ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்: அமிதாப் பச்சன்


.
கடந்த 2007 ஏப்ரல் 20 ம் திகதி ஐஸ்வர்யா ராய்க்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் இடம்பெற்றது.

திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடிக்க மாமனார் வீட்டில் சம்மதித்ததைத் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அழகு கெட்டுப் போய்விடும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் டுவிட்டர் தளத்தில் எழுதியிருக்கிறார். அதில், சந்தோஷமான செய்தி, ஐஸ்வர்யா ராய் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் தாத்தா ஆகப்போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானது தொடர்பாக அவர் இதுவரை எதுவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி வீரகேசரி
 
 
 
 No comments: