தமிழ் சினிமா

.
* தீபாவளி பந்தயத்தில் ஜெயம் யாருக்கு?

இளையராஜாவின் மனைவி ஜீவா காலமானார்!

01/11/2011
இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி ஜீவா இளையராஜா தனது 60 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திடீர் மறைவு இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது. இவரது இழப்பால் தவிக்கும் இளையராஜாவின் குடும்பதிற்க்கு வீரகேசரி இணையப் பிரிவு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கவின்
நன்றி வீரகேசரி
 
இவரது இழப்பால் தவிக்கும் இளையராஜாவின் குடும்பதிற்க்கு தமிழ் முரசு ஆஸ்திரேலியா ஆசிரியர்குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.





தீபாவளி பந்தயத்தில் ஜெயம் யாருக்கு?

1/11/2011

இம்முறை தீபாவளி பந்தயத்தில் சூர்யாவின் 7ஆம் அறிவு, விஜயின் வேலாயுதம் ஆகிய இரண்டு படங்களே போட்டியில் களம் இறங்கியது.

வழக்கமாக தீபாவளி என்றால் கொலிவூட் களைகட்டும் ஆனால் இம்முறை வெறும் இரண்டு திரைப்படங்களே வெளிவந்தது. ஆரம்பததில் மயக்கம் என்ன, ஓஸ்தி ஆகிய படங்களும் இவற்றுடன் போட்டிக்கு தாயாரானது. ஆனால் 7ஆம் அறிவின் ஆதிக்கத்தால் விஜயின் வேலாயுதமே ஆட்டம் கண்டது பிறகு சிம்பு, தனுஸ் எங்கே களம் நுளைவது.

வெளியான இரண்டு திரைப்படங்களுடன் போட்டிக்கு சிறு பட்ஜெட் படங்கள் கூட இல்லாத நிலையில் சூர்யாவும் விஜயும் மோதிக்கொண்டனர். சூர்யாவின் 7ஆம் அறிவு படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு ஆரம்பத்;தில் வந்த எதிர்மறையான விமர்சனங்களில் விளைவாக களை இழந்தது, இதனால் விஜயின் வேலாயுதம் போட்டியில் முன்னிலை பெற்றது.

இருப்பினும் விஜயின் வேலாயுதம் படத்திற்கும் எதிர் மறையான விமர்சனங்கள் எழுந்ததில் அடுத்த இரண்டு மூன்று நாட்களின் பின்னர் சுதாகரித்துக் கொண்ட 7ஆம் அறிவு திரைப்படம் சிறப்பாக ஓடத்தொடங்கிவிட்டது.

வேலாயுதம் திரைப்படம் ஏ சென்டர் திரையரங்கு ரசிகர்களை வெறுப்பற்றியதால் 7ஆம் அறிவு திரைப்படம் முன்னிலைக்கு வந்தது. மொத்தத்தில் தீபாவளிக்கு திரையிட்ட இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களுக்கிடையே போட்டியின்மையால் தற்போது வரை சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது.

தற்போது ஒரு வார இறுதியில் 7ஆம் அறிவு திரைப்படம் 40.25 கோடி வசூலினை குவித்து பந்தயத்தில முதலிடத்திலுள்ளது. வேலாயுதம் திரைப்படமும் 7ஆம் அறிவுக்கு இணையான வசூலினை ஈட்டிவருவதாக தகவல் வெளியாயின இருப்பினும் அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஆனாலும் விஜய் பத்திரிகையாளர்களை கூட்டி படம் பாரிய வெற்றிபெற்றுள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே எதிர் வரும் நாட்களில் வேலாயுதம் திரைப்படத்தின் உத்தியோகபூர்வ வசூல் நிலைமைகள் வெளியாகலாம்.
ஏ.எம். றிஷாத்
நன்றி வீரகேசரி

No comments: