப்படி கட்டணம் அரவிடப்படும்.
பொதுத் தொலைபேசிகளிலிருந்து செய்யப்படும் அனைத்து அழைப்புகளுக்கும் ஒவ்வொரு சேவை வழங்குநரும் குறிப்பிட்டுள்ளதொலைபேசி சேவைக்கும் செல்லுபடியாகும் வீதப்படி கட்டணம் அறவிடப்படும்.
முதியோர் கவனிப்பு தகவல் இணைப்பு (Aged Care Information Line) 1800 500 853 http://www.agedcareaustralia.gov.au/
Ms Sree Vithya Harilingam
CPP Coordinator
(Community Partners Program – Hindi &Tamil)
Tamil – (Inner West & Western Sydney)
Hindi – (Western Sydney)
SydWest Multicultural Services Inc – CALDACS Project
Suite 9, 125 Main St Blacktown 2148
Tel: 02-8825 3739
Fax: 02-9621 4702
E-mail: Sree.VithyaHarilingam@sydwestmsi.org.au
No comments:
Post a Comment