பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

பாகம் 4


நன்மை:

நான் சொல்வதெல்லாம் உங்கள் நன்மைககாகத்தான். உங்களை தெய்வீகத்தை உணரவைக்கத்தான். எனது செயல்களும், அறிவுரைகளும், ஆழ்ந்த உள்ளர்த்தம் பொதிந்தவை. நமது கல்லு}ரி மாணவர்கள் அனைவரும் வெள்ளை நிற உடையே யூனிஃபார்ம் ஆக அணிகிறார்கள். அதன் உள்ளர்த்தம் என்ன? வெண்மை து}ய்மையைக் குறிக்கிறது. அதைப்போல யாரையாவது காவி உடையில் பார்த்தால் உனக்குத் துறவுநிலை நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் நீங்கள், து}ய்மையானவர்களாக, எல்லா பந்தங்களையும் விட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற செய்தியை அறிவிக்கத்தான். ஏனேனில் அப்போதுதான் உங்களால் தெய்வீகத்தை அடையமுடியும்.
சுமைகள்:


இளைய வயதினராய் இருப்பதால் உங்களுக்கு அதிகமான ஆசைகள் இருக்கின்றன. அதனால் உடலளவிலும், மனத்தளவிலும் துன்பங்கள் ஏற்படத்தான் செய்யும். ஆசைகள் எல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் சுமக்கும் சுமைகள். “குறைந்த சுமை, சுகமான பயணம்”, பயணத்தை இனிமையாக்குகிறது. உங்களது கடைமுடிவான சேருமிடம், உயர்ந்த பேரமைதியின் உறைவிடம், அதாவது பந்தவிடுதலை. அப்படி இருக்கையில் அதிகமான சுமைகளோடு ஏன் அவதிப்படவேண்டும்? தேவையான அளவுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இருந்தாலே போதுமானது. அவற்றை வைத்தே திருப்திப்படுங்கள்.

பிகூhனாம் தேக ரகூhர்த்தம்

வஸ்த்ரம் ஷீத நிவாரணம்

(உணவு உடலைப் போஷிக்க, துணிமணிகள் உடலைப் குளிரிலிருந்து பாதுகாக்க)

இன்றைய நவீன இளைஞர்கள் நாகரிகமான உடைகளை விரும்பி, கண்ணைக்கூசும் வகையில் உடையணிகிறார்கள். இளைஞர்கள், முக்கியமாக யுவதிகள், அத்தகைய உடைகளை அணியக்கூடாது. நீங்கள் அணியும் உடை சிறப்பாகவும், கண்ணை உறுத்தாத வகையிலும் இருக்கவேண்டும். சினிமா கலாசாரத்தைப் பின்பற்றாதீர்கள். பிறரைப் பக்தியோடும் நிறைவேற்றினால், நீங்கள் கேட்காமலேயே அவர் உங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். சபரியும், ஜடாயும் அவர்களது வாழ்க்கையும் இதற்கு உதாரணமாக நிற்கின்றன.

ஓ மனமே எதையும் வேண்டுமெனக் கேட்காதே!

கேட்டால் அது கிடைக்கத் தாமதமாகும்!

கேட்காதே, உனக்கு அது சீக்கிரம் அளிக்கப்படும்!

சபரிக்குக் கேட்காமலேயே இறைவன் தனது கருணையை மழையாகப் பொழியவில்லையா?

ஜடாயு கேட்காமலேயே, அவரது இறுதிச் சடங்கை நடத்தி முக்தி அளிக்க வில்லையா?
தாய்:

ஆகவே, இறைவனிடம் எதையும் நீங்கள் கேட்க வேண்டியதில்லை. உனக்குத்து}ய இதயம் மட்டும் இருக்குமானால், அவரே உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வார். எங்ஙனம் தாய் தன் குழந்தையின் தேவைகளை கேட்மாமலே செய்வாளோ அதைப்போல, குழந்தையைப் போல இருங்கள். தெய்வீகமான இறைவி உங்களைக் கவனித்துக் கொள்வாள். அதுதான் முழுமையான சரணாகதி, சிறிய சிறிய விஷயங்களையெல்லாம் விரும்பிக் கேட்காதீர்கள். ஏனெனில் அவள் அருகாமையைத் தவறவிட்டு விடுவீர்கள். உணவு கேட்பவனுக்கு சமையலறைக்குச் செல்ல வழிகாட்டப்படும். ஆனால் கேட்கத் தெரியாத குழந்தைக்கு தாய் உணவளிப்பாள்.அகங்காரம் உள்ளவரும், இவ்வுலககியல் வாழ்விலேயே ஊறித்திளைப்பவரும்தான் கேட்பார்கள். ஆனால் தெய்வீகத்தாயிடம் அவளது சங்கல்பத்துக்கு அடி பணிந்து சரணாகதி செய்யும் குழந்தை போன்றவன் அமைதியாக வாழ்வான்.

நாட்டியம் ஆடும் நர்த்தகி தனது கால்களையும், கரங்களையும் மிக வேகமாக அசைத்தாலும் அவளது கவனம் முழுவதும் தாளகதியின் மேலேயே இருக்கும். அதுபோல உனது கடமைகளை நிறைவேற்றும் போதும் எண்ணம் முழுதும் இறைவன் மேலேயே இருக்க வேண்டும்.
ஜான்சிராணி:

ஜான்சிராணி லட்சுமிபாயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவளுக்கு ஒரு சிறிய குழந்தைகூட இருந்தது. ஆயினும் அவளுக்கு யுத்த பூமிக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. தனது குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு, கையில் வாளெடுத்து மிகக் கடுமையான யுத்தம் நடத்தினாள். தனது குதிரை மீதமர்ந்து, வீரோதிகளைக் கொன்று தீர்த்தாள். எவ்வாறாயினும், அவளது எண்ணம் முழுவதும், முதுகின் மேல் கட்டப்பட்டிருந்த குழந்தையின் மேலேயே இருந்தது. அதைப்போலவே நீங்கள் உங்களது உலகியல் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எனினும், உங்கள் மனம் முழுதும் இறைவனைப்பற்றியே குவிந்திருக்க வேண்டும். இதைத்தான், “கரங்கள் சமுதாயத்தில் சிரமோ கானகத்தில்” என்ற பழமொழி விளக்குகிறது. எந்த விதமான ஆன்மீக சாதனையையும் நீங்கள் மேற்கொள்ளத் தேவையில்லை. எது செய்தாலும், அதனை இறைவனுக்குச் செய்யும் நிவேதனமாகச் செய்யுங்கள்.

புனிதமான எண்ணங்கள் அமைய, அசைவ உணவு சாப்பிடுவதைக் கைவிடுங்கள். புகை பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள். உணவு, பணம், காலம், சக்தி ஆகியவற்றை வீணாக்காதீர்கள். எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவுக்கு சாப்பிடுங்கள். ஆனால் உணவை வீணாக்காதீர்கள். ஏனெனில் கோடிக் கணக்கானவர்களுக்கு உணவு கிடைக்காமல் அல்லலுறுகிறார்கள். ஓரிஸ்ஸாவைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். மிக மோசமான புயல் தாக்கியதும் அம்மாநில மக்கள் எத்துணை துயரம் அனுபவிக்கின்றனர்? ஒரு கவளம் உணவுக்காகவும் கூட அலைகிறார்கள். உங்களுக்கு வேண்டுமானால் உணவின் மதிப்பு தெரியாதிருக்கலாம். ஆனாலும் அவர்களுக்குத் தெரியும். ஆகவே உணவை வீணாக்காதீர்கள். அன்னம்பிரம்மா.

தொடரும்

No comments: