சிலி எரிமலை வெடிப்பு: அவுஸ்திரேலியாவில் விமான சேவை ரத்து


.

சிலியில் எரிமலை வெடித்து சாம்பல்கள் வான்பகுதியில் பரவி வருவதால் வர்த்தக விமானங்கள் அவசரமாக தரை இறங்கின. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டனர்.

சிலியின் ஆண்டஸ் மலைப்பகுதியில் ஜுன் 4ம் திகதி எரிமலை வெடித்தது. இதன் எரிமலைச் சாம்பல் பரவி வருவதால் அவுஸ்திரேலியாவின் 10 நகரங்களில் இன்று விமானங்கள் அவசரமாக தரை இறக்கப்பட்டன.

எரிமலை சாம்பல் ஆலோசனை மையத்தின் அறிவுரையின் பேரில் விமானங்கள் தரை இறக்கப்பட்டன. சிலி எரிமலை வெடிப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.


எரிமலை சாம்பல் புகை தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி வழியாக பரவி உள்ளது. காண்டாஸ் விர்ஜின் நிறுவன விமானங்கள் நாள் முழுவதும் விமானச் சேவையை நிறுத்தி உள்ளது. அடிலைடு, கான்பெர்ரா, மில்டியுரா பகுதிகளில் விமானச் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

விர்ஜின் விமான நிறுவனம் சிட்னி மெல்போர்ன் பகுதிகளின் விமான சேவையை ரத்து செய்தது. ஜுன் 4ம் திகதி சிலி எரிமலை வெடிப்பு சாம்பல் புகை வான் பகுதியில் 6 மைல் வரை பரவி உள்ளது.

சிலி பகுதி தீ வளையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு அபாயங்கள் உள்ளன.

நன்றி தமிழ்வின்

மேலதிக படங்கள்
No comments: